(Reading time: 9 - 18 minutes)

கங்கா அன்று என்ன நடந்தது என்பதை தெளிவாய் கூறு.அவர்களிடம் எவ்வாறு சிக்கினாய்?”

அன்று நானும் வீரர்களும் எதிராளிகளோடு யுத்தம் செய்யத் தொடங்கினோம்.சிறிது நேரத்திற்குப் பின் மற்றவர்களை விட்டு என்னுடன் யுத்தம் செய்த வீரன் எனை தூரமாய் கொண்டு சென்றிருந்தான்.அதை கவனியாத நான் தாக்குதலிலேயே கவனமாய் இருந்திருக்கிறேன்.உண்மையை கூற வேண்டுமானால் என் கவனம் எதிலுமே இல்லை அந்த நேரத்தில்.சட்டென பின்புறமிருந்து என் தலையில் பலத்த அடி ஒன்று விழுந்தது.

அவர்களில் ஒருவன் பெரிய கட்டையை எடுத்து தாக்கியிருந்தான் போலும்.என் வேகம் அந்தநொடியில் தளர்ந்திருக்க அரை மயக்க நிலையில் அப்படியே எனைப் புரவியில் ஏற்றிச் சென்று மரங்களின் இருளில் நின்றனர்.

நம் வீரர்கள் எனைத் தேட ஆரம்பித்து கிடைக்கவில்லை என்றவுடன் அங்கிருந்து கிளம்பிய போதே பொழுது புலர்ந்திருந்தது.அப்போது என்னிடமிருந்த ஒரே நம்பிக்கை தாங்கள் சிறைபிடிக்கபடாத பட்சத்தில் எனை காப்பாற்றுவதற்கு நிச்சயம் வருவீர்கள் என்பதே.

நம் வீரர்கள் சென்ற பிறகும் அவர்கள் என்னை எங்கும் அழைத்துச் செல்ல எத்தனிக்கவில்லை.நான் மயக்கை நிலையிலேயே இருந்ததால் அவர்கள் அங்கேயே அமர்ந்து மதுவை ருசிக்க ஆரம்பித்திருந்தனர்.

எனைப் பற்றிய விவரம் யார் மூலம் சென்றது என்பதெதுவும் தெரியவில்லை ஆனால் எனக்கு தங்களின் மொழி புரியாது என்ற எண்ணத்தில் அவர்களுக்குள் உரையாடிக் கொண்டனர்.

நமக்கு வந்த உத்தரவின்படி இவளை இப்போதே இங்கேயே கொன்றுவிடுவோம்.அந்த நஸீம் அவன் எல்லைக்குள் வந்துவிட்டால் நம்மால் இவள் நிழலைக் கூட தொட முடியாது

இவளை கொல்லத்தான் போகிறோம் ஆனால் நமக்கு கிடைத்த உத்தரவுக்காக அல்ல நம்மை எதிர்த்து யுத்தம் செய்ததற்காக.கேவலம் ஒரு பெண் நம்மை இப்படி தாக்குவதா இதற்கான தண்டனையே இவளின் மரணம்.”

அதற்குள் தடுமாற்றத்தோடு எழுந்து நின்ற என்னை பார்த்து ஏளனப் புன்னகை புரிந்தவாறு இருவரும் தள்ளாட்டத்தோடு எழுந்து அருகில் வந்தனர்.

எப்படியாவது அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்பதை தவிர வேறு சிந்தினையில்லாமல் போனது எனக்கு.எதையும் சிந்திக்காமல் அருகிலிருந்த மரக்கிளையை எடுத்து அவர்களை கண்மன் தெரியாமல் தாக்கினேன்.

