Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 07 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes
Pin It

தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 07 - சசிரேகா

Unnaiye thodarven naane

ரோடு நோக்கிய கார் பயணத்தில்

மாசிஎன கத்தினான் சரவணப்பெருமாள்

என்ன அண்ணா என்னாச்சிஎன பதட்டமாக கேட்க அவனோ கோபமாக கத்தினான்.

ஃபோன்ல பேட்டரி சார்ஜ் போயிடுச்சிடா பாரு, சுவிட்ச் ஆப் ஆயிடுச்சிஎன கத்த அதைக்கேட்டு இயல்பாக மாசி

அவ்ளோதானே இதுக்கு ஏன் கத்தறீங்கஎன பேச அதற்கு சரவணனோ

டேய் அவள் கேட்ட கேள்வி ரொம்ப முக்கியமானது. இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லலைன்னா அவள் என்னைப்பத்தி தப்பா நினைப்பாடா

அப்படி என்ன கேள்வி கேட்டாங்க

கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு பாட்டு போச்சில்ல அவளும் நானும்னு

ஆமாம் எப்எம்ல அதுக்கென்ன இப்ப

அதை வைச்சி நான் சொன்னேன் அதுல வர்ற அவள் யார்ன்னு கேள்வி கேட்டேன் அதுக்கு அவள் தெரியாதுன்னு சொல்லி பதில் கேட்டா

சொல்ல வேண்டியதுதானே நீதான்னு

அதுக்குள்ள ஃபோன் சுவிட்ச் ஆப் ஆயிடுச்சி, சரி பரவாயில்லை வண்டியில கூட சார்ஜ் போடலாமே வயர் எங்கஎன கேட்க அதற்கு மாசியோ வழிந்தபடியே

சாரி அண்ணா மறந்துட்டேன் கொண்டு வரலைஎன சொல்ல சரவணனுக்கு கோபமே வந்து கொந்தளித்தான்.

டேய்என கத்த உடனே மாசி சரண்டர் ஆனான்.

சாரிண்ணா அவசரத்தில மறந்துட்டேன்

சரி உன் ஃபோன் கொடு அவள் ஃபோன் நெம்பர் என் மனசுல இருக்கு, அவளுக்கு ஃபோன் பண்ணியே பேசிடறேன்என சொல்ல மாசியோ தயங்கியபடியே

அண்ணா என் ஃபோன் காலையிலயே சுவிட்ச் ஆப் ஆயிடுச்சிண்ணாஎன சொல்ல நொந்துப் போய் தலையில் அடித்துக் கொண்டான் சரவணன்

போடா டேய் அந்த பஸ்ஸை ஓவர் டேக் பண்ணி நிப்பாட்டு நான் நேராவே அவள்ட்ட பேசிடறேன்என சொல்ல அவனோ அலறினான்.

அண்ணா வேணாம்ணா, குடும்பமா பஸ்ல போறாங்க, நீ எதையாவது செஞ்சி அண்ணிக்கு அவமானமாயிடப் போகுது

இப்ப என்னடா செய்றது

இருண்ணா எப்படியும் ஏதாவது கடையில ஓட்டல்ல இறங்குவாங்க, அப்ப பேசிக்கலாம்என சொல்ல அவனோ

ம்ஹூம் கடைக்கு போனாலும் அவளைச் சுத்தி ஆளுங்க இருப்பாங்க, வேலைக்காகாது நீ ஒண்ணு பண்ணு கடை பேர் தான் தெரியுமே, பஸ்க்கு முன்னாடி வண்டி ஓட்டு போற வழியில டெலிபோன் பூத்ல பேசறேன்என அவன் ஆத்திரப்பட

அண்ணா வேணாம் ஆத்திரத்தில எந்த முடிவும் எடுக்க வேணாம், கை கெட்டற தூரத்தில அண்ணியிருக்காங்க, ஃபோன் சுவிட்ச் ஆப் ஆச்சின்னு சொன்னா அவங்க தப்பா நினைக்கமாட்டாங்க, கொஞ்சம் இருண்ணா ஈரோடு கூட வந்தாச்சி. இனி கடைக்குதானே போகனும் கடையில அண்ணியை மடக்கி பேசிடலாம்என வழி சொல்ல சரவணனோ கோபமாக முறைத்தான்.

எதுஎன கத்த

சரி நீங்க மட்டுமே பேசுங்க நான் வரலை போதுமாஎன சொல்லியவன் பஸ்ஸை பாலோ செய்யலானான்

சரியான பஸ்டா சாமி, டேய், கூட்டமே இல்லை ரோடுல ஸ்பீடா போறானான்னு பாரு

அவன் 80 கிலோ மீட்டர் தாண்டமாட்டான்

ஏன் அப்படி

ம் என் பொண்டாட்டி சொல்லியிருக்கா, அவள் ரெடி பண்ண புக்ல அப்படித்தான் எழுதியிருக்கு,

அண்ணா அண்ணியை நினைச்சாலே பக்குங்குது

ஏன்டா

பின்ன எல்லா விசயத்துக்கும் இப்படி கரெக்டா இருக்காங்களே, ஏன் கல்யாணத்தப்ப மட்டும் தப்பாயிடுச்சி

அது அவள் தப்பில்லை, என் தப்பு, என் தப்புகூட இல்லை, உன் தப்புதான், அன்னிக்கு, என்னை இழுத்து தப்பான இடத்தில உட்கார வைக்காம இருந்திருந்தா இந்நேரம் அவளுக்கு பார்த்த மாப்பிள்ளையோட கல்யாணம் ஆயிருக்கும்

சரி ஆனா, அந்த கல்யாணம்தான் செல்லாதுன்னு சொல்லிட்டாங்களே, அப்புறம் எதுக்கு 1 வருஷம் இப்படியே அண்ணி கல்யாணம் ஆகாம இருக்கனும், சட்டுன்னு ஏற்கனவே பார்த்த பையனை வைச்சி கல்யாணம் முடிச்சிருக்க வேண்டியதுதானே ஏன் விட்டாங்கஎன சொல்ல சரவணன் அதைக்கேட்டு குழம்பியபடி மாசியிடம்.

