Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 05 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 05 - பிரேமா சுப்பையா

Ethir ethire neeyum naanum

மர் கெஞ்சி அழைத்ததால் இன்று கடற்கரைக்கு வந்திருந்தாள்  . பொன்னி..இத்தனை நாட்களில் அவள் வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்ததில்லை அவன் ...எல்லை மீறிய பேச்சுக்கள் கூட இருந்ததில்லை ... அவ்வளவு ஏன் ஆளில்லா நேரத்தில் தான் அவளை காதல் பார்வை பார்ப்பான் இருவருமே ஒரு வித சுவாரசியத்தை உணரவே செய்தனர் ..இருந்தும் இருவருமே ஒரு இரண்டு வருடம் கழித்தே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணினர். அத்தகைய அமர் ..காதலின் முதல் வருட கொண்டாட்டத்தை அவளோடு கடற்கரையில் கொண்டாட எண்ணினான் ...மறுப்பு சொல்ல இயலவில்லை அவளால் ...

 அந்த ஹர்ஷினி இன்னும் கூட ஜொள்ளு விட்டு கொண்டிருக்கிறாள் அதை தவிர அமருக்கும், பொன்னிக்கும்  இடையில் பெரிதாய் எந்த சலனமும் இல்லை.

அவன் வருகைக்காக காத்திருக்கிறாள் அவள் ..அவன் கையில் மலர்கொத்தோடு வர ...அவனை முதல் முதலாக அவள் கட்டுப்பாட்டையும் மீறி ரசிக்கிறது அவள் மனம் ...அவனோடு இணைந்து இதே கடற்கரையில் நடக்க துடித்தது அவள் மனம் ..மச் என்கிறது அவள் உதடுகள் ...

“என்ன மேடம் ரொம்ப சலிப்பு?” என்று கேட்டபடி அவளிடம் பூங்கொத்தை கொடுத்து வாழ்த்து சொல்ல அதை ரசித்து வாங்கியவள் ..  “.அமர் ..உங்க கையை நீட்டுங்க” என்று சொல்ல

“ஏன்” என்று கேட்காமல் நீட்டியவனின் கையை பற்ற ... இவளின்  கை நடுக்கமும் ...சில்லிட்டிருந்த அவளின் உள்ளங்கையும் புன்னகை வரவைத்தது அவனுக்கு.

“ஏய் ..என்ன இது ..ஒரு வருஷமா லவ் பன்றோம் ..இதென்ன உன் கை இப்படி நடுங்குது ம்” என்று அவன் புருவம் தூக்க ...

“தெரியல” என்றவள் முகமும் நடுங்கியது ..!!

"என்ன பொன்ஸ்?" என்று கேட்டவனுக்கு.. "அண்ணன் போன் பண்ணான் ...ஏதோ சம்மந்தம் ...பயமா இருக்கு" என்று அவளின் நாக்கு வறண்டு போனது.  

"ரிலாக்ஸ் மா ..நீ பேசி பாரு ...உன்னால முடியலைன்னா எனக்கு கால் பண்ணு நான் பார்த்துக்கிறேன்” என்று தைரியம் சொல்ல "ம்" என்று தலையை ஆட்டியவள் .. “ஒரு அஞ்சு நாள் லீவ் போடுறேன் அமர் ...பட் கண்டிப்பா   அவங்க சம்மதம் வாங்கிடுவேன் . நான் வரேன் அமர்” என்று அவனுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு செல்ல எப்போதும் போல் அவளின் அல்வா அவளுக்காக காத்திருக்க இவள்… அவன் முகத்தை பார்க்காமல் வண்டியில் ஏறி அமர்ந்தாள். அவனும்,  இவளுக்கு முதலில் திருமணம் நடத்துவதால் தன் மீது கோபத்தில் இருக்கிறாள் என்று நினைத்து எதுவும் பேசவில்லை.

அவளுக்கோ குற்ற உணர்வு. “எத்தனை பாடு பட்டான் இவன் தனக்காக ...? அன்னையின் பெரும் பயமே இந்த காதல் தானே! இன்று அதைத்தானே நானும் செய்து வந்து நிற்கிறேன் ...காதலில் வென்று வாழ்க்கையில் நானும், அமரும் ஜெயித்து நிற்கும் போது தான் நான் சரியான ஒருவனை தேர்ந்தெடுத்துள்ளேன் என்று நிம்மதி கொள்வர் ..அதுவரை இவர்களை ...இவர்களின்  நியாமான கோப தாபங்களை சமாளிக்க வேண்டுமே!”

