Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 03 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Change font size:
Pin It

தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 03 - சசிரேகா

En ithayam kavarntha thamaraiye

ட்டன்சத்திரம்

கெட்டிமேளம் கெட்டிமேளம்....

மாங்கல்யம் தந்துனானேனா... என ஐயர் மந்திரங்கள் முழங்கியபடியே மாங்கல்யத்தை தர அதை வீரபாண்டியன் தன் கையில் வாங்கியதும் கைகள் நடுங்குவதைக்கண்டு நொந்துப் போனவன் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த தாமரையின் முகத்தைப் பார்த்தான்.

அவளோ அமைதியாக இருந்தாள். என்னதான் அவள் சம்மதம் என்று சொன்னதாக சண்முகம் சொன்னாலும் அவனுக்கு ஒரு தயக்கம் சின்ன சந்தேகம் தன் மனதில் இருக்கும் கேள்விக்கு பதில் தெரிந்துக் கொண்டே ஆக வேண்டும் என மனது போராடியது.

ஆனால் இந்நேரம் எப்படி அவளிடம் இதைப்பற்றி கேட்பது, மணமேடையில் அமர்ந்தாயிற்று திருமணம் நின்றதால் வந்திருந்த மக்களில் பாதிக்கு மேல் சென்றிருந்தாலும் சண்முகத்தின் சொந்த பந்தம், நண்பர்கள், வியாபார கூட்டாளிகள் அவர்களின் குடும்பங்கள் இன்னும் கிளம்பாமல் இருந்த படியால் சட்டென வீரபாண்டியன் மாப்பிள்ளையானதும் அனைவருக்கும் ஒருவித ஆர்வமும் அதிர்ச்சியும் ஏற்பட அமைதியாக அங்கிருந்த சேர்களில் அமர்ந்து திருமணத்தை காணலானார்கள்.

சற்று நேரம் முன்பு....

அடிபட்டு கிடந்த வீராவை சண்முகமே கைதாங்கலாக எழுப்பினார்

என்னாச்சி சார்என ஆர்வமாக கேட்க அவரோ

வாங்க மாப்பிள்ளைஎன சிரித்தபடியே சொல்ல தன்னை மாப்பிள்ளை என்றதுமே புரிந்துக் கொண்டான் வீரா.

அவரின் மகிழ்ச்சியில் பாதியை கடன் வாங்கிக் கொண்டு சிரிக்க முடியாமல் சிரித்தான். அவரும் அவனை அழைத்துக் கொண்டு மணமகன் அறைக்குச் சென்றார்.

மாப்பிள்ளை குளிச்சிட்டு வந்துடறீங்களாஎன கேட்க அவனோ நிற்கவே முடியாமல் தடுமாறினான் இதில் எப்படி குளிக்கறது என தெரியாமல் முழித்தான். அவனின் பரிதாபமான நிலைமையைக்கண்ட சண்முகமோ

எனக்கு பையன் இல்லை, அதனால என் பொண்ணு தாமரையை பையனா நினைச்சி வளர்த்தேன். இப்ப உங்களை பார்க்கறப்ப எனக்கு ஒண்ணு தோணுது சொல்லவா மாப்பிள்ளை

சொல்லுங்க சார்

என்னை நீங்க அப்பாவா நினைச்சிக்குங்க, நான் உங்களை மகனா நினைச்சிக்கிறேன் வாங்க உங்களை நான் குளிப்பாட்டி விடறேன்என சொல்ல அவன் ஒரு நிமிடம் அவரின் பேச்சால் உறைந்து நின்றான்.

தந்தை மகன் உறவு எப்படியிருக்க வேண்டும் என தன் தந்தை வெங்கடாச்சலத்திடம் எதிர்பார்த்த ஆசைகளில் ஒன்றுதான் மகனை தந்தையே குளிப்பாட்டுவது, ஏனோ வெங்கடாச்சலம் வீராவை விட மாணிக்கத்தின் மீதே அளவு கடந்த அன்பை வைத்திருந்தார்.

சாவித்ரிக்கு எல்லாமே வீராவாக இருந்தபடியால் தாய் தனக்கு செய்யும் அனைத்தும் தந்தை ஏன் செய்யவில்லை என்றே நினைப்பான், மாணிக்கத்தின் மேல் காட்டும் அன்பில் தனக்கு சிறிது காட்டினால் என்ன என ஏங்குவான், வெங்கடாச்சலமும் அன்பானவர்தான், இரண்டு மகன்கள் மீதும் பாரபட்சம் காட்டாமல் வளர்ப்பவர்.