தெரியலை மாசிஎன்றான்

அண்ணா எனக்கென்னவோ தப்பா படுது, எதுக்கும் அண்ணியோட அப்பன்கிட்ட ஒரு வார்த்தை கேட்கறது

About the Author

Sasirekha

Sasirekha

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 07 - சசிரேகாsasi 2019-05-07 08:22
ஹாய் ஆதர்வ் காலை வணக்கம் எந்த டெஸ்ட்டும் இல்லை எந்த puzzleம் இல்லை துணிக்கடை போட்டோ தேடி கிடைக்கலை அதான் கிடைச்சதை போட்டேன். சாரி சரவணன் மாதவி இந்த ரெண்டு பேர் மனசுல ஆழமான காதலை விதைக்கலாம்னு முயற்சி செய்றேன் அது அங்கங்க சொதப்பிடுது சாரி அடுத்த வாரம் ஊட்டியில மீட் பண்ணலாம் ஆதர்வ், காதலோட ரொமான்ஸ் கலந்து கதை இருக்கும் கண்டிப்பா ஊட்டியில நீங்க எதிர்ப்பார்க்கற எதிர்பார்க்காத அனைத்தும் நடக்கும். ஏதாவது சொதப்பினா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க ப்ளீஸ்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 07 - சசிரேகாAdharvJo 2019-05-07 10:55
Hi sasi ma'am, unga kitta sorry deposit irukku pola :D Nanga story padichi ena thonudho appadiye express seivom thats all...ninga sollura imbuttu sorry parthu nanga sorry solliduvom pole irukku :lol: so you don't have to feel sorry.... :cool:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 07 - சசிரேகாராணி 2019-05-06 19:31
துணிக்கடை சம்பவம் சூப்பர் மாதவி கடையில் கையாண்ட விதம் அருமை தவறாக புரிந்துக் கொண்ட சரவண பெருமாளின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 07 - சசிரேகாsasi 2019-05-07 07:58
Quoting ராணி:
துணிக்கடை சம்பவம் சூப்பர் மாதவி கடையில் கையாண்ட விதம் அருமை தவறாக புரிந்துக் கொண்ட சரவண பெருமாளின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்?

நன்றி ராணிம்மா
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 07 - சசிரேகாvijayalakshmi 2019-05-06 19:19
good sasi romba interestina kadhai poguthu next enna aachonu manasula thona vaikuthu nice
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 07 - சசிரேகாvijayalakshmi 2019-05-06 19:18
good sasi romba interestinga kadhai poguthu next enna aachonu manasula thona vaikuthu nice
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 07 - சசிரேகாsasi 2019-05-07 07:59
Quoting vijayalakshmi:
good sasi romba interestinga kadhai poguthu next enna aachonu manasula thona vaikuthu nice

தாங்ஸ் விஜி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 07 - சசிரேகாAdharvJo 2019-05-06 14:24
Patience irukka illayanu test panuringala ji :Q: 10 page parthu I anticipated at least one part of the puzzle would be solved...emathitingale!! instead confusions increase panitte poringale :o

Etho big shop nu solluringa photo partha rombha small irukke pakathu kadai photo eduthitingala :P

As always interesting & entertaining update ma'am :clap: :clap: made for each other couple pole irukkanga, Yapppa!! :D Ivanga rendu perum meet panura sequence ellam nala thaan irukku but what is the use..clarify panuradhukula escape agiduranga madhavi facepalm adutha vaaramavdhu ethavdhu changes irukanu padika waiting :yes: thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 07 - சசிரேகாதீபக் 2019-05-06 09:46
nice episode sis :clap: ..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 07 - சசிரேகாsasi 2019-05-07 08:02
Quoting Deepak:
nice episode sis :clap: ..

thanks deepak :dance:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 07 - சசிரேகாmadhumathi9 2019-05-06 09:15
:clap: nice epi.maadhavi super thaan. Kanakku panniyathaal ethanai per panam thirumba kidaithirukku :clap: :clap: saravanan thappa purinthu kondullathai yaar puria vaippargal.sundariya? :thnkx: 4 this epi. (y) :GL: sasi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 07 - சசிரேகாsasi 2019-05-07 08:22
Quoting madhumathi9:
:clap: nice epi.maadhavi super thaan. Kanakku panniyathaal ethanai per panam thirumba kidaithirukku :clap: :clap: saravanan thappa purinthu kondullathai yaar puria vaippargal.sundariya? :thnkx: 4 this epi. (y) :GL: sasi.

ஹாய் மதுமதி காலை வணக்கம் சுந்தரி எதுக்கு மது மத்தவங்க எடுத்துச் சொன்னாலும் தாங்களே தங்கள் உறவுகள் மேல நம்பிக்கையும் மதிப்பும் வைச்சிருந்தா கண்டிப்பா சரவணனும் மாதவியும் ஒண்ணு சேருவாங்க ஆனா அது இப்ப இல்லை மது சாரியா கொஞ்ச நாள் அவங்களும் காதலிக்கட்டுமேன்னு நினைக்கிறேன் நான் நினைச்சது சரியா தப்பான்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top