அமைதியாகவே வீடு வந்து சேர்ந்தாள் பொன்னி. பெற்றோரிடம்இருந்து  பலத்த வரவேற்பு கிடைத்தது. எதையும் பொருட்படுத்தவில்லை அவள்.

நேராக குளித்து முடித்து சக்தியை காண சென்றுவிட்டாள்.

" சக்தி நீ இருக்கிற தைரியத்துல தான் நான் எஸ் சொல்லிட்டேன் நீதான் எனக்கு துணையா நிக்கணும்" என்று மனமார வேண்டி கொண்டு மனதில் மீண்டும் ஒருமுறை அமரை நினைக்க "எத்தனை பாடு பட்டேனும் தனது காதலில் வெற்றி காண வேண்டும்"  என்று தனக்குள் வைராக்கியத்தை ஏற்றிக் கொண்டு அவள் செல்ல

அவள் பட போகும் பாட்டை எண்ணி வருந்தலானான் அந்த சக்தி.

நேராக வீட்டுக்கு சென்றவளிடம் " அம்மாடி ஒரு வருஷத்துக்கு முன்னாடி வந்த சம்மந்தம் இப்ப மறுபடியும் வந்திருக்கு"  என்று கண்மணி சொல்ல

" ஏன் மறுபடியும்?"  என்று இவள் கேள்வியாய் பார்க்க அதை புரிந்துகொண்ட அவள் அன்னையோ " அப்போ  மாப்பிள்ளை உன்னை மாதிரியே கல்யாணம் வேண்டாம்னு அடம் பிடிச்சாராம்"

" இப்ப என்னவாம்?"  எரிச்சல் அவள் குரலில் ...

“என் பொன்னியோட அழகுல மயங்கிட்டாராம் மாப்பிள்ளை” என்று கண்மணி  கேலி செய்ய இவள் முறைத்தாள்.

“இல்ல மா அவங்க அம்மாக்கு உன்னை ரொம்ப பிடிச்சு போச்சு அதான் பையனை உருட்டி மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சிருக்காங்க” என்று பெருமை பேச

" மா அப்படி உருட்டி மிரட்டி எதுக்கு செய்யணும்? இல்ல நான் தெரியாம தான் கேக்கிறேன் எனக்கு என்ன குறைச்சல்னு என்னை பிடிக்காத ஒருத்தனுக்கு என்னை கட்டி வைக்க பார்க்குறீங்க?"  என்று  வார்த்தைகளை சூடாக விட

"ங்கே"  பார்வை பார்த்தாள் அவள் அன்னை. தன் மகள் தான் அந்த வீட்டு மருமகளாய் வர வேண்டும் என்று ஒரு வருடமாக அந்த பெண்மணி போராடி இருந்துள்ளார் என்று அறிந்த போது அவ்வளவு பெருமையாய் இருந்தது கண்மணிக்கு. அது போல் இவளும் பெருமை கொள்வாள் என்றாள் இவள் என்னமோ குதர்க்கமாக யோசிக்கிறாள் என்று எண்ணினாள் கண்மணி.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Prama Subbiah's Popular stories in Chillzee KiMo

  • Idhu enna maayam..?.!Idhu enna maayam..?.!
  • Kanamoochi re re!Kanamoochi re re!
  • Unnil tholainthavan naanadiUnnil tholainthavan naanadi
  • Vaa.. vaa.. en devathaiye.!Vaa.. vaa.. en devathaiye.!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 05 - பிரேமா சுப்பையாAbiMahesh 2019-06-07 21:38
Waat.. Amar Hero illaya :Q: Great Twist Mam :yes: Pobs paavam! Waiting for the next epi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 05 - பிரேமா சுப்பையாmadhumathi9 2019-06-07 20:31
:Q: amarpatri solvathu unmaiyaa?nice epi. (y) waiting to read more. :thnkx: 4 this epi. :GL: ponni manathu eppadivazhikkumbutenna kaaranam.adutha epiyai padikka aarvamaaga irukkirathu. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 05 - பிரேமா சுப்பையாAdharv 2019-06-07 20:04
💔💔 ponns Oda heart-i break panitingale ji facepalm anyway ippadi Oru pachondhi steam kitta irundhu escape agitanga.....but didn't expect amar.would be so.mean but as harsh said avanga avanga life.... :-)

Anyway soanpapdi and hawla are not.meant to be bils 😝😝 interesting update ma'am 👏 👏👏 👏 ponns Oda mom.is really sweet and now ponns cheer up..
Look forward to read next update. Thank you and.keep rocking.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top