“ரகு நீ எப்படியும் கல்யாணத்திற்குச் சம்மதம் சொல்வாய் என்று எங்களுக்குத் தெரியும். அதனால் கடைசி ஒரு வருடமா நாங்களும் பார்த்துக்கிட்டுதான் இருந்தோம். அது மட்டும் இல்லாமல் போன முறையே இந்த பெண்ணோட details நம்ம கிட்ட வந்துச்சி. ஆனால் நீ கல்யாணம் வேண்டானு சென்னதால நாங்க மேற் கொண்டு தொடர வில்லை. நீ அப்போவே சரி நு சொல்லிருந்தா உனக்கும் அந்த பெண்ணுக்கும் கல்யாணம் ஆகி இப்போ ஒரு வருடம் ஆயிருக்கும்” என்றார் நாகராஜன்.
ரகுவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இவர்கள் இவ்வளவு வேகமாக இருப்பார்கள் என்று தெரியாமல் சம்மதம் சொல்லி மாட்டிக் கொண்டோமே என்று தன் மனதில் நினைத்துக் கொண்டிருந்தான் ரகு.
“என்ன ரகு என்ன யோசிக்கிற. உன் மனதில் வேற யாராவது பொண்ண நினச்சிட்டு இருக்கியா. அப்படினாலும் பரவாயில்லை சொல்லு. இல்ல இப்போ மனசு மாரிடுச்சி, கல்யாணம் வேண்டாம்னாலும் சொல்லு பா. எங்களுக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதானு நாங்க நினைத்துக்கிறோம்” என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார் பானுமதி.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சுபஸ்ரீயின் "இதயச் சிறையில் ஆயுள் கைதி..." - காதலும் மர்மமும் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
“இதுதான் சமயம் கல்யாணம் இப்போ வேண்டானு சொல்லிடலாமா” என்று யோசித்துக் கொண்டே பெற்றோர் இருவரின் முகத்தையும் பார்த்தான் ரகு. இருவரின் முகத்திலும் அப்படி ஒரு சோகம். அதை பார்த்தவுடன் அவனுக்கு என்னவோ மாதிரி இருந்தது. இப்போ கல்யாணம் வேண்டானு சொன்னா இவங்க புலம்பியே நம்ம தலையை திண்ணுடுவாங்க என்று மனதில் நினைத்துக் கொண்டு வேறு வழி இல்லாமல் “உங்களுக்கு எது சரினு தோனுதோ அதை செய்ங்க* என்று கூறிவிட்டு, எழுந்து கை கழுவி விட்டு உள்ளே சென்றான்.
“என்னங்க இவன் இப்படி சொல்றான், இவனை நம்பி எப்படி” என்று இழுத்தார் பானுமதி.
“நீ ஒன்னும் கவலைப் படாத மா, இவனைக் கொஞ்சம் கொஞ்சமாதான் வழிக்குக் கொண்டு வரனும். நமக்கு ஒரு அவமரியாதை வர மாதிரி இவன் நடந்துக்க மாட்டான். அதனால் நாம அடுத்த கட்ட நடவடிக்கைகள் தைரியமா தொடங்கலாம். எல்லாம் நல்லதா தான் நடக்கும்” என்றார் நாகராஜன்.
தன் அறைக்குச் சென்றவன், நாற்காலியில் அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தான். “எல்லாம் வேகமாக நடக்கிறது. நாம எதாவது செஞ்சே ஆகனும். இவங்க கிட்ட கல்யாணம் வேண்டானு சொல்ல முடியாது. அதுகாக இவங்க காட்டுற பெண்ணையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. என்ன ரகு இப்படி ஒரு தர்ம சங்கடமான நிலைமையில் மாட்டிக்கிட்ட” என்று தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தான். அவனுக்கு என்ன செய்வது என்று எந்த வழியும் கிடைக்க வில்லை.
அடுத்த இரண்டு நாட்களில் இரு வீட்டாருக்கும் போனிலேயே நல்ல உறவு வளர்ந்திருந்தது. அதன் விளைவு இந்த பேச்சு வார்த்தையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போவது என முடிவு ஆனது.
அந்த வாரம் வெள்ளி மாலை நல்ல நேரம் இருப்பதால் அதற்கு மேல் தாமதம் செய்யாமல் இரு குடும்பத்தாரும் நேரில் பார்த்துப் பேசிக் கொள்வது என்றும் அதற்காக கபாலீஸ்வரர் கோவில் இடமாகவும் தேர்வு ஆனது.
இரு வீட்டாருக்கும் மகிழ்ச்சியில் இருந்தனர்.அதே சமயத்தில் தங்கள் பிள்ளைகளை இந்த சந்திப்பிற்குச் சம்மதிக்க வைப்பது என்று சிறிய தயக்கமும் கூட.
தொடரும்
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.