(Reading time: 16 - 32 minutes)

அதற்குல் 5 முறைக்கு மேல் ரகுவிற்கு அழைப்பு வந்துவிட்டது. அவனும் அதை cut செய்துவிட்டு தன் நிலையை வெளியே சொல்ல முடியாமலும் அமர்ந்து இருந்தான். சொன்னாலும் தன் தாய் சமாதானம் சொல்வார்களே தவிர, விடப் போவது இல்லை என்று அவனுக்குத் தெரியும்.

நிலாவை தன் மனதுக்குல்லே போட்டு வருத்து எடுத்துக் கொண்டிருந்தான் ரகு. “பெரிய மகாராணி, ச்சச இவளுக்காக நான் வந்து காத்திருக்கனுமா. சரியான திமிர் பிடிச்சவளா இருப்பா போலஎன்றெல்லாம்.

ரகுவின் நிலைமை சங்கருக்குப் புரிந்தது. அதற்கு மேல் அவனை காக்க வைப்பது சரி இல்லை என்று தோன்றியது. நடப்பது நடக்கட்டும் என்று நினைத்துக் கொண்டுதம்பி அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். உங்களுக்கு நேரம் ஆகுது போல நீங்க கிளம்புங்க. இன்னொரு நாள் நீங்க freeஆ இருக்கும் போது நாம சந்திக்கலாம்என்றார் சங்கர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "காயத்ரி மந்திரத்தை" - சமூக தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஐயோ uncle நீங்க எதற்கு sorry கேட்குறீங்க. பரவாயில்லை நான் இருக்கேன்என்று அவர்கள் மனம் கஷ்ட படாமல் இருக்க அவன் பேசினாலும், நேரம் ஆவதின் சங்கடம் அவன் முகத்தில் தெரிந்தது.

அதற்குள் மீண்டும் அவன் போன் அடிக்க இந்த முறை attend செய்தான். “விவேக் கொஞ்சம் busyஆ இருக்கேனு சொன்னேன் இல்லஎன்றார்.

மறுமுனையில் இருந்து விவேக் ஏதோ சொல்ல, “சார் வந்துட்டாரா. Omg. சரி வரேன் வைஎன்று callஐ கட் செய்து விட்டு தர்ம சங்கடமாக தன் பெற்றோரை அவன் பார்க்க, “தம்பி நீங்க கிளம்புங்க. ரொம்ப urgentநு நினைக்கிறேன் அதான் அவங்க இத்தனை தடவை போன் பண்றாங. நாம இன்னொரு நாள் சந்திக்கலாம்என்றார் சங்கர்.

அவன் மீண்டும் தன் தாயைப் பார்க்க, “சரி டா கிளம்பு. பார்த்து பொறுமையா வண்டிய ஓட்டிட்டு போஎன்றார் பானுமதி.

அனைவரிடமும் கூறிவிட்டு, ரகு கிளம்பும் போது, மீண்டும் அவன் போன் ஓலித்தது. அதை attend செய்து பேசிக் கொண்டே நடந்தான்.

அவன் பேசிக் கொண்டே சென்று செருப்பு போட்டு கொண்டு இருக்க, பின்னால் தன் தந்தைக்கு call செய்தவாரே தன் செருப்பைக் கழட்டிக் கொண்டிருந்தாள் நிலா.

இருவரும் ஒருவர் பின் மற்றொருவர் நின்று எதிர்த் திசை பார்த்து, போன் பேசிக் கொண்டிருந்தனர்.

தொடரும்

Episode # 07

Episode # 09

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.