ஆனால், சாவித்ரி வீரா மீது அளவு கடந்த உரிமையையும் அன்பையும் வைத்திருந்தபடியால் அந்த அன்பில் குறுக்கே செல்லாமல் விலகி நின்றார். அவரின் இடத்தை தாத்தா உயிரோடு இருந்தவரை பூர்த்தி செய்தார்.

தாத்தா இறந்தபின்பு தனது உலகத்தில் தாய் தந்தை இந்த இரண்டு உறவுமே சாவித்ரிதான்  என நினைத்து வந்தவனுக்கு இன்று தந்தை ஸ்தானத்தில் ஒரு உறவு கிடைத்ததையும் பலநாள்தான் ஆசைபட்டதை இவர் செய்கிறேன் என்றதுமே அவனுக்கு கண்கள் கலங்கிவிட்டது.

சந்தோஷமாக தலையை ஆட்டினான் வீரா. அவனின் கண்ணீரை தன் கையால் துடைத்து விட்ட சண்முகமும் அவனை அழைத்துக் கொண்டு பாத்ரூம் சென்றவர் சிறிதும் சங்கோஜப்படாமல் அவனது உடைகளை களைந்து குளிப்பாட்டி விட அவனுக்கு என்னவோ இவர்தான் தன் தந்தை என்பது போல உணர்ந்து சிறிது கூச்சம் இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டு குளித்து முடித்தான்.

அடுத்து மாப்பிள்ளை உடையான வேஷ்டி சட்டையையும் சண்முகமே வீராவிற்கு அணிவித்தார்.

ஆஆஆ வலிக்குதுஎன கை தூக்க முடியாமல் சிரமப்பட்டவனைக் கண்டு சண்முகம் வருந்தினார்

மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை எல்லாம் என்னாலதானேஎன சொல்லியபடியே அவனுக்கு சட்டையை மாட்டிவிட்டு பட்டனையும் போட்டுவிட

நான் உங்க பையன், இன்னும் ஏன் மாப்பிள்ளைன்னு கூப்பிடறீங்க பாண்டியன்னு கூப்பிடுங்கஎன சொல்லவும் அவரும் சிரித்தபடியே தலையை பலமாக ஆட்டிவிட்டு அவனது முகத்தை பார்த்தார்

என்னதான் குளித்தாலும் ரத்த கறை அகன்று விட்டாலும் வீங்கிய இடங்கள் கன்றிப் போய் இருக்கவே மெல்ல அதை சண்முகம் தொட்டு பார்க்க அவனோ ஷ்ஷ்ஷ் என முனகவே

About the Author

Sasirekha

Sasirekha

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 03 - சசிரேகாmadhumathi9 2019-05-30 20:02
Nice & comedyaana epi :clap: kathai romba nalla irukku sasi.viruviruppa+interestinga poguthu.maamanaar+marumagan,appa + magan pola pazhagarathu nallathaan irukku. (y) eagarly waiting 4 next epi. :GL: sasi. :thnkx: for 12 pages.asaththunga :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 03 - சசிரேகாsasi 2019-05-30 20:41
Quoting madhumathi9:
Nice & comedyaana epi :clap: kathai romba nalla irukku sasi.viruviruppa+interestinga poguthu.maamanaar+marumagan,appa + magan pola pazhagarathu nallathaan irukku. (y) eagarly waiting 4 next epi. :GL: sasi. :thnkx: for 12 pages.asaththunga :clap: :clap:

:thnkx: மதுமதி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 03 - சசிரேகாதீபக் 2019-05-30 18:41
Sis today's episode is fantastic :clap: . With combination of sorrow and happiness (y) . Totally it's a good family pack episode :thnkx: . Eagerly waiting for next update :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 03 - சசிரேகாsasi 2019-05-30 20:42
Quoting தீபக்:
Sis today's episode is fantastic :clap: . With combination of sorrow and happiness (y) . Totally it's a good family pack episode :thnkx: . Eagerly waiting for next update :GL:

:thnkx: தீபக்
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top