ஒரு கட்டத்திற்கு மேல் பார்வைகள் மங்க ஆரம்பிக்க என் வேகம் மீண்டும் குறைந்தது.அந்த இடைவெளியைப் பயன்படுத்தி என்னை ஒருவன் பின்னிருந்து கைகளை வளைத்துப் பிடித்திருந்தான்.மற்றவனோ கண்களில் போதை வழிய என்னருகில் வந்து,

பெண்ணாய் பிறந்து இத்துனை சாதுரியம் இருக்கக் கூடாது உன்னை கொல்லுவதற்காகவே இங்கு அழைத்து வந்தோம் ஆனால் அதற்கும் மேலான அவமானத்தை நீ சந்திக்காமல் மரணத்தை தழுவினால் நீ செய்த தவறு உனக்குப் புரியாமலே போய்விடும்.

மிகப்பெரும் தலைவனான இந்துஸ்தான ஆளுநரின் மனைவி இப்போது எங்களின் ஆசைநாயகி.தேவையற்ற உன் வீரத்தால் நீயே ஏற்டுத்திக் கொண்ட இன்னல் இது.அந்தோ பரிதாபம்!!காப்பாற்றக் கூட ஆள் இன்றி காக்கைக்கும் கழுகுக்கும் இரையாகப் போகிறாய்”,என்றவாறே என்மேல் கை வைக்க வந்த நொடி முழுபலம் கொண்டு என் கையை விடுவித்துக் கொண்டு ஓட எண்ணிணேன்.

ஓரளவுக்கு மேல் என்னால் முடியாமல் போக என் கூந்தலை இறுக்கமாக பற்றியிருந்தான் ஒருவன்.அப்போது உயிரை விட மேலான என் பெண்மையை காத்துக் கொள்வதற்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை இஷான்.

அதனால் தான் என் கழுத்தில் பத்திரப்படுத்தியிருந்த விஷத்தை அருந்திவிட்டேன்.தலையில் ஏற்பட்ட அடியின் தாக்காத்தால் உடனே மயங்கியும் விழுந்திருப்பேன்.அதை கண்ட அவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கையைப் பற்றி யோசிப்பதற்குள் தாங்கள் வந்திருப்பீர்கள் என்றே தோன்றுகிறது.இது தான் நடந்தது.”

கடினப்பட்டு ஒரு வழியாய் அனைத்தையும் கூறி முடித்தவள் அப்போதுதான் அவன் முகம் நோக்க இரத்தமென சிவந்த கண்களோடு அவ்விடத்தை விட்டு எழுந்திருந்தான்.

சிவகங்காவதியும் தன் இயலாமையால் அவனைத் தடுக்காது அந்த திசையையே நோக்கியிருந்தாள்.சில மணி நேரங்களுக்குப் பின் மாலை மயங்கும் நேரத்தில் மீண்டும் அவளை சந்திக்க வந்தான் நஸீம்.

இப்போது சிவகங்காவதி சற்று நன்றாகவே தெளிந்திருந்தாள்.கடந்தமுறை போலவே இப்போதும் அவளருகில் அமர்ந்தவன்,

இப்போது எப்படி இருக்கிறாய் கங்கா?ஏதேனும் வேண்டுமா?”

வேண்டாம்.நன்றாகவே இருக்கிறேன்.காலையில் அத்துனை வேகமாய் எங்கு சென்றீர்கள் எதுவும் குழப்பமில்லையே?”

இல்லை.குழப்பத்திற்கான விடை நீ அளித்துவிட்டதால் நம்மிடம் சிறைப்பட்ட விருந்தனர்களுக்கு நரகத்தை கண்முன்னே காட்டிவிட்டு வந்தேன்.அதனால் தான் சற்று தாமதம்

என்ன!!அந்த இருவரையும் கைது செய்துவிட்டீர்களா??”

ஆம் அன்றையே தினமே அவர்களை பிடித்துவிட்டோம்.இருந்தும் நீ கண் விழித்து நடந்தவற்றை கூறியபின்பு தான் அவர்களுக்கான தண்டனையை முடிவு செய்ய வேண்டும் என எண்ணியிருந்தேன்.இப்போது திருப்தியடைந்து விட்டேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.