(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 08 - குருராஜன்

Enakena yerkanave piranthavan ivano

ந்த வாரம் வெள்ளி மாலை நல்ல நேரம் இருப்பதால் அதற்கு மேல் தாமதம் செய்யாமல் இரு குடும்பத்தாரும் நேரில் பார்த்துப் பேசிக் கொள்வது என்றும் அதற்காக கபாலீஸ்வரர் கோவில் இடமாகவும் தேர்வு ஆனது.

இரு வீட்டாருக்கும் மகிழ்ச்சியில் இருந்தனர்.அதே சமயத்தில் தங்கள் பிள்ளைகளை இந்த சந்திப்பிற்குச் சம்மதிக்க வைப்பது என்று சிறிய தயக்கமும் கூட.

அன்று மாலை சிறிது சீக்கிரமாகவே ரகு வீட்டிற்கு வந்தான். அவன் வந்து சற்று ஆசுவாசம் செய்துவிட்டு டீவி முன் அமர்ந்து sun music channelஐ மாற்றி விட்டு அமர்ந்தான்.

ரகு நாளை மாலை நீ free ah இருக்கியாபேச்சைத் தொடங்கினார் பானுமதி.

சொல்ல மறந்துட்டேன் மா. நாளைக்கு சங்கர் சாரோட புது பட photoshoot. ஸோ நாளைக்கு நைட் வீட்டுக்கு lateஆ தான் வருவேன்என்று பதில் அளித்தான் ரகு.

என்னடா இது ஆரம்பமே இப்படி இருக்கு, இப்போ என்னங்க பண்றது என்பது போல் நாகராஜனைப் பார்த்தார் பானுமதி.

நாளைக்குனா காலையில் இருந்தே வேளையா பாஎன்றார் நாகராஜன்.

உங்களுக்குத்தான் தெரியுமே பா, அவர் பட shoot எல்லாம் evening தான் இருக்கும். ஸோ eveningதான் பா வேளை. 6.30 மணிக்கு start பண்ற மாதிரி இருக்கும்என்றான் ரகு.

இருவருக்கும் ஓரளவுக்கு நிம்மதி.

“6.30 மணிக்குத்தானே, அப்போ நாளைக்குச் சாயங்காலம் ஒரு 5 மணிக்கு நாம கபாலீஸ்வரர் கோவில் வரைக்கும் போயிட்டு வந்திடலாம் ரகுஎன்றார் நாகராஜன்.

கோவிலுக்கா, எதுக்கு பா. நான் செட்ல 6 மணிக்கு எல்லாம் இருக்கனும். Photoshootக்கு முன்னாடி கொஞ்சம் preparation எல்லாம் இருக்கு பாஎன்றான்.

ரகு நான் சுத்தி வலைத்து பேச விரும்பவில்லை. நாங்க சொன்னோம் இல்ல வெண்ணிலா நு அந்த பொண்ணு பற்றி. பொண்ணு B.E முடிச்சிட்டு architech ah வேளை செய்து. நாங்க தெரிந்தவர்கள் மூலம் விசாரிச்சோம், நல்ல பொண்ணு நல்ல குடும்பம். அது மட்டும் இல்ல நாங்க பேசின வரைக்கும் எங்களுக்கும் அப்படி தான் தோனுது.” என்று சற்று நிருத்தி ரகுவின் முகத்தைக் கவனித்தார். அதில் எந்த ஒரு அசைவும் இல்லை.

அவங்களுக்கும் நம்ம சம்பந்தம் ரொம்ப பிடிச்சிருக்கு. அதனாலஎன்று சற்று இழுத்து விட்டுஅதனால ரெண்டு குடும்பமும் ஒரு முறை சந்திக்கலாம். நீயும் இன்னும் போட்டோ கூட பார்க்கல. அதனால நேரிலேயே பார்த்து பேசினா உங்க ரெண்டு பேருக்கும் ஒரு புரிதல் வரும் இல்ல. அதனால் தான்என்று முடித்தார் நாகராஜன்.

அப்பா கொஞ்சம் பொறுமை, slow down please. விட்ட நாளைக்கே கட்டுடா தாளிய நு சொல்லி கையோட கூப்பிட்டுட்டு வந்துடுவீங்க போலஎன்றான் ரகு.

இல்ல பா அதற்கு வாய்ப்பு இல்லை. நாளை முகுர்த்தம் காலையிலேயே முடிஞ்சிடுது. நாம evening தானே போறோம்என்று கிண்டலாகப் பதில் கூறினார் பானுமதி.

அம்மாஎன்று முறைத்தான் ரகு.

அப்புறம் என்ன ட. பொண்ணு பார்த்துருக்கோம் நு சொன்னா shock ஆகுற, பொண்ண நேரில் பார்க்க போலானு சொன்னா shock ஆகுற. நீ சரி நு சொல்லி, 5 வருஷத்துக்கபரம் தான் நாங்க பொண்ணு பார்ப்போம் நு நினச்சியாஎன்றார் பானுமதி.

எதுவும் பேசாமல் அமைதியா இருந்தான் ரகு.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

கல்யாணம் என்றால் இது எல்லாம் இருக்கும். நாளைக்கு நீ வரியா இல்லையா அதுதான் பேச்சுஎன்று கராராக பேசி நிறுத்தினார் பானுமதி. தன் மனைவிக்கான பேசும் இடத்தை கொடுத்து அமைதியாக இருந்தார் நாகராஜன்.

அவன் தாய் அப்படி கராராகப் பேசி ரகு பார்த்ததில்லை. அதிர்ச்சியோடு அவரை பார்த்துக் கொண்டு இருந்தான். சிறிது நேரம் அந்த இடத்தில் வெறும் அமைதி மட்டும்தான்.

சரிங்க மா, நான் வரேன். But நான் 5.30கெல்லாம் கிளம்பிடுவேன். அப்போ கிளம்பினாதான் நான் traffic la அண்ணா நகர் shootக்கு போய்ச் சேர சரியா இருக்கும்என்றான் ரகு.

முதல நீ வா மத்ததை அப்புறம்ப் பார்த்துக் கொள்ளலாம் என்று மனதில் நினைத்துக் கொண்டு நாகராஜனும் பானுமதியும் சரி என்று தலையாட்டினர். இருவரும், அடுத்து வேறு எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்று அவர் அவர் வேளையைப் பார்க்க தொடங்கினர்.

என்ன நடந்தது என்று வியப்போடு அங்கேயே கல்லாய் உட்கார்ந்து இருந்தான் ரகு.

நிலா வீட்டில்.

மாலை வழக்கமான நேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் நிலா. வீட்டிற்குள் நுழையும் போதேஅம்மா பசிக்குது எதாவது சாப்பிடக் கூடுமாஎன்று உணவு கேட்டுக் கொண்டே நுழைந்தாள்.

ஏன் டி ஏலம் விட்டுக்கிட்டே வர. Dress மாத்தி, கை கால் அலம்பிட்டு வா, டிபன் தரேன்என்றார் சிவகாமி.

சொல்ல மம்மிஎன்று அவர் கண்ணத்தைக் கில்லிக் கொண்டு இருக்கும் போதே வேளையில் இருந்து வந்த சங்கர் வீட்டினுள் நுழைந்தார்.

என்னமா நிலா, இப்போ தான் வந்தியாஎன்று விசாரித்துக் கொண்டே வந்தார் சங்கர்.

ஆமாம் பா. என்ன நீங்க இன்னைக்கு late” என்று பேசிக் கொண்டே அவர் bag வாங்கி சென்று அவர் அதை வைக்கும் வழக்கமான இடத்தில் வைத்தாள் நிலா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.