(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - சிவகங்காவதி - 17 - ஸ்ரீ

sivaGangavathy

குறிஞ்சித் திணை கேழற் பத்து

காட்டுப் பன்றியைக் கேழல் என்றும், பன்றி என்றும் குறிப்பிட்டு தலைவன் செயல் அந்தப் பன்றி போல உள்ளதாக உள்ளுறைப் பொருள் வைத்து, அது வாழும் நாட்டை உடையவன் எனக் கூறும் 10 பாடல்கள் இப்பகுதியில் உள்ளன.

மென் தினை மேய்ந்த தறுகண் பன்றி

வன் கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன்

எந்தை அறிதல் அஞ்சிக்கொல்?

அதுவே மன்ற வாராமையே. -- 261  

தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

மென்மையான புல் தடையில் விளையும் தினையை மேய்ந்த பன்றி மலையின் கல் அடுக்கத்தில் உறங்கும் நாடன் அவன்.

உன் தந்தைக்குத் தெரிந்துவிடும் என அஞ்சி வராமல் இருக்கிறான் போலும்.

ஸீமால் இன்னுமும் அவன் கேட்ட வார்த்தைகளை உண்மையென நம்ப முடியவில்லை.சிவகங்காவதி தைரியமிக்கவள் தான் இருந்தும் இந்த விடயத்தில் தயக்கமுடைத்து அவள் இப்படி கேட்டது ஒருபுறம் மட்டட்ற்ற மகிழ்ச்சி அளித்தாலும் அதையும் கடந்த வியப்பு அவன் விழிகளில் தெரிந்தது.

அவனிடத்தில் பதில் இல்லாமல் போகவே சற்றே தொண்டையை செருமியவாறு மீண்டும் அவனை உயிர்ப்பித்தாள்.

“ஏதேனும் தவறாகக் கேட்டுவிட்டேனா?எனக்குச் சில குழப்பங்களுக்ககான விடை தெரிந்தாக வேண்டும் அதனால் தான் நேரடியாகவே தங்களிடம் இதை கேட்கிறேன்.”

“இல்லை தவறென்று ஒன்றுமில்லை.அதே நேரம் நான் கேட்ட செய்தியை என்னால் நம்ப முடியாமல் பிரமித்து நிற்கிறேன்.உன் கேள்விக்கான பதில் ஆம் என்றால் என்ன செய்வாய் கங்கா!”அத்தனை மென்மையை அவன் குரலில் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.அவளுக்கோ காற்றுகுமிழ்கள் வயிற்றிலிருந்து நாபிக்கமலத்திற்கு ஊடுருவுவதாய் உணர்ந்தாள்.

“நான்..நான்..”,

அவளின் இந்த பரிமாணம் அவனுக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்று ஆயிற்றே.கடந்த முறை தங்களுக்கான இடத்தில் அவளின் தடுமாற்றம் அவனை எந்த நிலைக்கு தள்ளியது என்பது நினைவில் வந்தது.

“உன்னால் எழுந்து நடக்க முடியுமா?சோர்வாக இருந்தால் வேண்டாம்.”

“இல்லை அப்படி ஒன்றும் இல்லை போகலாம்.”

மெதுவாய் எழுந்து அமர்ந்தவளோடு அவள் நடைக்கு ஈடுகொடுத்து நடக்க ஆரம்பித்தான் இஷான்.அவள் அமைதியாகவே வருவதை கண்டவன்,

“ஏதோ தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினாயே என்ன அது?”

“தாங்கள் பேரரசரை சந்திக்கச் சென்றிருந்த இரவு என் அறையின் வெளியே இருவரின் உரையாடலைக் கேட்க நேர்ந்தது.

அவர்கள் இருவரும் தங்களை கொல்ல வந்ததாகவும் அதற்குள் நம் திருமணம் எதிர்பாராமல் நடந்துவிட்டதாகவும் இதனால் பேரரசர் உட்பட பலரின் துவேசத்தை தாங்கள் சம்பாதித்து விட்டதாகவும் இன்னும் ஏதேதோ.

அப்போது அவர்கள் கூறியது தான் தாங்கள் என்னை இங்கு வைத்திருப்பதற்கு காரணம் என்னை வைத்து என் தாய்நாட்டை கைப்பற்றுவதற்காக என்று.உண்மையை மறைக்காமல் கூற வேண்டுமானால் நான் அதை நம்பியது உண்மை.என்னை ஏமாற்றுவதற்காகவே காதல் நாடகம் நடத்துகிறீர்கள் என்று நம்பி குழம்பி மனம் வெதும்பிப் போனேன்.

ஆனால் தங்களை சிறைசெய்ததாக செய்தி வந்த போது தான் எதையோ சிந்தித்தால் இது என் மூளைக்கு உரைத்தது.அன்று நின்றிருந்த இருவரும் தங்களை கொல்ல வந்ததாக கூறினார்கள் என்பது.

ஓரளவு என் குழப்பம் தீர்ந்து அவர்கள் நம் திருமணத்தைப் பற்றி கூறிய அனைத்தும் பொய்யாகவே இருக்கும் என்ற முடிவுக்கு வந்து தங்களைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பிச் சென்று பிரச்சனையில் சிக்கிக் கொண்டேன்.”

கங்கா நீ கூறுவதெல்லாம் கேட்கும்போது என் மனம் பரிதவிக்கிறது.என் ராஜ்ஜியத்தில் மதவெறியும் இனவெறியும் இத்துனை பெரிய பிம்பங்களாய் தலை விரித்தாடுகிறது என்பதை என்னால் நம்பமுடியவில்லை.

எந்த ஒரு கட்டத்திலும் என் குடிமக்களிடையே எவ்வித பேதமும் காட்டியதில்லை நான்.அதே போன்று எனக்கு ரஜபுத்திர நண்பர்களும் உண்டு.அப்படியிருக்க என் தனி வாழ்க்கையில் இத்துனை பெரிய முடிவுகளை எடுக்க இவர்களுக்கு யார் அதிகாரம் அளித்தது.”

தங்களின் கவலை எனக்குப் புரிகிறது.நல்ல வேளையாக நான் தங்களை புரிந்து கொண்டேனே அதற்காகவே என் ஈசனுக்கு கோடிமுறை நன்றி கூற வேண்டும்.”

இதை கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இருந்தாலும் எப்போதிருந்து இந்த மாற்றம் என்று தெரிந்து கொள்ளலாமா?”

சற்றே முகம் சிவந்தவளாய் அவன்புறம் ஓரப்பார்வை வீசியவாறு பேச ஆரம்பித்தாள் சிவகங்காவதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.