(Reading time: 10 - 20 minutes)

கட்டிலின் மறுபுறம் நின்றிருந்தவள் குரல் தாழ்த்தி அவனிடம்,”சிறுத்தை பதுங்குவது பாய்வதற்காக கூட இருக்கலாம் மங்குனி அமைச்சரே!”,என்று சீரியஸாய் கூற அடிப்பாவி என்றவாறே அவளை நோக்கி ஓடினான் ஜெயந்த்.

ஜீவிகா தேனிலவிற்கு சென்று நான்கு நாட்கள் கடந்திருந்த நிலையில் ஆத்விக் தனதறையில் கட்டிலில் படுத்து ஏதேதோ யோசனையில் இருந்தான்.

அன்று பேசியதற்குப் பின் ஷான்யா அவனிடம் முகம் கொடுத்து பேசவேயில்லை.வேலை சம்மந்தமாக மட்டுமே வாய்திறந்தாள்.ஜீவிகாவிடமோ ரேஷ்வாவிடமோ இதைப் பற்றி எதையும் கூறத் தோன்றாமல் தனக்குள்ளேயே சிந்தனையில் உழன்றான்.

ஏனோ அன்று அலுவலகம் போகத் தோன்றாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தவன் மதியத்திற்கு மேல் கிளம்பி மாலிற்குச் சென்றான்.ஏனோ ஜீவிகாவை அளவுக்கு அதிகமாகவே மிஸ் செய்வதாய் தோன்றியது.இதுதான் எதார்த்தம் என்றாலும் கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளில் முதன்முறையாய் தனிமையை உணர்வதாய் தோன்றியது ஆத்விக்கிற்கு.

சரியாய் அந்த நேரம் ஜீவி அவனுக்கு அழைத்திருந்தாள்.அவனுக்கே ஆச்சரியம் தாளவில்லை.ஆர்வத்தோடு அழைப்பை ஏற்றவன்,

ஜி சொல்லு எப்படி இருக்க ட்ரிப் எப்படி இருக்கு?”

ஆசம் ஆசம்..சசரி சொல்லு நீ நல்லாயிருக்கியா?”

சூப்பரா இருக்கனே..ஏன் உன்னை பார்க்காம துரும்பா இளைச்சு போய்டுவேன்னு நினைச்சியா?”

இந்த வாய் மட்டும் இல்ல உன்னை நாய்குட்டி தூக்கிட்டு போய்டும்.டேய் உன்னைபத்தி எனக்குத் தெரியாதா சொல்லு எதாவதுமூட் அவுட்ல இருக்கியா?”

அப்படியெல்லாம்..அது மிஸ் யூ ஜி..”

டேய் லூசு என்னடா ஆச்சு என் இப்படி பேசுற?”

ஒண்ணுமில்ல ஜி இப்போ ஐ அம் ஓ.கே..உன்கிட்ட பேசினதே பெட்டரா இருக்கு..நீ என்ஜாய் பண்ணு மச்சானை தவிக்க விட்டுட்டு என்ட்டமொக்க போட்டுட்டு இருக்க..”

அவரே நா போடுற மொக்க தாங்காம எப்போ ஜீவிம்மா என்னை என் அம்மாகிட்ட கூட்டிட்டு போவனு கதறிட்டு இருக்காரு டா..பயபுள்ளைக்கு நம்மளை சமாளிக்குற அளவு திறமை பத்தல டா”,அதற்குள் பின்புறம் ஜெயந்தின் குரல் கேட்க..

சும்மா பேசிகிட்டு இருக்கேன் மாமா..”,என்று அவள் கூறியதும் ஆத்விக் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான்.

இப்படியே சிரிச்சுட்டு இருப்பியாம் இன்னும் ரெண்டே நாள்ல நா ஓடி வந்துருவேனாம்.அப்பறம் நாம சேர்ந்து உன் ஷான்யாவை ஒரு வழி ஆக்குறோமாம் ஓ.கே வா?”

எப்படி ஜி???”

உன்னைப் பற்றி அனைத்தும் யாம் அறிவோம் குழந்தாய்.மொசப் புடிக்குற நாயை வாய்ஸை கேட்டா தெரியாதா..போடா போடா ஓவர் பீலிங் உடம்புக்கு ஆகாது.முடிஞ்சா போய் அவ முன்னாடி சோக கீதம் வாசிச்சு பாரு எதாவது நல்லது நடக்கும்.வைக்குறேன் டா பை..”

