(Reading time: 9 - 18 minutes)

என்னதண்டனை..என்னிடம் கூறக்கூடாது என்றால் வேண்டாம்..”

சாதரணமாய் பெண்களை கலங்கப் படுத்த எண்ணிணாலே என் ராஜ்ஜியத்தில் தண்டனை கடுமையாய் இருக்கும்.இப்போது அவன் கைவைக்கத் துணிந்தது என் ராஜ்ஜியத்தின் ராணி மீது கேட்கவும் வேண்டுமோ அவன் நிலைமை மிகவும் மோசம்..

மோசம் என்று கூறுவதைவிட கொடூரம் என்று தான் கூறவேண்டும்.உயிரோடு ஒருவன் அனுபவிக்கக் கூடாத அத்தனை கொடுமைகளையும் அவனுக்கு கொடுத்தாகிவிட்டது.இதற்கு மேல் பெண்ணின் மேல் கைவைப்பதற்ககு முன் இவர்களின் நிலையே அனைவருக்கும் நினைவிற்கு வரும்.”

அதற்குமேல் எதுவும் கேட்க விரும்பாதவளாய் அமைதி காத்தவள் இரு நொடிகளுக்குப் பின்,

என்ன விதமான மனநிலை இது!எதிர்த்து நிற்பவள் பெண்ணாய் இருந்தால் அவளை அடங்க வைப்பதற்காக கையில் எடுக்கும் ஒரே ஆயுதம் அவளின் கற்பும் ஒழுக்கமும் தான் இல்லையா!”

எல்லாரும் அப்படி கிடையாது..”

இருக்கலாம் ஆனால் அவர்களின் சரிவிகிதம் குறைவே.குறைவு என்பதை விட விரல்விட்டு எண்ணி விடலாம் என்றே கூற வேண்டும்.”

ம்ம்ம்

இது போகட்டும்..தங்களிடம் கேட்பதற்கு இன்னொரு விடயம் இருக்கிறது கேட்கலமா?”

என்ன அது எதுவாயினும் கேள்.”

தாங்கள் என்னை திருமணம் செய்ததன் நோக்கம் என்ன?”

அப்படியென்றால்!!புரியவில்லை..”

அதாவது எந்தவொரு லாபமுமின்றி தாங்கள் எதையும் செய்ய மட்டீர்கள் இல்லையா அப்படியிருக்க இந்த திருமணத்தால் தாங்கள் அடையும் லாபம் என்ன?”

கசந்த புன்னகையை உதிர்த்தவன் தன்னை திடப்படுத்திக் கொண்டு அவளை நேராய் நோக்கியவாறு,”உன்னை பணயம் வைத்து உன் தந்தையின் தேசத்தை அடையப் போவதாக எண்ணுகிறாயா கங்கா?”

அது அப்படியில்லை..நான்..”

இந்த நஸீம் போர்களில் நேர்மை கடைபிடிக்காதவனாக இருக்கலாம் ஆனால் எக்காரணம் கொண்டும் ஒரு பெண்ணின் உணர்வுகளை அடிமைப்படுத்தி எனக்கான தேவையை பூர்த்தி செய்து கொள்ள மாட்டேன்.”

தெரியும்..அப்படியானால் என்னை மணம் புரிந்த கட்டாயத்தினால் எனக்கு மனைவி யென்ற அங்கீகாரத்தை வழங்க நினைக்கிறீர்களா?”

என்ன பிதற்றல் இது கங்கா!!உலகில் எதை வேண்டுமானாலும் கட்டாயப்படுத்தி நம் வசம் ஆக்கிக் கொள்ள முடியும்.ஒருவர் மீதான அன்பைத் தவிர.எத்துனை விலை கொடுத்தும் அதை பெற முடியாது சகித்துக் கொண்டு வாழ ஆரம்பித்தாலும் ஒரு கட்டத்தில் உண்மை நிலை வெளிந்து விடும்.அப்படியிருக்க என்னால் எப்படி அதை செய்ய இயலும்?”

அப்படியானால்..தாங்களும்.. எனைப் போலவே…. காதல் வயப்பட்டிருக்கிறீர்களா?”

நஸீம் தன் காதுகளையே நம்பாதவனாய் சிவகங்காவதியையே பார்த்து சிலையென சமைந்திருந்தான். 

தொடரும்...

Episode 15

Episode 17

Go to Sivagangavathi story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.