(Reading time: 14 - 28 minutes)

தங்கள் மதத்தில் ஒரு கடவுள் இருக்கிறாரே..யாரது?ஆங்ங் ராமர்..அவரை என்ன கூறி அழைப்பார்கள்?”

ஏகப்பத்தினிவிரதன்?!!”

ஆம் அதுதான் அப்படிபட்டவர்தான் எங்கள் ஷாகின் ஷா.உனக்கு புரியும் விதத்தில் இதற்கு மேல் எப்படி கூறுவது என்று சத்தியமாய் எனக்குத் தெரியவில்லை.”என்றவள் நன்றாகவே சிரித்தாள்.

அவள் கூறியதனைத்தையும் கண்டும் காணாதது போல் நடந்து கொண்டாலும் சிவகங்காவதியின் மனதிற்குள் சில சிந்தனைகள் சூழல ஆரம்பித்திருந்தது.ஆயிஷா கூறுவதும் உண்மைதானே கட்டாயத்திற்காக தன் கொள்கைகளை மாற்றிக் கொள்பவன் அல்லவே நஸீம்.

அப்படியானால் ஒரு வேளை என் மீது???!!ச்ச என்ன மாதிரியான பிதற்றல் இது.என் மனம் ஏன் எதை எதையோ எண்ணுகிறது.தேவையற்ற நேர விரயம்”,என்று அத்தோடுதன் எண்ணங்களுக்குமுற்றுப் புள்ளி வைத்தாள்.

அன்று மாலை தன்னை சந்திக்க வருமாறு சிவகங்காவதிக்கு சமீரா அழைப்பு விடுத்திருந்தார்..அதன்படி  தயாராகி அவர்களின் அறைக்குச் சென்றவள் அவரை வணங்கிவிட்டு நின்றாள்.

வா சிவகங்காவதி இப்படி அமர்ந்து கொள்.எப்படியிருக்கிறாய்?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "இதயச் சிறையில் ஆயுள் கைதி..." - காதலும் மர்மமும் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

நான் நன்றாக இருக்கிறேன் பாட்டி அவர்களே,தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்.என் மீது கோபம் ஒன்றுமில்லையே?!”

எனக்கு என்ன குறை வந்துவிடப் போகிறது அதுவும் இம்மாகாணத்தின் அரசியாரைக் கண்டபிறகு.ஆமாம் நான் எதற்காக உன் மீது கோபம் கொள்ள வேண்டும்?”

உங்களுக்கு இந்த திருமணத்தில் துளியும் வருத்தமில்லையா?”

எதற்காக வருத்தம்!!என் பேரனின் நிக்காஹ் குறித்து மனம் கொள்ளா மகிழ்ச்சியில் இருக்கிறது.அவன் வாழ்வு அப்படியே முடிந்து விடுமோ என்று எத்தனையோ இரவுகள் நித்திரையை தொலைத்திருக்கிறேன் என்பதை நானே அறிவேன்.“

“….”

ஏன்னம்மா அமைதி காக்கிறாய்?உனக்கு இந்த நிக்காஹ்ஹில் விருப்பமில்லையா?”

அதெல்லாம் ஒன்றுமில்லை.மனதில் பட்டதைக் கேட்டேன் அவ்வளவே!!”

அவனைப் பற்றி உன்னிடம் கூறுவதற்கு நிறையவே இருக்கிறது.இந்த இந்துஸ்தானத்திற்கு தெரிந்த நஸீம் வேறு அவனின் இயல்பென்பது வேறு.மிகவும் பாசமானவன் ஒரு காலத்தில் அவன் உறவுகளுக்காக ஏங்கியிருந்தான் நாளடைவில் அதை மறைத்துப் பழகியவன் தன்னுள்ளேயே இறுகிப் போனான்.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியே பழகிவிட்டான்.அவனின் மன உணர்வுகளை வாய் திறந்து கூறக் கேட்டு புரிந்துகொள்ள நினைத்தால் அது நடவாத காரியம்.இவையனைத்தையும் உன்னிடம் கூறுவதற்கு காரணம் இந்த நிக்காஹ் எந்த சூழ்நிலையில் வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஆனால் இப்பிறவியில் நஸீமின் சதி நீ மட்டுமே.

எக்காரணம் கொண்டும் அதை மட்டும் மறந்துவிடாதே.நாட்டை காக்கும் பொறுப்பு அரசனுடையதைப் போன்று அவனைக் காக்கும் முழுப்பொறுப்பும் அவனின் துணைவியிடமே.அந்த பொறுப்பிலிருந்து எக்காரணம் கொண்டும் தவறாமல் பார்த்துக் கொள் சிவகங்காவதி.”

நிச்சயமாய் என் கடமையில் இருந்து ஒருபோதும் தவறாமல் இருப்பேன் பாட்டி எனை தாங்கள் தாராளமாக நம்பலாம்.”

மகிழ்ச்சி!!இனி நஸீமின் வாழ்வு மொத்தமும் உன் பொறுப்பு எனது கடமைகளிலிருந்து சற்றே ஓய்வெtடுத்துக் கொள்ள எண்ணுகிறேன்.சில தினங்களுக்கு புனித யாத்திரைக்குச் சென்று வரலாம் என்றிருக்கிறேன்.நாளை நஸீமிடம் தெரிவித்து வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.”

ஏன் பாட்டி இன்னும் சிறிதுகாலம் பொறுத்து செல்லலாம் அல்லவா?”

முதுமை ஒத்துழைக்க மறுக்கிறது சிவகங்காவதி.அதற்குள் கடமைகளை முடித்துவிட எண்ணுகிறேன்.வேறு ஒன்றுமில்லை.இனி நஸீமும் இந்த மாளிகையும் உன் பொறுப்பு.சென்று வா”,என்றவர் கன்னம் தட்டி அவளை அனுப்பி வைக்க குழம்பியிருந்த மனம் இன்னுமாய் குழப்பமுற்றது சிவகங்காவதிக்கு

தொடரும்...

Episode 11

Episode 13

Go to Sivagangavathi story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.