(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - சிவகங்காவதி - 16 - ஸ்ரீ

sivaGangavathy

மருதத் திணை - குன்றக் குறவன் பத்து

குன்றக் குறவன் ஆர்ப்பின், எழிலி

நுண் பல் அழி துளி பொழியும் நாட!

நெடு வரைப் படப்பை நும் ஊர்க்

கடு வரல் அருவி காணினும் அழுமே.-251

  தோழி தலைவனுக்குக் கூறியது

குன்றக் குறவன் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்வது போல நுண்ணிய பல மழைத்துளிகள் பொழியும் நாட்டின் தலைவன் நீ.

உன் உயர்ந்த மலையையும், அதில் தோன்றும் வயல் படப்பையையும் இங்கிருந்து கண்ணால் காணும்போதெல்லாம் உன் நினைத்துக்கொண்டு என் தோழி உன்னை நினைத்துக்கொண்டு அழுகிறாள்.

ருதினங்கள் முழுதாய் கழிந்திருந்தன சிவகங்காவதி கண் திறப்பதற்கு.அவள் கூறியபடி சர்ப்ப விஷத்தை முறிக்கும் மாற்று மருந்தைக் கொண்டு வந்து அவளுக்கு கொடுத்து அங்கிருந்து அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

விஷம் உடல் முழுவதும் ஏறுவதை தடுக்க முடிந்ததே தவிர முழுவதாய் சரிசெய்து அவளை கண்விழிக்க வைக்க இரண்டு தினங்கள் ஆகியிருந்தன.

அத்துனை நேரமும் அவளருகிலேயே அமர்ந்திருந்த நஸீம் அப்போது தான் எழுந்து வெளியே சென்றிருக்க ஆயிஷா அங்கு அமர்ந்திருந்தாள்.

சிவகங்காவதி மெதுவாய் கண்விழிக்க அவசரமாய் ஆயிஷா சென்று அவளருகில் அமர்ந்தாள்.

“இப்படி பயமுறுத்தி விட்டீர்களே!!இப்போது தாங்கள் கண் விழிக்கும் வரையிலுமே என் உயிர் என் கையில் இல்லை.என் நிலைமையே இப்படி எனில் உசூரின் நிலையை யோசித்துப் பார்த்தீர்களா?இரவும் பகலுமாய் தங்களைவிட்டு நகராமல் இருந்தார்.

தயவுசெய்து இனியும் இப்படி ஒரு வீர சாகச விளையாட்டு வேண்டாம் சிவகங்காவதி”,அவள் மூச்சுவிடாமல் பேசுவதற்கு பதில் கூறும் நிலையில் இல்லாதவளாய் புன்முறுவல் புரிந்தாள் சிவகங்காவதி.

அதற்குள் நஸீம் அங்கு வந்துவிட ஆயிஷா வேகமாய் எழுந்து வணங்கி நின்றாள்.

“கண்விழித்த அடுத்த நொடி என்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தேனே சற்றேனும் பொறுப்பு இருக்கிறதா உனக்கு..”

“உசூர்..”

“என்முன் நிற்காதே சென்று விடு.”,என்றவன் அவளருகில் மெதுவாய் அமர்ந்தான்.சிவகங்காவதி அவனையே பார்த்திருந்தாள்.

அவனைக் கண்டு ஒரு வாரத்திற்கும் மேல் ஆகியிருக்கும் என்பது புரிந்தது.அவனது கம்பீரமும் நிமிர்வும் தளர்ந்து முகத்தின் பொலிவு குறைந்து நோயாளி போல் காட்சியளித்தான்.அவன் மௌனத்தை கலைக்க விரும்பியவளாய் பேசுவதற்கு வாய் திறந்தநேரம் அவனே பேச ஆரம்பித்திருந்தான்.

“ஏன் இப்படி செய்தாய் கங்கா!நான் உன்னிடம் அத்துனை கீழ்தரமானவனாகவா நடந்து கொண்டேன்.உன்னை மனதார..மனதார விரும்பியதை தவிர ஒரு பாவமும் என் மனதால் கூட நினைத்ததில்லை.

இன்னும் தெளிவாய் கூற வேண்டுமானால் உனைத் தவிர வேறொரு உறவை என் மனம் எப்போதுமே நாடியதில்லை கங்கா.அப்படியிருக்க என்ன காரணத்திற்காக இந்த தற்கொலை முயற்சி!அதற்கு பதில் நீ என்னை கொன்றிருக்கலாமே!”

தன்போக்கில் நஸீம் எங்கோ வெறித்தபடி பேசிக் கொண்டிருக்க மெதுவாய் தன் கரத்தை நகர்த்தி அவனின் கரம் மீது வைத்தாள்.உணர்வு பெற்றவனாய் அவள்புறம் பதட்டமாய் திரும்பியவனிடம் அருந்துவதற்கு நீர் வேண்டும் என்று செய்கை காட்டினாள் சிவகங்காவதி.

அங்கிருந்த குவளையில் நீர் ஊற்றி சிறிது சிறிதாய் அவளைப் பருகச் செய்தான்.அவன் அவளை விட்டு நகர எத்தனித்த நேரம் அவன் கரத்தை இன்னுமாய் அழுத்தியவள் படுக்கையில் எழுந்து அமர்வதற்கு முயன்றாள்.

அவளின் பின் தலையில் கை வைத்து எழுப்பி அமர்வதற்கு  உதவியவனை அவளருகிலேயே அமரச் செய்தாள்.

என்னவாயிற்று?ஏன் இத்துனை கோபமும் தவிப்பும்?”

என்னவென்று கேட்கிறாயா??எதற்காக இப்படி செய்தாய் ஏன் உன் உயிரை..”

இஷான்

“…”

தங்களுக்குச் சொந்தமான என் பெண்மையை கயவர்களிடமிருந்து காத்துக் கொள்வதற்கு எனக்கு வேறு வழி  தெரியவில்லை.அதனால் தான்”,எனும்போதே தொண்டை கரகரத்தது சிவகங்காவதிக்கு.

கங்கா!!!!”,என்றவன் அவளின் கன்னம் தாங்கியிருந்தான்.வார்த்தைகள் அடைபட்டு கொண்டதைப் போன்ற உணர்வு நஸீமிடத்தில்.

இருந்த பதட்டத்தில் ஏதேதோ பேசிவிட்டேன்.என்னை மன்னிப்பாயா?!”

எதற்காக இத்துனை பெரிய வார்த்தை பேசுகிறீர்கள்.நான் ஒன்றும் தவறாக எண்ணவில்லை.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.