(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 09 - குருராஜன்

Enakena yerkanave piranthavan ivano

நிலாவும் ரகுவும் ஒருவர் பின் மற்றொருவர் நின்று எதிர்த் திசை பார்த்து, போன் பேசிக் கொண்டிருந்தனர்.

ஒருவர் மற்றொருவரைக் கவனிக்கவில்லை.

சங்கர் phoneக்கு நிலா call செய்ய, அதை எடுத்தவர்நிலா எங்க இருக்கஎன்று அவசரமாகக் கேட்க, “இங்க கோயில் வாசலில்தான் பா இருக்கேன். உள்ள எங்க வரனும்என்றாள் நிலா.

நீ அங்கேயே இருமா நான் வரேன்என்று எழுந்து சென்றார் சங்கர்.

ரகு இப்போதுதான் சென்றிருப்பதால், வாசலில் தான் இருப்பான், அங்கு வைத்தாவது இருவரையும் அறிமுகம் செய்து வைத்துவிடலாம் என்று சங்கர் நினைத்தார். அது நாகராஜனுக்கும் புரிந்தது.

இருங்க நானும் வரேன்என்று அவரும் சங்கருடன் சென்றார். நடக்கும் போதே ரகுவின் போன்க்கு call போட try செய்தார். ஆனால் அவன் போன் பிசியாகவே இருந்தது.

இருவரும் நிலா இருக்கும் இடத்திற்கு வந்தனர். வந்து அவளிடம் பேசாமல் வெளியே அங்கும் இங்கும் பார்த்து ரகுவை தேடினர்.

அப்பா நான் இங்க இருக்கேன். யாரை தேடுறீங்கஎன்றாள் நிலா.

இவ்வளவு நேரம் wait பண்ணிட்டு இப்போதான் ரகு கிளம்பி போனாரு.” என்று வெளியே பார்த்துக் கொண்டே பதில் சொன்னார் சங்கர்.

போனும் busyஆவே இருக்கு சார்என்று போன் try செய்து கொண்டே கூறினார் நாகராஜன்.

அதற்குள் துரத்தில் ரகுவின் car போவதைப் பார்த்து, “சார் அங்க, ரகுவோட கார் போகுது. கிளம்பிட்டான்என்றார் நாகராஜன்.

நிலாவும் சங்கரும் அந்த திசை பார்த்தனர். கார் போவது தெரிந்தது. சங்கருக்கு ஏமாற்றம். அதை நிலா, சங்கர் முகத்தைப் பார்த்தவுடனே புரிந்து கொண்டாள்.

அப்பா really sorry.” என்று தன் தந்தை பார்த்துக் கூறிவிட்டு “uncle என்ன மன்னிச்சிடுங்க. சீக்கிரமாதான் கிளம்பினேன். ஆனால் road full traffic. Sorry uncle” என்று நாகராஜனை பார்த்து மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.

சங்கர் எதுவும் பேசவில்லை, அவர் கோவமாக இருப்பது அவர் முகத்திலேயே தெரிந்தது.

அதைப் புரிந்து கொண்டு “நிலா எதுக்கு மன்னிப்பொல்லாம். நம்ம ஊரு traffic பத்திதான் நமக்கு எல்லாம் தெரியுமே. நாங்க எதுவும் தப்பா நினைக்கல. நீ வாமாஎன்று ஆறுதலாக பேசினார் நாகராஜன்.

அவர் அப்படிப் பேசியது மகிழ்ச்சியாக இருந்தாலும், தன் தந்தை எதுவும் பேசாமல் இருப்பது நிலாவிற்குச் சற்று வருத்தத்தையும் தந்தது.

மூவரும் கோவிலுக்குள், பானுமதியும் சிவகாமியும் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.

என்னங்க ஆச்சி, ரகு கிடைச்சானாஎன்றார் பானுமதி.

இல்லமா, நாங்க பார்க்கிறதுக்கு முன்னாடியே அவன் கார் கிளம்பிடுச்சி. போனும் பிஸியா இருக்குஎன்றார் நாகராஜன்.

சிவகாமி நிலாவைச் சுட்டெரிப்பது போல் பார்த்தார். நிலாவும் அதை புரிந்து கொண்டு கண்ணாலையே அவரிடன் மன்னிப்பு கேட்டாள்.

வாமா நிலா, வந்து இங்க ஒட்காருஎன்று தன் அருகில் அமரச் சொன்னார் பானுமதி.

நிலாவும் அவர் அருகில் அமர்ந்து, அவரையும் நாகராஜனையும் நலம் விசாரித்தாள். மீண்டும் ஒருமுறை அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொண்டாள்.

அவளுக்கு அங்கு வருவதற்கு விருப்பம் இல்லை என்றாலும் அதை அவள் வெளிக் காட்டி கொள்ளவில்லை. ரகுவின் பெற்றோரிடம் மரியாதையுடனும் அன்புடனும் பேசினாள்.

சிறிது நேரத்தில் அனைவரும் normalஆக பேச ஆரம்பித்தனர். நிலாவை பானுமதிக்கு மிகவும் பிடித்து விட்டது.

நிலாவுக்கும் அவர்கள் இருவரையும் பிடித்திருந்தது. கல்யாண பேச்சு என்று அவர்களைச் சந்திக்காமல் இருந்திருந்தால் அவர்களோடு வீட்டிற்கே கூட சென்றிருப்பாள்.

எல்லாம் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு, நிலாவின் வீட்டில் ரெம்ப நல்ல பையன், மரியாதை தெரிந்த பையன், நீ பார்க்காம போயிட்டியே”, என்று ரகு பற்றிய பேச்சுகளே இருந்தது. நடு நடுவில் நிலாவிற்கு அர்ச்சனைகளும் நடந்தது.

ரகு வீட்டில் அதே நிலைமைதான். “ரெம்ப தங்கமான பொண்ணு, என்ன ஒரு அடக்கம், நிறைய படிச்சி, சம்பாதித்தாலும் அந்த கர்வம் கொஞ்சம் கூட இல்லை. இன்னும் ஒரு 2 நிமிசம் பொருமையா இருந்திருந்த அந்த பொண்ண பார்த்திருக்கலாம்”, என்று நிலா புராணமே ஓடிற்று.

இருவருக்கும் அது எரிச்சலும், ஒருவர் மீது மற்றொருவருக்கு வெறுப்பையும் தந்தது.

ஞாயறு மாலை நிலா அழைப்பு விடுத்திருந்த தோழிகள் சங்கம் கூடியது.

என்ன டி நிலா, ஏதோ அவசரமான விஷயம் நு சொன்ன.” என்றால் நிஷா.

நிலா சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு, தன் கல்யாண ஏற்பாட்டைப் பற்றி தன் தோழிகளிடம் கூறினாள்.

உடனே ஆளாலுக்கு “வாழ்த்துக்கள், congrates” என வாழ்த்து சொல்ல ஆரம்பித்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.