(Reading time: 16 - 32 minutes)

எங்க மா, எல்லா இடத்திலும் traffic. வண்டில போயிட்டு வரதுக் குல்ல போதும் போதும் ஆகுதுஎன்றார் சங்கர்.

இதுக்குதான் பா நான் பல முறை சொன்னேன், நீங்க விஆர்எஸ் வாங்கிட்டு வீட்டில் நிம்மதியா இருங்கனு. நான் தான் கை நிறையச் சம்பாதிக்கிறேன் இல்ல. அது போதாதா, நீங்க வேற கஷ்ட படனுமாஎன்றாள் நிலா அக்கறையோடு.

இதில் என்ன ட கஷ்டம் இருக்கு. AC roomல ஒக்காந்து வேளை பார்க்கிறேன். அது மட்டும் இல்லாம வீட்டில் சும்மா இருக்கிறது எல்லாம் நம்மலால முடியாதுமா. வேணுனா நீ சீக்கிரம் ஒரு பேர பிள்ளையைப் பெற்று கையில் கொடு, நான் வேளைய விட்டுட்டு நிம்மதியா அவங்கள பார்த்துக்கிறேன் என்னஎன்று கூறினார் சங்கர்.

அப்பா அங்க சுத்தி, இங்க சுத்தி, மறுபடியும் கல்யாண விஷயத்துக்கே வந்து நிக்குறீங்களேஎன்று சிணுங்கினாள் நிலா.

ஆமான் டா, கொஞ்சம் தல்லு. அப்படி ஒக்கந்துக்கிறேன்கிண்டலாக பதில் சொல்லிவிட்டு sofaவில் அமர்ந்தார் சங்கர்.

அப்பாஎன்று மீண்டும் சிணுங்கினாள் நிலா.

என்ன மா. எதுல விட்டோம், ஆ பேர குழந்தைஎன்று நிலாவை பார்த்துக் கூறிவிட்டு, சிவகாமியைப் பார்த்துஎன்ன சிவகாமி அந்த விஷயத்தை சொல்லிடியாஎன்றார் சங்கர்.

இன்னும் இல்லங்க. இப்போதான் வீட்டுகுல்ல வந்த. வரும் போதே பசி நு ஊர கூடிடே வரஎன்றார் சிவகாமி.

அப்போ கையில் இருக்கிறத பொண்ணுகிட்ட சாப்பிட கூடுமா. அவ first சாப்பிடட்டும். அப்புறம் பேசிக்கலாம்என்றார் சங்கர்.

தட்டை கையில் வாங்கும் போதே “என்ன மா பீடிகை எல்லாம் பலமா இருக்கு. என்ன சொல்ல போறீங்கஎன்றாள் நிலா.

அது ஒன்னும் இல்லமா, building strongஆ விருத்தி ஆயி, தழைக்கனும் இல்ல. அதான் இவ்வளவு பீடிகைஎன்று நிலாவிற்கு பதிள் அளித்தார் சங்கர்.

ஐயோ அப்பா, நீங்க தமிழ் வாத்தியாரோட பிள்ளைதானு நாங்க தான் எப்பவோ ஒத்துக்கிட்டோமே. அப்புறம் ஏன் இப்படி. முடியலஎன்றாள் நிலா.

ஹ ஹ ஹஎன்று சிரிப்பை மட்டும் பதிலாய் தந்தார் சங்கர். “நீ முதல சாப்பிடு அப்புறம் பேசிக்கலாம்என்று நிலாவிடம் கூறி விட்டு, “சிவகாமி, எனக்கு ஒரு ரெண்டு இட்லி குடுமா. இட்லி மனம் சுண்டி இழுக்குதுஎன்றார் சிவகாமியை பார்த்து.

இருங்க எடுத்துட்டு வரேன்என்று உள்ளே சென்றார் சிவகாமி.

இந்தாங்க பா ஒரு வாய் வாங்கிக்கோங்கஎன்று தந்தைக்கு அக்கறையோடு ஊட்டினாள் நிலா. அவரும் அதை ஆனந்ததோடு வாங்கிக் கொண்டார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "காணாய் கண்ணே..." - காதல் & சரித்திரம் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

பெண்ணுக்கு கல்யாண செய்து ஆக வேண்டும் என்பதில் அவர் மும்முரமாக இருந்தாலும், அவர் மனதில் நிலாவை விட்டுப் பிரியும் வருத்தம் அதிகமாகவே இருந்தது.

அவள் கல்யாணமாகி புகுந்த வீடு சென்றுவிட்டால், யார் இப்படி பாசத்தோடு அவருக்கு ஊட்டி விடுவார்கள். அவள் குறும்பு, சிரிப்பு, பேச்சு, அழுகை, அடம் என்ன எல்லாவற்றையும் புகுந்த வீட்டிற்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு தனியாக நிற்கப் போகிறார்கள். அதை நினைக்கும் போதே அவர் இதயம் கனத்தது. பெண் பிள்ளையைப் பெற்ற அனைவரது நிலைமையும் அதுதான்.

இந்த யோசனையில் மூழ்கிப் போயிருந்தவரை, நிலாவின் வார்த்தைகள் களைத்ததுஅப்பா இந்தாங்க இன்னொரு வாய். என்னா அப்படி ஒரு யோசனை”.

ஒன்னும் இல்லமா நீ சாப்பிடுஎன்று அவள் ஊட்டிய இட்லியை வாங்கிக் கொண்டார் சங்கர். அதற்குள் சிவகாமி ஒரு தட்டில் வைத்து இட்லியை அவருக்குக் கொடுக்க இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.

கை கழுவி விட்டு, வந்து sofaவில் அமர்ந்தார் சங்கர். நிலாவும் வந்து அவர் பக்கத்தில் அமர்ந்து அவர் மடியில் படுத்துக் கொண்டாள். “கொஞ்ச நேரம் படுத்துக்கிறேன் பாஎன்றாள்.

எவ்வளவு நேரம் வேனுனாலும் படுத்துக்கோடஎன்று பாசமாகத் தலையை வருடினார் சங்கர்.

சிவகாமியும் வந்து அவள் காலருகே அமர்ந்தார்.

நிலா அப்பா ஒரு விஷயம் பேசனும் டாஎன்றார் சங்கர்.

சொல்லுங்க பாஎன்றாள் நிலா.

நாளைக்கு evening நாம எல்லாம் கபாலீஸ்வரர் கோவிலுக்கு போகனும். உன்னால லீவ் போட முடியுமாஎன்றார் சங்கர்.

கோவிலுக்கு தானே பா, நான் வேளையில் இருந்து வந்தவுடன் போகலாம். Saturday கூட leave தானே. வீட்டுக்கு lateஆ வந்தால் கூட பிரச்சனை இல்லஎன்றாள் நிலா.

அது இல்ல நிலா. நாங்க அந்த பையனைப் பற்றி சொன்னோம் இல்ல ரகு, அவங்கள பற்றி நல்லா விசாரிச்சிட்டோம். ரொம்ப நல்ல குடும்பம். பையனும் நல்ல மாதிரி நு சொல்றாங்க. ஒரு வகையில் பார்த்தால் அவங்க நமக்கு தூரத்துச் சொந்தம் மாதிரி வருது. நாங்க அவங்க அப்பா அம்மாகிட்டையும் பேசுனதுல நல்ல இடமா தெரியுதுஎன்று நிறுத்தினார் சங்கர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.