(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்

Enakena yerkanave piranthavan ivano

துவரை அமைதியாக இருந்த சிவகாமி “நிலா இப்போ நீதான் சொல்லனும். எங்களைப் பொறுத்தவரை அவங்க நல்ல குடும்பமா தெரியுது. பையனும் நல்ல மாதிரி நு நினைக்கிறோம். உனக்கு பொருத்தமா இருப்பான். ஆனால் நீ சொல்ற முடிவை வைத்துத்தான் நாங்க மேற் கொண்டு பேசனும்” என்று நேராய் நிலாவிடம் கேட்டார்.

நிலாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

ஆனாலும் ஏதும் சொல்லாமல் அவள் அமைதியாக இருக்க முடியாது. நடப்பது நடக்கட்டும் என்று நினைத்துக் கொண்டு “அம்மா நீங்க ரெண்டு பேரும் என்ன முடிவு செய்தாலும் எனக்கு ஓகே தான்” என்று மட்டும் கூறி விட்டு தன் தட்டை எடுத்துக் கொண்டு கை கழுவு இடத்திற்கு சென்றாள் நிலா.

சிவகாமிக்கு நிலா கூறியதைக் கேட்டு சந்தோஷம், ஆனால் சங்கருக்கு நிலா இப்படிப் பட்டும் படாமல் பேசுவதில் சற்று வருத்தம் தான். ஆனாலும் அதை அவர் சிவகாமியிடம் காட்டிக் கொள்ள வில்லை.

“என்னங்க, எனக்கு ஒரு யோசனை. நாளைக்கு நம்ம விச்சு மாமாக்கு போன் பண்ணி இந்த பையன பற்றி விசாரிங்க. அவருக்குப் போன முறை யார் மூலம் இந்த பையன பற்றித் தெரிய வந்தது, அவங்க குடும்பம் பற்றியும் விசாரித்த இன்னும் கொஞ்சம் நாம முழு திரிப்தியோட அடுத்த கட்ட வேளைய ஆரமிக்களாம்” என்றார் சிவகாமி.

“சரி மா அப்படியே செய்றேன்” என்று அதை ஒற்றுக் கொண்டார் சங்கர்.

“அடுத்து அவங்க எப்போ கால் பண்ணறனு சொன்னாங்க” என்றார் சிவகாமி.

“அவங்க பையன் கிட்ட பேசிட்டு கூடிய விரைவில் கால் பண்றனு சொன்னாங்க. பார்க்கலாம் அதற்குள் நீ சொன்ன மாதிரி அவங்களைப் பற்றியும், அந்த பையனைப் பற்றி விசாரித்து வைச்சிகலாம்” என்றார் சங்கர்.

“சரிங்க” என்று மட்டும் கூறி விட்டி எழுந்தார் சிவகாமி.

சங்கருக்கு தன் மகளின் இந்த பிடிப்பின்மையில் தான் சிறு பயம். அதைக் கூறி தன் மனைவியைப் பதட்டப் படச் செய்ய அவர் விரும்ப வில்லை.

தன் அறைக்குள் சென்ற வெண்ணிலா “இப்போதைக்குத் தப்பிக்கலாம், மாப்பிள்ளை நு ஒருத்தனை கொண்டு வந்து நிறுத்த குறைந்தது 6 மாதமாவது ஆகும் என்று நினைத்துதான் அவர்கள் கேட்டதற்கு ஓகே சொன்னோம். ஆனால் இவர்கள் போகும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் 1 மாதத்ததிற்குள் மன மேடையில் உட்கார சொல்லிடுவாங்க போல. நிலா என்ன டி இப்படிச் சிக்கி கிட்ட. இப்போ என்ன செய்றது.” என்று தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள் நிலா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் " ரிங்கா ரிங்கா ரோசஸ்..." - திகில் நிறைந்த பேய் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

சற்று நேரம் தனக்குள் குழம்பிக் கொண்டு “சீக்கிரம் நம்ம சங்க meetingஐ கூட்டி இதற்கு ஒரு முடிவு எடுத்தாகனும்” என்று ஒரு முடிவுக்கு வந்தாள்.

தன் மொபைல்ஐ எடுத்து வாட்சாப் ஓபன் செய்து, “வெரி கிரிடிகல் டீம் மீட் நெசசரி” என்று தன் பள்ளித் தோழிகள் குரூபில் மேசேஜ் போஸ்ட் செய்தாள். அதுதான் அவள் நடத்தும் வருத்தப் படாத தோழிகள் சங்கம்.

சிறிது நேரத்திற்குள் “என்ன, எங்கே, எப்போ” என்று எல்லாம் கேட்டு மேசேஜ்கள் குவிந்தது. நிலா விஷயத்தைச் சொல்லாமல் நேரில் கூறுவதாக கூறி மீடிங் ஏற்பாடு செய்தாள். அடுத்த வாரம் சனிக் கிழமை சங்கம் கூடுவதாக முடிவானது.

“இப்போதைக்கு இதைப் பற்றி நினைத்து கவலைப் பட வேண்டாம். friendsல யாரது ஒருத்தி கண்டிப்ப இதுல இருந்து escape ஆக ஒரு வழி சொல்லுவா அப்போ பார்த்துக் கொள்ளலாம்” தன் கட்டிலில் சரிந்து உறங்கத் தயாரானால் நிலா.

சற்று நேரத்தில் உறங்கியும் போனால் நிலா. அன்று அவள் கனவில் மீண்டும் அவள் கற்பனை காதலன் வந்தான். முகம் தெரியாத, பெயர் தெரியாத அந்த ஆள், அவ்வப்போது அவள் கனவில் வருவான். அவன் வரும் இரவுதான் அவளுக்கு ரம்யமான இரவு. அன்று அப்படிதான் அமைந்தது நிலாவிற்கு

ரகு வீட்டில்.

இன்று இரவு அவன் வந்தவுடன் நிலாவைப் பற்றி பேசலாம் என்று நாகராஜனும் பானுமதியும் முடிவு செய்திருந்தனர். ஆனால் இரவு 7 மணி அளவில் போன் செய்து, வேளை இருப்பதால் இரவு வீட்டிற்கு வர வெகு நேரம் ஆகும் என்று ரகு கூறினான்.

அவன் கூறியது போல் இரவு 3 மணி அளவில் தான் வீட்டிற்கு வந்தான். பெற்றோரை தொந்தரவு செய்யாமல் தன் அறைக்குச் சென்று கட்டிலில் சரிந்தான். படுத்த மாத்திரத்திலே கலைப்பில் உறங்கிப் போனான்.

மறுநாள் காலை ”என்ன பானுமதி ரகு வந்திட்டானா. எப்போ வந்தான்” என்று தன் மனைவியிடம் விசாரித்தார் நாகராஜன்.

“நைட் ரெம்ப வெர்க் போலங்க. 3 மணிக்குத்தான் வந்தான். சத்தம் கேட்டு, சாப்பிட்டானானு கேட்க ரூம்க்கு போனேன் ஆன அதற்குள் தூங்கிட்டான்.” என்று கவலையாக பதில் அளித்தார் பானுமதி.

“ரொம்ப டையர்டா இருந்திருப்பான் மா. அதான் உடனே தூங்கிருப்பான். சரி அவனை தொந்தரவு செய்ய வேண்டாம். எப்போ எந்திருச்சு வரானோ வந்து சாப்பிடட்டும்.” என்றார் நாகராஜன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.