அழைப்பைத் துண்டீத்தவனுக்கு மனம் அப்படியாய் ஒரு உற்சாகத்தை அடைந்திருந்தது.அவள் கூறியது போலவே ஒரு முடிவோடு எழுந்தவன் உற்சாகமாய் அலுவலகத்தை நோக்கிச் சென்றான்.

அங்கு ஷான்யா அவள் அறையில் அமர்ந்து ஏதோ சிந்தனையில் இருக்க அந்த நேரத்தில் அவனை அங்கு எதிர்பாராதவளாய் ஒரு நொடி திகைத்தவள் பின் முகத்தை சீராக்கிக் கொண்டு அவனது அறைக்குச் சென்றாள்.

இன்னைக்கு எதாவது மீட்டிங் ஆர் ப்ரோகிராம்?”

இல்ல சார் நீங்க வராததுனால் எல்லாமே கன்சல்..”

நா வரலனா அப்படியே ஒரேடியா போய்டுவேனா கால் பண்ணி கேட்க மாட்டீங்களா?வராத வரை சந்தோஷம்னு அப்படியே விட்டுருவீங்க இல்ல?”

சட்டென கண்களில் நீர் கோர்த்திருந்தது ஷான்வியாவிடம்.சேகர் சார் தான் நீங்க வரமாட்டீங்கனு சொன்னாரு..

சாரி எதோ டென்ஷன்ல பேசிட்டேன்..நீங்க போய் வேலையை பாருங்க”,என்றவனை ஓரப் பார்வை பார்த்துவிட்டு திரும்பி நடந்தவளை ஆழ்குரலில் அழைத்தான்.

ஷான்யா ஒரு நிமிஷம்!”

??”

ஐ அம் சாரி எதோ டென்ஷன் அதான் அப்படி பேசிட்டேன்.”

பரவால்ல சார் நீங்க பாஸ் நா எம்ப்ளாயி இதெல்லாம் சாதாரணம் தான்.”

ஏன் ஷான்யா புரிஞ்சுக்க மாட்ற..இல்ல புரிஞ்சுக்காத மாதிரி நடிக்குற..”

நீங்க தான் ஆத்விக் புரிஞ்சுக்க மாட்றீங்க..என்னால யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாதுனு தான் விலகிப் போறேன் அது ஏன் உங்களுக்குப் புரில?”

என்ன சொல்ல வர்ற?”

ஆழ்மூச்செடுத்தவளாய்,”பொதுவா என் தனிப்பட்ட விஷயங்களை நா யார்கிட்டேயும் ஷேர் பண்ணிக்க விரும்ப மாட்டேன்.ஆனா உங்க நல்லதுக்காக சொல்றேன்.என் அக்கா ஒரு பையனை உயிருக்கு உயிரா காதலிச்சா காலேஜ் படிக்கும்போது இருந்து அஞ்சு வருஷம் இரண்டு பேரும் அவ்ளோ ஸ்ட்ராங்கா இருந்தாங்க.

ஆனா வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சப்போ என் அக்காவால என் அப்பாவை எதிர்த்து ஒண்ணுமே பண்ண முடில.வெறும் எமோஷனல் ப்ளக் மெயில்ஸ்.கடைசியா அந்த பையனை எதாவது பண்ணிடுவோம்னு சொன்னாங்க.

எந்தளவு அந்த பையனை விரும்பினாளோ அதே அளவு அவனை விட்டு பிரிஞ்சு வந்தா.ஆனா அவ கல்யாணத்துக்கு முந்தின நாள் அழுத அழுகை என் வாழ்க்கைல நா மறக்கவே மாட்டேன்.

வெறும் ஜடம் மாதிரி தாலி கட்டிகிட்டா..ஆனா அந்த பையன் இரண்டு தடவை சூசைட் அட்டெம்ட்..இன்னமும் கல்யாணம் பண்ணிக்கல.எல்லாரும் ஈசியா சொல்லிடுவாங்க அந்த பொண்ணு ஏமாத்திட்டா..அவ தான் இவனோட இந்த நிலைமைக்கு காரணம்னு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.