தொடர்கதை - சிவகங்காவதி - 12 - ஸ்ரீ
“சிறுவெண்காக்கைப் பத்து
நெய்தல் நிலக் கருப்பொருள்களில் ஒன்று சிறுவெண் காக்கை. இக்காக்கை இடம் பெறவும் அதன்வழி உட்பொருள் விளங்கவும் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி சிறுவெண்காக்கைப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்
பயந்துநுதல் அழியச் சாஆய்
நயந்த நெஞ்சம் நோய்ப்பால் அஃதே!- (161)
(கருங்கோடு = கரிய கிளை; புன்னை = புன்னை மரம் ; பயந்து = பசந்து; நுதல் அழிய = நெற்றி ஒளி மங்க; சாய் = மெலிந்து; நயந்த = விரும்பிய; நோய்ப்பாலஃது = நோய்வாய்ப்பட்டது)
என்ற பாடலில் தலைவன் ஒருவழித்தணந்த வழி, தலைவி ஆற்றாமை மிக்கு உரைக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் சிறுவெண் காக்கை வழி உள்ளுறை ஒன்றும் வெளிப்பட்டுள்ளது. (ஒருவழித் தணத்தல் - அலர் அடங்குவதற்காகத் தலைவன் சில நாட்களுக்குத் தலைவியைக் காண வாராதிருத்தல்)”
அவளின் எதிர்ப்பை எதிர்பார்த்தவனுக்கு இந்த ஆத்திரம் சற்று வியப்பை தான் அளித்திருந்தது.
“யா அல்லாஹ்!!!எதற்காக இப்போது இத்துனை கோபம்?”
“தங்களுக்கு காரணம் தெரியாதா?”
“தெரியாததால் தான் கேட்கிறேன்.என் மனைவியை தொடுவதில் ஏதேனும் பிழை இருக்கிறதா என்ன?”
“நிச்சயமாய் இல்லை தான் ஆனால் அதற்கு நான் தங்களை மனமாற கணவராய் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.அப்படி இல்லாத வரையில் என்னைத் தொடுவதும் ஒரு பெண்ணை பலவந்தப்படுத்தி தொடுவதற்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை”
“கங்கா!!!”
“சிவகங்காவதி!!”
ஆழ் மூச்செடுத்தவன் சற்றே தன்மையாய் அவளிடம்,”யாருக்கு எப்படியாயினும் எனக்கு நீ கங்கா தான்.இன்னொன்றையும் மறந்து விடாதே உனக்கு பிடித்து நடந்த திருமணமோ இல்லையோ நடந்த திருமணம் பொய்த்து போவதில்லை.ஆகவே இனியொரு முறை கணவனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கத் தவறிவிடாதே!
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
குருராஜனின் "எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
அதே நேரம் உன் விருப்பமின்றி கணவன் என்ற உரிமையை நிலைநாட்ட வேண்டிய அவசியமும் எனக்கில்லை புரிந்ததா?நாளை காலை நம்மிடத்திற்கு புறப்பட வேண்டும்.தேவையற்ற சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு உறங்கு.”
அப்போதும் அவள் அப்படியே அமர்ந்திருக்க அதை பார்த்தவனோ,”யாரோ ஒருவனாய் இருந்த போது ஏற்பட்ட நம்பிக்கை கூட தற்போது கணவன் என்றானவனிடத்தில் இல்லையா?”
“இல்லை நிச்சயமாய் இல்லை.தங்கள் மீதான என் நம்பிக்கையை ஆணி வேரோடு பிடுங்கி எறிந்து வெகுநேரம் ஆகிவிட்டது.உண்மையை கூற வேண்டுமானால் தங்களிடமிருந்து இப்படி ஒரு செயலை கனவிலும் நான் எதிர்பார்க்கவில்லை.
என் மீது ஏன் இத்துனை வன்மம் நான் அப்படி என்ன துரோகம் இழைத்தேன் தங்களுக்கு?உண்மையை கூற வேண்டுமானால் என் வாழ்வில் சந்தித்த மிகச் சிறந்த மனிதராய் தங்களை எண்ணி இருந்தேன்.இப்போது..”
“இப்போது??இப்போது என்னவாயிற்று அதன் நிலை?”
“ம்ம் உலகிலேயே அதிகமாக நான் வெறுக்கும் ஒருவராய் உங்களைத் தான் நினைக்கிறேன்.ஏன்..ஏன் பொய்த்து வீட்டீர்கள்.ஏன் என் மனதை ரணப்படுத்திவிட்டீர்கள்!!”,என்றவளுக்கு விழிகள் குளமாக முகத்தை திருப்பிக் கொண்டு தன்னை சரிசெய்தாள்.
கேட்டு கொண்டிருந்தவனுக்கோ மனம் முதன்முறையாய் ஏமாற்றத்தை உணர்ந்தது.தான் உயிராய் நினைப்பவள் தன்னைப் பற்றி இவ்வாறு எண்ணுவதற்கு சூழ்நிலையை உருவாக்கி விட்டோமே இருப்பினும் இப்போது இவ்வாறு பேசும் இவள் நான் இவளின் சம்மதம் வேண்டி நின்றிருந்தால் ஒப்புக் கொண்டிருப்பாளா?
நிச்சயம் மாட்டாள் அப்படியிருக்க நான் செய்வதில் ஒன்றும் தவறில்லை தான்.”,என்று தனக்குள் முடிவெடுத்தவனாய் விழி மூடி நின்றிருந்தான்.
சிவகங்காவதிக்கோ அயர்வாய் இருந்தது.ஒரே நாளில் வாழ்க்கை எப்படி மாறிப்போனது.இவையனைத்தையும் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் நடந்த எதையும் மாற்ற முடியாது.அதுமட்டுமன்றி தன் கழுத்தில் இருந்த திருமாங்கல்யத்தை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு ஓர் எண்ணம்,இதை இந்த நஸீம் அன்றி வேறு யாரேனும் இக்காரியத்தைச் செய்திருந்தால் இவளால் ஏற்றிருக்க முடியுமா?
ரத்தன்சிங்கிற்காக எனினும் எதிர்த்து போர் புரியவே துணிந்திருப்பாளேயன்றி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்க மாட்டாள்.இந்த எண்ணம் தான் இவளை வெகுவாய் குழப்பியிருந்தது.அதன் தாக்கத்திலேயே அவனிடம் தன் மனபாரத்தை கோபமாய் கொட்டித் தீர்த்திருந்தாள்.