Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 4 votes
Pin It

தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ

Ringa ringa roses

திலக்கின் சடலம் வெள்ளை துணியால் மூடப்பட்டது. கணேஷ் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்தான். இரண்டு நிமிடத்திற்கு முன் தன்னோடு பேசிக் கொண்டிருந்தவன் இப்போது உயிரற்று கிடக்கிறான். இதுதான் வாழ்க்கை. எவருக்கும் எந்த நொடியும் எதுவும் நடக்கலாம். இதை உணராமல்  செருக்குடன் வாழ்வை கழித்துக் கொண்டு இருக்கிறார்கள் சிலர்.

இரவு நேரம் ஆதலால் போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லை. லாரி டிரைவர் ரோட்டின் பிளாட்பாரத்தில் குத்தயிட்டு அமர்ந்தபடி “ஐயோ எந்த நேரத்துல வண்டிய எடுத்தனோ தெரியிலயே . . ஐயா நான் சரியாதான் ஓட்டியாந்தேன்” என புலம்பிக் கொண்டு இருந்தான்.

ஒரே மாதிரியாக அடுக்கி வைத்த தெரு விளக்குகள் வெளிச்சத்தை உமிழ்ந்துக் கொண்டிருந்தன. விட்டில் பூச்சிகள் எமனுக்காக காத்திருந்தவண்ணம் விளக்குகளை இன்பமாக சுற்றிவந்தன.

காக்கிச் சட்டை அவனை சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன் என அடையாளம் காட்டியது. “உன் பேரு என்ன?” அதிகார தோரணையோடு வினவ. 

டிரைவர் “மாரிமுத்து”  என கலக்கமும் கவலையும் ஒன்றுபட பவ்யமாக எழுந்து நின்று பதிலளித்தான்

“இப்படியா வண்டிய ஓட்டுவ?” என கோபமாக கேட்டவனிடம்

“நான் சரியாதான் வந்தேனுங்க . . தம்பிதான் நோ என்டிரில வந்துடுச்சி”

“ஏன் சொல்ல மாட்டே . .பொணம் எந்திரிச்சி பேசவா போகுதுனு தெகிரியம்” என காளியப்பன் எகுற . .

“இல்ல . . இல்லங்க” அவசரமாக மறுத்தான்.

இரவு நேரத்திலும் சுற்றும் முற்றும் இருந்த சிலர் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர்.

கூட்டத்தில் சிலர் “பாவம் சின்ன வயசு”

“யாரு பெத்த புள்ளயோ”

“குடிசிட்டு வண்டி ஓட்டிருப்பான்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“லாரிகாரன் குடிச்சிருப்பான்” என தங்களுக்கு தோன்றியதை பேசிக் கொண்டனர். ஒவ்வொருவர் மனதிலும் பல எண்ணங்கள் அவை வார்த்தைகளாகவும் “ம்ச்” “ச்சே” என ஓசைகளாவும் வெளி வந்தன.

பிணத்தை காட்டி “இவன யாருக்காவது தெரியுமா? ” என காளியப்பன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே

“சார் அவன் என் பிரெண்ட்” என கணேஷ் முன்வந்தான். சரியாக  பேச முடியாமல் வார்த்தைகள் தடம்புரண்டது. அதிர்ச்சியிலிருந்து இன்னமும் அவன் மீளவில்லை என்பதை அவன் வெளிரிய முகம் அப்பட்டமாக காட்டியது.  கண்கள் சிவந்திருந்தது.

அவனை ஏற இறங்க பார்த்து  “உன் பேரு என்ன? எங்க இருக்க?”

“கணேஷ் . . அந்த மேன்ஷன்ல இருக்கேன்” என எதிர்திசையில் உள்ள மேன்ஷனை சுட்டிக் காட்டினான்.

“ரெண்டு பேரும் சரக்கடிச்சிங்களா?”

“இல்ல சார்” பதட்டமாய் பதில் வந்தது

“இவன் பேரு என்ன?” என பிணத்தை கண்களால் சுட்டிக்காட்டி கேட்டான்

“திலக்”

“அவங்க அப்பா பேரு என்ன? போன் நம்பர் சொல்லு?” என சரமாரியாக கேள்வி வந்தன

“அப்பா பேரு சுவாமிநாதன் . . அவர் போன் நம்பர் தெரியாதுங்க” கணேஷ் பதிலளித்தான்.

