(Reading time: 16 - 32 minutes)

ஓ அதுனால என் சம்மதத்தைக் கேட்காமல் நாளைக்கு பொண்ணு பார்க்க ஏற்பாடு பண்ணிட்டிங்களாஎன்று எழுந்து உட்கார்ந்து கேபமாகக் கேட்டாள் நிலா.

ச்சச, பொண்ணு பார்க்க நு நினைக்காதடா. ரொண்டு குடும்பத்தோட ஒரு friendly meet மாதிரி நினச்சிக்கோ. நாங்க அந்த பையனோட போட்டோவை பல முறை உன் கிட்டக் காட்டினோம். ஆனா நீ பார்க்கவே இல்லை. பார்க்காமல் ஒருத்தங்களை பிடிச்சிருக்கு பிடிக்கலனு எப்படி முடிவு பண்ண முடியும். நாளைக்கு வந்து பாரு. அப்பறம் உன் விருப்பத்தை சொல்லு. நாங்க தெளிவா அவங்க கிட்ட சொல்லிட்டோம். என் பொண்ணுக்கு பிடிக்கலனா மேற் கொண்டு பேசமாட்டோம் நு. அதனால உன்னை compel எல்லாம் பண்ணலஎன்று பொறுமையாக விளக்கினார் சங்கர்.

தன் தந்தை சொல்வதும் அவளுக்குச் சரி என்றுதான் பட்டது. ஒருவரை பார்க்காமல் அவரை எடை பேட கூடாது.

சரி பா நான் வரேன். But என்னால கண்டிபா leave எல்லாம் போட முடியாது. புதுசா எடுத்துருக்கிற projectல நிறைய வேளை, client meeting எல்லாம் இருக்கு. ஸோ எப்போ போகனுனு சொல்லுங்க நான் சரியா officeல இருந்தே வந்துடுறேன்என்றாள்.

சரி மா நீ வரச் சம்மதித்ததே எங்களுக்குச் சந்தோஷம். மாலை சரியா 5 மணிக்கு கபாலீஸ்வரர் கோவில் மாஎன்றார் சங்கர்.

சரிங்க பா நான் கண்டிப்ப வந்துடுவேன்என்றாள் நிலா.

“Officeலயே கொஞ்சம் முகம் எல்லாம் கழுவி, makeup போட்டு fresh ah வாடி. அழுது வடிஞ்சி வந்து நிக்காதஎன்றார் சிவகாமி.

அதற்கு நிலா “நேரா trends போய் bridal makeupஏ போட்டு வறேன் போதுமாஎன்றாள் நக்கலாக.

அதற்குச் சிவகாமியிடம் இருந்து முறைப்பையும் பரிசாக வாங்கிக் கொண்டாள்.

சரி பா நான் என் room Ku போறேன்என்று கூறிவிட்டு பதிலுக்காகக் காத்திருக்காமல் எழுந்து நடந்தாள்.

நிலா ஒரு நிமிஷம்என்றார் சங்கர். நின்று எதுவும் கூறாமல் தந்தையைப் பார்த்தாள்.

நாளைக்கு நீ கோவிலுக்கு வரும் போது open minded வா மா. Arrange marriageல பற்றின உன்னோட கருத்து இன்னமும் மாறலனு எனக்கு தோனுது. நீ அதே மன நிலையோடு வந்தா,  நல்ல பையானாவே இருந்தாலும் அந்த பையனிடம் என்ன குறைனு பார்க்கத்தான் தோனும். So அதெலாம் இல்லாமல் ஒரு friend, இல்லனா ஒரு relativeஅ பார்க்க வரதா நினைச்சிக்கோஎன்றார் சங்கர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

சரிங்க பாஎன்று தலையாட்டி விட்டுச் சென்றாள்

மறு நாள் இரு வீட்டாருக்கும் ஒரு வகையான பதற்றம், இன்றைய சந்திப்பு நல்ல படியாய் அமைய வேண்டுமே என்று. அதே சமயம் ரகுவும் நிலாவும் எந்த மன நிலையில் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை.

நிலா வழக்கம் போல் காலை கிளம்பி வேளைக்குச் சென்றாள். கிளம்பும் போது சிவகாமி மாலை சந்திப்பைப் பற்றி ஞாபகம் படுத்தி அனுப்பினார். அவளும் வருகிறேன் என்று கூறி சென்றாள்.

ரகு சின்ன வேளை இருக்கிறது என்று வெளியே சென்று மதியம் வந்தான்.

மாலை ரகு வீட்டில் அனைவரும் கிளம்பி சற்று முன்னதாகவே கோவிலை அடைந்தனர். பானுமதியும் ரகுவும் நேராக சாமி கும்பிடச் சென்றனர்.

நாகராஜன் சங்கருக்கு call செய்து தாங்கள் வந்துவிட்டதாகக் கூறினார். அவர்களும் வந்து கொண்டிருப்பாதாகக் கூறினார்கள்.

சங்கர் நாகராஜனுடன் பேசி வைத்துவிட்டு நிலாவிற்கு call செய்தார். அவளும் கிளம்பிவிட்டதாகவும், Cabல் வந்து கொண்டிருப்பதாகவும் கூறினாள்.

சங்கரும் சிவகாமியும் கோவிலை அடைந்தனர். சங்கர் நாகராஜனுக்கு call செய்து தாங்கள் வந்ததை அறிவித்தார்.

நாகராஜனும் பானுமதி அவர்கள் இருக்கும் இடம் தெரிந்து கொண்டு அங்குச் சென்றனர்.

அவர்களின் முதல் சந்திப்பிலே, ஏனோ பல ஆண்டுகள் நண்பர்கள் போல் உணர்ந்தனர். இருவரும் நலம் விசாரித்துக் கொண்டு, பொதுவாகப் பேசினார்.

பேசிக் கொண்டிருக்கும் போது பானுமதி வெண்ணிலா வந்திருக்கிறாளா என்று தேட அதை உணர்ந்த சிவகாமி “தப்பா நினச்சிகாதீங்க, நிலா officeல இருந்து நேரா வந்துக்கிட்டு இருக்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவாஎன்றார்.

ச்சச, ஒன்னும் பிரச்சனையில்லை. பொறுமையா வரட்டும். இன்னைக்கு நாள் நல்லா இருந்துது. அதனலதான் இன்னைக்கு சந்திக்காலாம்னு சொன்னோம். இல்லன பசங்க ஓய்வா இருக்கிற நாளா பார்த்துக் கூட சந்திச்சிருக்கலாம்என்றார் பானுமதி.

நீங்க சொல்றதும் சரிதான். உங்க பையன்என்று சிவகாமி இழுக்கஉள்ள சாமி கும்பிட்டுடு இருக்கான் இப்போ வந்துடுவான்என்று கூறி திரும்பும் போதே ரகு அங்கே நடந்து வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.