(Reading time: 10 - 20 minutes)

அன்றைய இரவு என் மீதான உன் கோபம் வெகுவாய் எனை பாதித்தது.இருந்தும் காரணங்கள் கூறி உன் மனதை மாற்ற விருப்பம் இல்லை எனக்கு.எனவே அமைதியாகவே இருந்தேன்.

அதுமட்டுமன்றி என் அன்பை உன்னிடம் கூறி அதன் மூலமாக உன் மனதில் இடம்பிடித்தால் உன் விருப்பம் என்ற ஒன்றே தெரியாமல் போய்விடும் அதுவும் என் அமைதிக்கான ஒரு காரணம்.ஆனால் உண்மை என்னவெனில்..”

என்றவன் அப்படியே நிறுத்திவிட்டு அவள் விழி நோக்க அத்துனை நேரம் அவன் கூறிய அனைத்தையும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தவள் அவன் விழி நோக்கி நின்றாள்.அந்த கண்கள் எனும் காந்தத்தால் ஈர்க்கப்பட்டவனாய் இரு கரங்களையும் எடுத்து தன் மர்பில் வைத்தவன்,

உண்மை என்னவெனில் உனைக் கண்ட ஒவ்வொரு நொடியும் என் மனமும் சிந்தையும் தன் வசம் இழந்து கொண்டேயிருந்தது.அன்று நம் நந்தவனத்தில் கண்ணாடியின் முன் நீ கால்கள் தளர என்னிடம் அடைக்கலம் புகுந்ததைப் போலவே..”

என்று முடித்தபோது வேகமாய் தன் கைகளை எடுத்து முகத்தை அழுந்த மூடிக்கொண்டாள் சிவகங்காவதி.அதை வெகுவாய் ரசித்தவனின் முகம் மீண்டும் சிறு கலக்கத்தை பிரதிலித்தது.

அவனிடமிருந்து எவ்வித எதிர்ச் செயலும் இல்லாமல் போகவே கைகளை இறக்கியவள் அவனைப் பார்த்து என்னவென்பதாய் அவன் கைகளை அழுந்தப் பற்றினாள்.

ஒன்றுமில்லை கங்கா நான் என்ன தான் காரணங்கள் கூறி என் செயல்களை நியாயப்படுத்தினாலும் நம் இருவருக்குமான வேற்றுமைகள் அதிகம்.வயது முதல் மதம் வரை அனைத்துமே.அப்படியிருந்தும் எனை முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறாயா?உனக்கு எந்தவித கட்டாயமும் இல்லை.

நீ மறுத்துப் பேசுவதால் உனக்கோ உன் தாய் நாட்டிற்கோ என்னால் எவ்வித ஆபத்தும் நேராது.எனவே மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறிவிடு கங்கா

தன் மீதான அவன் அக்கறையை கண்டவளுக்கு இதழ்கள் அதுவாய் மலர்ந்தன.

தாங்கள் என்னை எப்படி அழைக்கிறீர்கள்?”

என்ன?!!”

என் பெயரை எவ்வாறு உச்சரிக்கிறீர்கள்?”

கங்கா..”

இந்த ஒரு  சான்று போதும் நான் தங்களை மனதார காதலிக்கிறேன் என்பதற்கு.உங்களைத் தவிர என்னுடைய இப்பிறவியில் யாருக்கும் இந்த உரிமை அளிக்கப்படமாட்டாது.

என் ஈசன் சாட்சியாய் உங்களின் அல்லாஹ் சாட்சியாய் நடந்த இந்த திருமணம் ஒரு காலத்திலும் பொய்த்து போகாது இஷான்..”

நிறைவாய் ஒரு புன்னகை அவனிடத்தில்,”என்னையும் இவ்வாறு அழைக்கும் உரிமை என் கங்காவைத் தவிர யாருக்கும் கிடையாது.

மனம் நெகிழ்ந்திருக்கிறது கங்கா.தாதியை அன்றி இப்பிறவியில் எனக்கென யரும் இல்லை என்று நினைத்திருந்தேன்.ஆனால் இப்போதோ ஒட்டுமொத்த அகிலமும் என் பின் இருப்பதை போன்ற ஒருதிடம் ஏற்பட்டிருக்கிறது.

அதற்காக உனக்கு என் மனமார்ந்த நன்றிகள்.அது மட்டுமன்றி இப்போதே உன் தாய்க்கு நம் நிக்காஹ்பற்றிய செய்தியை கூறி அவர்களை இங்கு வர வழைக்கிறேன்.

அதுமட்டுமல்லாது உன் உயிர்க்கு இருக்கும் ஆபத்தின் ஆரம்ப புள்ளியை கண்டறிந்து வேரோடு சாய்த்த நொடி என் காதலை என் அன்பை மன நிறைவோடு உன்னிடத்தில் வெளிப்டுத்துவேன்.இன்னும் இருதினங்கள் அவகாசம் கொடு அதன் பின்னான உன் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியை மட்டுமே கொண்டிருக்கும்.

அதுவரை இஷான் என்பவனை கொடுமைக்கார கொடுங்கோலனாகவே மனதில் பதிய வைத்துக் கொள்.இப்போது சென்று நன்றாக ஓய்வெடு”,என்றவன் அவளை எதுவும் பேச விடாமல் அவளிடத்திற்கு அனுப்பி வைத்தான்

தொடரும்...

Episode 16

Episode 18

Go to Sivagangavathi story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.