(Reading time: 9 - 18 minutes)

அடிங் கொயால போட்டனா. நான் என்ன உங்கள wish பண்ணவா வரச் சொன்னேன். இதில் இருந்து escape ஆக ஒரு வழி சொல்லுங்கனாஎன்று மிரட்டும் தொனியில் பேசினாள் நிலா.

“sorry darling கோச்சிக்காத. பையன நேர்ல தான் பார்க்களனு சொன்ன போட்டோவையாவது பார்த்தியாஎன்றாள் ஜான்சி.

ஏன் டி போட்டோவ பார்த்து நான் என்ன கல்யாணமா பண்ணிக்க போறேன்என்றாள் நிலா.

அதுக்கு இல்லடி, போட்டோ பார்த்து, “பையன் பார்க்க நல்லா இல்லநு”, உங்க அப்பா கிட்டச் சொல்லிட வேண்டிதானேஎன்றாள் ஜான்சி.

நீ வேற, போன ஒரு வாரமா எங்க வீட்டல அவன் சுப்ரபாதம் தான் ஓடுது. பையன் அவ்வளவு அழகு, பார்க்க நல்லா இருக்கான் அது இது நு. அதனால நீ சொன்னதலாம் சொல்லிக் கண்டிப்பா நிறுத்த முடியாதுஎன்றாள் நிலா.

பையன் என்ன பண்றானு சொன்ன, போட்டோ studioவாஎன்றாள் ராதிகா.

“Modeling போட்டோகிராப்பர். சொந்தமா modelling studio வச்சிருக்கானாம்என்று பதில் அளித்தாள் நிலா.

“modellingநா இந்த short dress எல்லாம் போட்டுகிட்டு எப்போவும் 4, 5 பொண்ணுங்க இருப்பாங்களே, அது தானே. அதயே reasonஆ சொல்லி, பையன் character சரி இருக்காதுனு சொல்லி பேசி பாரு.” என்றாள் ராதிகா.

இல்ல ராதி, ஒரு ஆள பார்க்காம, பழகாம அவங்கள பற்றி தப்பா பேசுறது தப்பு. அதுவும் ஒருந்தங்க character பத்தி எல்லாம் தப்பா சொல்லி, அதுனால அவங்களுக்கு ஒரு கொட்ட பேரு எல்லாம் வரும். அது வேணாம்என்று பதில் அளித்தாள் நிலா.

உன் தலைக்கு மேலே வெள்ளம் போனாலும், நீ மாற மாட்டியேஎன கலாய்த்தாள் ராதிகா.

ஏண் டி, நீ அந்த பையன பத்தி சொல்றது எல்லாம் பார்த்தா, நீ லவ் பண்ணனுனு திரியிற ஆளு மாதிரிதான் இருக்கான். பேசாமல் அவனையே கல்யாணம் பண்ணிக்கோஎன்றாள் நிஷா.

எதுக்கு, என் கல்யாணாத்துல வந்து வயிறு முட்டச் சாப்பிடலாம் நு plan பண்றீயா. கொன்னுடுவேன்.” என்று கூறி நிறுத்திவிட்டுஉங்களுக்கெல்லாம் சோறு போட்டு வளத்ததே வேஷ்ட்டு போலஎன்று கலாய்த்தாள் நிலா.

அடி பாவி, என்னமோ நாங்க எல்லாம் அனாதை தெட்டில்ல கிடந்த மாதிரியும், நீ எங்கள எல்லாம் சோறு போட்டு வளர்த்த மாதிரியும் பேசுறஎன்று அவள் காலை வாரினாள் ராதிகா.

சரி டி கோச்சிக்காம ஒரு idea சொல்லுங்கடிஎன்றால் நிலா.

அவனைக் கல்யாணமும் பண்ணிக்க முடியாது, உங்க வீட்டிலையும் கல்யாணம் வேண்டானு சொல்ல முடியாது. அப்போ இதுக்கு ஒரே வழிதான் இருக்குஎன்றாள் ஜான்சி.

என்ன வழி டிஎன்றாள் நிலா ஆர்வமாக.

பேசாம அந்த பையன நேரில் பார்த்து, கல்யாணத்தில் இஷ்டம் இல்லனு சொல்லி அந்த பையனையே கல்யாணத்தை நிறுத்த சொல்லிடுஎன்றாள் ஜான்சி.

என்ன டி சொல்றஎன்றாள் நிலா.

ஆமா நிலா எனக்கு கூட இந்த யோசனை நல்லதான் படுது. அன்னைக்கு அந்த பையன் 5 நிமிசம் கூட wait பண்ணாம போயிடானு சொன்ன இல்ல. May be அவனுக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம் இல்லஎன்றாள் நிஷா.

விருப்பம் இல்லனா, அப்புறம் ஏன் டி அங்க வந்து அவ்வளவு நேரம் இருக்கனும். இது சரியா வருமாஎன்றாள் நிலா சந்தேகமாக.

உனக்கு கூடத்தான் விருப்பம் இல்லை. ஆனால் உன் parentsகாக நீ போகலையா. அதே மாதிரி இருக்கலாம் இல்ல. அப்படியே உன்னை கட்டிகிறதுல விருப்பம் இருந்தாலும், உனக்கு பிடிக்கலனு சொன்னா கண்டிபா யோசிப்பாங்க. அவங்க family பத்தி நீ சொல்றத எல்லாம் பார்த்தா decentஆ தான் தெரியுது. பிடிக்கலனு சொன்ன கட்டாயம் படுத்தி, kidnap சீன் எல்லாம் ஒன்னும் இருக்காதுனுதான் தோனுதுஎன்றாள் ஜான்சி.

மச்சி ஒன்னுமே செய்யாம இருந்துட்டு வருத்தம் படுறதுக்கு, ஆனது ஆச்சினு இதை try பண்ணி பாரு. workout ஆகும்னு தான் தோனுதுஎன்றாள் ராதிகா.

அவர்கள் சொல்வது நிலாவிற்குச் சரி என்று தோன்றியது. அதையும் செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தாள்.

பிறகு மத்த விஷயங்கள் எல்லாம் பேசி விட்டு அந்த சங்கம் கலைந்தது.

மறுநாள் தன் studioவில் அமர்ந்து laptop screenஐயே உற்று பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வைதான் அங்கு இருந்ததே தவிர அவன் எண்ணம் எங்கோ அலைந்து கொண்டிருந்தது. அவனைச் சுற்றி நடப்பது எதுவும் அவனுக்குப் புலப்படவில்லை.

அவன் அமைதியைக் கலைப்பது போல் அவன் laptop சத்தம் போட, அதைப் பார்த்தான் ரகு. அவனது கல்லூரி தோழி ஆர்த்தி skypeல் video call செய்தாள்.

அதை attend செய்துஹாலோ ஆர்த்தி. எப்படி இருக்கஎன்றான் சுரத்தையே இல்லாமல்.

ஹாய் டா நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கஎன்று உற்சாகமாக கேட்டாள்.

நல்லா இருக்கேன் டிஎன்று வார்த்தை அளவில் பதில் சொன்னான் ரகு.

டேய் என்ன டா ஆச்சி. Dullஆ இருக்கஎன்று அவன் பேச்சை வைத்தே கண்டுபிடித்தால் ஆர்த்தி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.