(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 08 - ஸ்ரீ

Unnodu naanirukkum mani thuligal

நீ மகுடத்தில் வைர கல்லு
நானோ மழ பேஞ்சா உப்பு கல்லு
உன்ன தொடவும் விரல் படவும்
ஒரு பொருத்தம் எனக்கு ஏது
நான் தரமான தங்கக்கட்டி
நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி

என்னை அடைக்க காத்து கெடக்க
உன்ன போல ஆளு ஏது
ஆசைகல் இருந்தா கூட மனம் மசியாது.
ஆத்துல விழுந்தா கூட நிழல் நனையாது
உள்ளுக்குள் உள்ள கிறுக்கு உன்ன சும்மா விடாது

ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி 
ஆசப்பட்டு பூத்திருக்கா வா 
என் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்கா வா

திருமணம் முடிந்து சில முக்கிய விருந்துகளையும் முடித்துவிட்டு அன்று இரவு மலேசியா கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தனர் ஜீவிகாவும் ஜெயந்தும்.

அம்மாடி ஜீவி இந்தா அவனோட ரெண்டு புது ஷர்ட் இங்க இருக்கு பாரு.அதையும் எடுத்து வச்சுக்கோ”

இதோ வரேன் அத்தை..”,என்றவள் அவரிடம் சென்று வாங்கிக் கொள்ள நூறாவது தடவையாய் கூறியிருந்தார்.

ஆனாலும் உன் ப்ரெண்ட்ஸுங்க இவ்ளோ அன்பா இருக்காங்களே.இத்தனை ரூபா செலவுவபண்ண யாருக்கு மனசு வரும்.நீங்க ஊர்ல இருந்து வந்த அப்பறம் கண்டிப்பா அவங்களை வீட்டுக்கு கூப்டு ஜீவிம்மா..விருந்து சாப்பாடே போட்டுருவோம்.”

கண்டிப்பா கூப்டுவோம் அத்தை.ஆனாலும் அவங்க முன்னாடி இப்படியெல்லாம் புகழமாட்டேன்னு சொல்லுங்க அப்போ தான் கூப்டுவேன்.ஏற்கனவே அட்டூழியம் தாங்க முடியாது இதுல நீங்க இப்படியெல்லாம் சொன்னா அப்பறம் அவ்ளோ தான்.”

சரி சரி சொல்ல மட்டேன்..ஆமா மலேசியால இருந்து எனக்கும் மாமாக்கும் என்ன கிப்ட் வாங்கிட்டு வருவ?”

என்ன அத்தை இப்படி கேட்டுடீங்க என்ன வேணும்னு சொல்லுங்க கொண்டு வந்து கொட்டுறேன்.எதுக்கும் உங்க புள்ளையை கார்ட் லோட் பண்ணி வைக்க சொல்லுங்க”

வாலு..இந்த வயசுக்கு மேல எங்களுக்குத் தேவையான கிப்ட் பேரனோ பேத்தியோ தான்.அதுக்கு வழியை பாருங்க..அத விட்டுட்டு ஷாப்பிங் பண்ணி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க புரிஞ்சுதா?”

அத்தை!!!செம கேடி நீங்க எப்படியெல்லாம் போட்டு வாங்குறீங்க..இருந்தாலும் இதைபத்தி உங்க பையன்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு தான் சொல்ல முடியும் அதனால முடிவு தெரியுற வர காத்திருங்கள் அத்தை அவர்களே!”

ஐயோ என்னை விட மோசம் நீ..நானே தயங்கி தயங்கி இந்த பேச்சை எடுத்தேன் நீ என்னனா அசால்டா பதில் சொல்லிட்டு இருக்க..”

பொதுவா இந்த விஷயத்தை எப்படி எடுத்துப்பேனோ தெரில..பட் இந்த நாலு நாள்ல உங்களை பத்தியும் மாமாவை பத்தியும் ஓரளவு புரிஞ்சுகிட்டேன்.இவ்ளோ ஈசி கோயிங் இன் லாஸ் அமையுறதெல்லாம் ரொம்ப ரேர் அத்தை.நீங்க விளையாட்டா சொன்னீங்க நானும் அதுக்கு பதில் சொல்லிட்டேன்.

மத்தபடி நடக்க வேண்டியது அந்தந்த நேரத்துல அதுவா நடக்கும் அத்தை.என்ன நான் சொல்றது?”

வாயாடி என் செல்லம் போல ஒரு மருமக வந்துருக்க..ஜெய்ந்துக்கு பொண்ணே அமையலயேனு எவ்ளோ வருத்தப்பட்டுருக்கேன் தெரியுமா?ராஜாத்தி நீ வந்து எங்க வீட்டை அழகாக்கணும்னு இருந்துருக்கு.உன் நல்ல மனசுக்கு நல்லா இருப்ப டா ஜீவிம்மா..போ போய் பேக்கிங் வேலையை பாரு”,என்றவர் திருஷ்டி கழித்து அவளை அனுப்பினார்.

தனதறைக்கு வந்தவளை பின்னிருந்து அணைத்தவனாய்,”என்கிட்ட எதோ டிஸ்கஸ் பண்ணணும்னு சொல்லிட்டு இருந்தமாதிரி இருந்துதே என்ன அது?”

ஐயோ கேட்டீங்களா சும்மா அத்தையை கிண்டல் பண்றதுக்காக சொன்னேன் வேற ஒண்ணுமில்ல.”,என்றவள் அமைதியாக அவளை மெதுவாய் தன்புறம் திருப்பியவன் குனிந்து அவளை ஏறிட்டான்.

நிஜமாவே நீ ஒரு ஒரிஜினல் பீஸ் ஜீவி..உனக்கு சப்ஸ்ட்டியூட்டே கிடையாது.”

அடப்பாவி சூப்பர் மார்கெட் அமைதியா இருந்துட்டு என்னையே கலாய்க்குறீங்களா?”

ம்ம் பின்ன நாளு நாள் சகவாசத்துக்கே நானும் உன்னை மாதிரி ஆய்ட்டேன்னா பாரு..”

வர வர எல்லாரும் ஜீவியா மாறிட்டு வரீங்க..ம்ம் பாத்துக்குறேன்.”

சரி பேச்சை மாத்தாத சொல்லு..உன் மாமியார் முதல் முறையா உன்கிட்ட ஒரு கிப்ட் கேட்டுருக்காங்க குடுக்காம இருந்தா நல்லாயிருக்குமா?”

அடடா என்ன ஒரு அக்கறை..இந்தபக்கத்து இலைக்கு பாயாசம் கேக்குற வேலையெல்லாம் இங்க வேணாம்..”

இதைவிட டரக்ட்டா கேக்குறதுக்கு நா ரெடிதான் உனக்கு பிரச்சனையில்லனா..”

ஐயா சாமி ஆளை விடுங்க நா போய் பேக்கிங் முடிக்குறேன்.”

ம்ம் மத்ததுக்கு மட்டும் வாய் இங்க இருந்து வடக்கும் தெற்குமா போகுது..இப்போ எப்படி ஓடுறா பாரு..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.