(Reading time: 10 - 20 minutes)

“சரி” என்று தலையாட்டிவிட்டு தன் வேளையைக் கவனிக்கச் சென்றுவிட்டார் பானுமதி.

காலை பதினொரு மணி அளவில் “அம்மா, பசிக்குதுமா சாப்பிட எதாவது கொடுங்க” என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்தான் ரகு.

“கை கழுவிட்டு ஒட்காருடா எடுத்துட்டு வரேன்” என்று கூறிக் கொண்டே டிபனோடு வந்தார் பானுமதி.

தூங்கி வழிந்தவாறே அமர்ந்திருந்தான் ரகு.

“என்ன பா ரொம்ப வேளையா” என்றார் பானுமதி.

“ஆமாம் மா. நேற்று ஈவினிங் வரைக்கும் தான் ப்ளேன் பண்ணிருந்தோம். கடைசியா அந்த கம்பேனி மேனேஜரும், ஆட் பிளிம் டைரக்டரும் சேர்ந்து புது செட் போட்டு ஷுட் பண்ணனுனு முடிவு செய்து ஷுட்அ டிலே பண்ணிட்டாங்க” என்று நேற்று நடந்ததைக் கூறினார் ரகு சாப்பிட்டுக் கொண்டே.

“நேற்று நைட் சாப்பிட்டியா” என்று அக்கறையோடு விசாரித்தார் பானுமதி.

“சாப்பிட்டேன் மா. ஷுட்டிங்களியே சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தாங்க” என்று பதில் அளித்தான் ரகு.

“இன்னைக்கு ஷுடியோ போகனுமா” என்றார் பானுமதி.

“இல்லமா இன்னைக்கு எதுவும் வேளை இல்லை. இன்னும் தூக்கமா இருக்கு. நான் போய் தூங்க போறோன்” என்று சாப்பிட்டு விட்டு எழுந்தான் ரகு.

பார்க்க மிகவும் டையர்டாக இருந்ததால் இப்போது எதுவும் பேச வேண்டாம் என்று அமைதியாக இருந்துவிட்டார் பானுமதி.

சாப்பிட்டுவிட்டுத் திரும்பவும் தன் அறைக்குச் சென்று கட்டிலில் சாய்ந்தான். சிறிது நேரம் போனை நோண்டிவிட்டு அப்படியே தூங்கிப் போனான்.

மாலை ஐந்து மணி போல் குளித்து fresh ஆக கீழே வந்தான் ரகு. நாகராஜனும் அதற்கு வீட்டிற்கு வந்திருந்தார்.

“ஈவினிங் பா” என்று தன் தந்தைக்கு மாலை வாழ்த்தைச் சொல்லிவிட்டு, சமையல் அறைக்குச் சென்றான். கிட்சனில் ஏதோ பலகாரம் செய்து கொண்டிருந்த தன் அன்னையை பின்னால் இருந்து அனைத்துக் கொண்டு “மம்மி பசிக்குது” என்றான் ரகு.

“உனக்காகத் தான் வடை செய்து கொண்டு இருக்கிறேன். போய் ஹலில் ஒட்காரு. காப்பியும் வடையும் கொண்டு வரேன்” என்று பானுமதி கூற, ஒரு வடையை எடுத்துக் கடித்துக் கொண்டே ஹாலுக்கு வந்தான் ரகு.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

வந்தவன் சோபாவில் அமர்ந்திருந்த தன் தந்தை அருகில் அமர்ந்து அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு, கையில் மீதம் இருந்த வடையைச் சாப்பிடு கொண்டே தன் தந்தையிடம் அவர் வேளைலை பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.

அதற்குள் பானுமதி, அனைவருக்கும் காப்பியும் வடையும் எடுத்துக் கொண்டு வந்து அவர்கள் பக்கத்தில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு எதிரில் இருந்த சேரில் அமர்ந்தார்.

மூன்று பேறும் ஏதோ கதை பேசிக் கொண்டே காபியும் வடையையும் சாப்பிட ஆரமித்தார்கள். ரகு பார்க்க வில்லை என்று நினைத்துக் கொண்டு பானுமதி நாகராஜனிடம் செய்கை காட்ட அதற்கு அவரும் ஏதோ செய்கையிலே பதில் சொன்னார். இதை ரகுவும் கவனிக்கத் தவறவில்லை.

“என்ன மம்மி, செய்கையில் அப்பா கூட romanceஆ. காபி வடை எல்லாம் பார்த்த உடனே உங்கள பொண்ணு பார்க்க வந்த ஞாபகம் வந்திடுச்சா” என்று கிண்டலாகக் கேட்டான் ரகு.

“அட போட” என்று வெட்க பட்டுக் கொண்டே சொன்னார் பானுமதி.

எப்படி பேட்சைத் தொடங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்த நாகராஜனுக்கு ரகு வரி எடுத்துக் கொடுத்தார் போல் ஆனது. “உங்க அம்மா பெண் பார்ப்பது பற்றித்தான் செய்கை காட்டினார். ஆனால் எங்க பெண் பார்க்கும் சீன் இல்ல, இது நீ பெண் பார்ப்பது பற்றி” என்று கூறி நிறுத்தினார் நாகராஜன்.

“என்ன பா சொல்றீங்க” என்று புரியாமல் கேட்டான் ரகு.

“உனக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்கோம். நல்ல பொண்ணு உனக்குப் பொருத்தமா இருப்பா, நல்ல குடும்பம். நீ பார்த்து உன் விருப்பதைச் சொன்னால் நாங்க அடுத்த கட்டமா செய்ய வேண்டியதைப் பார்ப்போம்” என்று கூறி முடித்தார் நாகராஜன்.

ரகுவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. கல்யாணத்திற்கு பெண் பார்க்க ஓகே சொன்னது அவன் தான், ஆனால் இவ்வளவு சீக்கிரம் இவர்கள் பெண் பார்ப்பார்கள் என்று தெரியாது. இவன் இத்தனை வருடம் தேடியும் கிடைக்காத பெண், இவர்களுக்கு மட்டும் எப்படி 1 மாதத்திற்குள் கிடைத்து விடுவாள். அப்படி என்றால் நமக்கு பொறுத்தமே இல்லாத பெண்ணாகத்தான் இருப்பாள். இவை எல்லாம் மனதுக்குல் யோசித்துக் கொண்டு மௌனமாக இருந்தான் ரகு.

நாகராஜனும் பானுமதியும் அவன் அமைதிக்குக் காரணம் புரியாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தனர்.

“அப்பா, நான் சரி நு சொல்லி இன்னும் ஒரு மாதம் கூட ஆகல அதுகுல்ல எப்படி” என்றான் ரகு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.