அதற்குள் மற்றொரு கான்ஸ்டபிள் திலக் பேண்ட் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து கொடுத்தான். அதை பெற்றுக் கொண்ட  காளியப்பன். போனை சற்று நேரம் துளாவியப்பின்.

“ச்சே ஏண்டா இப்படி பண்றீங்க? . . பாரு போன லாக் பண்ணி வெச்சிருக்கான் . . இப்ப நம்பர எப்படி பாக்குறது.” அலுத்துக் கொண்டான்.

திலக்கின் சடலத்தை போலீசை சார்ந்தவன் விதவிதமாக தன் கேமிராவில் கிளிக்கினான். சடலத்தை சுற்றி கோடுகள் போடப்பட்டன. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஏம்புலன்ஸ் தனக்கே உரிய சங்கேத பாஷையில் அலறிக் கொண்டு வந்தது. திலக்கின் சடலம் ஏற்றப்பட்டது. சடலத்தை ஏற்றியவர்கள் முகம் எந்த மாறுதலும் இன்றி இயல்பாய் இருந்தது. அவர்கள் இதைப் போல தினம்தினம் எத்தனையோ சடலங்களை பார்ப்பதால் அவர்களுக்கு இது அதிர்ச்சியாகவோ சோகமாகவோ தோன்றவில்லை.

ஏம்புலன்ஸ் சென்றதும் மிச்சம் இருந்தது திலக் சிந்தியிருந்த ரத்தம் மட்டுமே. சிறு குளம் போல் தேங்கி கிடந்தது.

“திலக் வீட்டு லேண்ட் லைன் நம்பர் இருக்கு சார்” என கணேஷ் தன் போனில் தேடிக் கொடுத்தான்.

“போன் நம்பர் சொல்லு” என போலீஸ் ஜாடை செய்தார்

கணேஷ் நம்பரை சொல்ல அவர் தன் போனில் டைல் செய்தார்.

“மிஸ்டர். சுவாமிநாதன் இருக்காரா?”

“இருக்கார்” என்றது பெண் குரல்

“அப்பா உங்களுக்கு போன்” என்ற பேச்சுக் குரல் போலீஸ் காதில் துள்ளியமாய் விழுந்தது.

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4 
 •  Next 
 •  End 

About the Author

Subhasree

Latest Books published in Chillzee KiMo

 • Katrin kanalKatrin kanal
 • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
 • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
 • Theeradha KadhalTheeradha Kadhal
 • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
 • Kids Fun StoriesKids Fun Stories
 • Unnai ondru ketpenUnnai ondru ketpen
 • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீSubhasree 2019-04-20 11:27
Thank you so much for all your
comments friends. :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீSagar 2019-04-19 23:24
Semma epi sis
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீJanaki 2019-04-19 19:45
wow Arumayana nagarvu subhasree
aduthu enna nadakum :Q:
Mathiku aabathu varuma :Q:
Suvarasyamana episode.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீSahithyaraj 2019-04-19 17:21
Sema
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீVasan 2019-04-19 15:40
Fantastic episode. wow
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீAdharvJo 2019-04-19 12:21
:eek: :eek: Achacho marubadiyum sangu song huh facepalm Sis ippo yaroda wicket poga pogudhu is it Ganesh :Q: :no: :no: :sad:
Indha diamond-a thooki kupaithotila adhukku than pottutangalo :Q:

Well balance epi sis :clap: :clap: though its sad to read abt THilak's demise on the other side ganesh and madhi oda fb and convo was :cool: Diamond-ku mathi oda bag pidichi irukka steam hope no more killing padalam :yes:

So indha uncle-ku munadiye ippadi ellam agumnu theriyuma...appadi ena yoisanai kodukal :Q: waiting to see what happens next....fingers crossed for ganesh :P

thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # ringa ringa rosesjayapraksh 2019-04-19 10:53
unga story Rompa interestinga iruku differenta story neega ennum elutha valuthukal
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீmadhumathi9 2019-04-19 06:23
:Q: oh my god intha vairathaal madhikku nallathu nadanthaal magichi.kathai interesting aaga poguthu. (y) :thnkx: 4 this epi.waiting to read more. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top