(Reading time: 16 - 32 minutes)

இதோ வந்துட்டான்என்று பானுமதி சொல்ல அருகில் வந்தான் ரகு.

போட்டோவில் பார்த்ததை விட நேரில் இன்னும் அழகாகவும், கம்பீரமாகவும் தெரிந்தான். நிமிர்ந்த நடை, நேர் கொண்ட பார்வை, நல்ல முறையில் உடை அணிந்திருந்தான்.

அருகில் வந்த ரகுவிடம் “ரகு இவங்கதான் வெண்ணிலாவின் அப்பா அம்மாஎன்று அறிமுகம் செய்து வைத்தார் நாகராஜன்.

என்னதான் தனக்குப் பிடிக்காத காரியத்திற்காக வந்திருந்தாலும், அவர்களைப் பார்த்தவுடன் மரியாதையுடனும், சிரித்த முகத்துடனும் வணக்கம் சொல்லி நலம் விசாரித்தான் ரகு. அவர்களோடு சற்று நேரம் பேசிக் கொண்டிருக்க, அவன் கை பேசி ஒலித்தது.

ஒரு நிமிசம் uncle” என்று அனுமதி கேட்டு போனை attend செய்தான்.

“hello விவேக் சொல்லுடா. Shootக்கு எல்லாம் ரெடி பண்ணிட்டியாஎன்றவன், எதிரே இருந்து ஏதோ பதில் சொல்ல இவனுக்குப் புரியவில்லை.

இங்க சரியா கேட்கல, ஒரு நிமிசம் இரு நான் திரும்ப கூப்பிடுறேன்என்று call cut செய்தான்.

அப்பா ஒரு நிமிஷம். Shoot Ku arrange பண்ண சொல்லியிருந்தேன். அத பத்தி கேட்டுட்டு வந்துடுறேன்என்று தன் தந்தையிடம் கூறி விட்டு “sorry uncle 2 mins” என்று சங்கரை பார்த்துக் கேட்டான்.

பரவ இல்ல பேசுபாஎன்றார் சங்கர்.

ரகு phoneனுடன் தள்ளிச் சென்று பேசினான்.

தப்பா நெனச்சிக்காதீங்க. இன்னைக்கு சாயங்காலம் அவனுக்கு ஒரு shoot இருக்கு. Director சங்கர் இருகாரு இல்ல, அவரோட புது படம் ஒன்னுகான photo shoot இன்னைக்கு. அதான்என்றார் நாகராஜன்.

சங்கர் சார் கூடவா, ரொம்ப நல்ல விஷயம். ரகுவுக்கு late ஆகுதாஎன்று கேட்டார் சங்கர்.

நீங்க வேறங்க. அவங்க 6.30துனு சொன்னா 8 மணி ஆக்கிடுவாங்க. ஆனா இவன் தான் sincere சிகாமணி மாதிரி சொன்ன timeக்கு முன்னாடி போய் நிப்பான்சலிப்பாய் வஞ்ச புகழ்ச்சியில் பதில் சொன்னார் பானுமதி.

“Timeக்கு போறது நல்ல பழக்கம் தானே. நல்ல மரியாதையா வளர்த்திருக்கீங்க பையனஎன்றார் சிவகாமி.

ஒரு கண்ணியமான வாழ்க்கைதானே நாம நம்ம பசங்களுக்குக் கொடுக்கிற பெரிய சொத்து.” என்று பானுமதி சொல்ல, ஆம் என்று தலையாட்டினர் அனைவரும். “ஆனா இப்போ நேரத்தைப் பத்தி சொன்னதை அவன் கிட்ட சொல்லிடாதீங்க. ஒரு பெரிய thanks சொல்லிட்டு இப்போவே ஓடிடுவான்என்று கூறி சிரித்தார் பானுமதி.

அனைவரும் அவருடன் சேர்ந்து சிரித்தனர். பழகிய கொஞ்ச நேரத்திலே அவர்கள் நால்வரும் நல்ல நண்பர்கள் ஆகிப் போயினர்.

நாகராஜனும், பானுமதியும் நிலா வரவை பற்றிக் கேட்காவிட்டாலும், சங்கருக்கு அவள் நேரத்திற்கு வராதது கவளையாகவே இருந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் " காதோடுதான் நான் பாடுவேன்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

நிலாவிற்கு போன் செய்தார் சங்கர். “நிலா எங்கமா இருக்க”.

அப்பா இங்க ரோடு fullஆ ஒரே traffic, யாரோ மந்திரி வராங்கனு அடைத்து வைத்துட்டு, இப்பதான் open பண்ணாங்க. வந்துக்கிட்டே இருக்கேன் பாஎன்றாள் நிலா.

சங்கருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. “சரி மா கொஞ்சம் சீக்கிரம் வா மாஎன்றார்.

வந்துடுறேன் பாஎன்று போனை கட் செய்தாள் நிலா.

நிலா கூறியதை அனைவரிடமும் கூறினார் சங்கர்.

இதுக்கு தான் சொன்னேன், இன்னைக்கு ஒரு நாள் லீவ் போடுனு கேட்டாதானேஎன்று தன் கவலையை வெளிப்படுத்தினார் சிவகாமி.

நிலா மேலே கோபம் படாதீங்க. பொண்ணு என்ன வேணுனேவா செய்துருப்பால். வேளைக்கு போற பசங்க அவங்களுக்கு இருக்கிற சூழ்நிலை அவங்களுக்குதான் தெரியும். பரவாயில்லை வந்திரட்டும் ஒன்னும் அவசரம் இல்லைஎன்றார் பானுமதி.

போன் பேசி முடித்து விட்டு மீண்டும் அங்கு வந்து அமர்ந்தான் ரகு. Time ஆகிறது என்று தன் தாயிடம் அவன் செய்கை செய்வதை சங்கரும் சிவகாமியும் கவனிக்க தவறவில்லை.

இருடா, இன்னொரு 5 நிமிசம். நிலா வந்துக்கிட்டு இருக்கா. நடுவுல எதோ trafficகாம். வந்தோன பார்த்துட்டு கிளம்பு இன்னொரு நாள் கூட பேசிக்கலாம்என்று ரகுவை சமாதானம் செய்தார்.

இன்னும் கொஞ்ச நேரம் போனா அந்த வானத்திலேயே நிலா வந்துடும், இந்த நிலா வர மாதிரி தெரியலஎன்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் ரகு.

அவனால் தன் தாய் பேட்சையும் தட்ட முடியவில்லை, அங்கே வேளையும் ஆரம்பித்தாக வேண்டும்.

அவனது  நிலையைப் பார்க்கும் போது சங்கருக்கும் சிவகாமிக்கும் தர்ம சங்கடமாக இருந்தது. நிலாவை மனதுக்குள் திட்டி தீர்த்தார் சிவகாமி.

இப்படியாக 15 நிமிடம் கழிந்தது. நிலாவும் அருகில் வந்து விட்டதாகவும், traffic, signal என்று update செய்து கொண்டே வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.