(Reading time: 14 - 28 minutes)

“!!...!!””

ஏன் எதுவும் பேச மாட்டேன் என்கிறாய்?”

இல்லை ஒன்றுமில்லை அரசியாரே!!”

என்ன!!இதென்ன புது பட்டம்?எப்போதும் போல் என் பெயர் கூறியே அழைக்கலாம்.”

அது..அதெப்படி சாத்தியம் என்னவயினும் தாங்கள் இந்த மாகாணத்தின் அரசி.தங்களை பெயரிட்டு அழைக்கும் துணிவு எனக்கில்லை.உசூருற்கு தெரிந்தால் என் தலையைத் துண்டித்து விடுவார்.”

அவர் முன் வேண்டாம் இங்கு நாம் மட்டும் இருக்கும்போது பெயர் கூறியே அழைத்துக் கொள்.ஏனோ அனைத்தும் அந்நியமாய் படுகிறது.உன்னிடம் இருக்கும் இந்த விலகலையும் சேர்த்துத் தான் கூறுகிறேன்.”

அவளின் குரலின் வேதனையை உணர்ந்தவளாய்,”எதற்காக இத்துனை வருத்தம் கொள்கிறீர்கள்.இனி தாங்கள் கூறிபடியே அழைக்கிறேன்.இப்போது மகிழ்ச்சி தானே?!”

ஆமோதிப்பாய் தலையசைத்தவள் மீண்டும் தன் எண்ணங்களில் உழன்றாள்.இங்கு இவளின் நிலை இவ்வாறு இருக்க அங்கு நஸீமோ பல கண்டனப் பேச்சுகளுக்கு ஆளாயிருந்தான்.

அரசவையின் தலைமை மத குரு அவனிடம் பேச ஆரம்பித்திருந்தார்.”தாங்கள் இப்படி ஒரு காரியத்தை செய்வீர்கள் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை ஷாகின் ஷா.நம் மதக் கொள்கைகளை காக்கத் தவறிவீட்டீர்கள்.இந்த நிக்காஹை அந்த அல்லாஹ் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

போயும் போயும் அந்த பெண்ணைத் தானா தாங்கள் நிக்காஹ் செய்து கொள்ள வேண்டும்..என்னா..”

இதற்குமேல் ஒரு வார்த்தை பேசினாலும் நான் மனிதனாக இருக்கமாட்டேன்.எது எப்படியாயினும் இப்போது அவள் இந்த மாகாணத்தின் அரசி.என் மனைவியைப் பற்றி வார்த்தைகளை உதிர்க்கும் போது இனி அதீத கவனம் வேண்டும் மத குரு அவர்களே!நான் எப்போதும் ஒரே மாதிரி பொறுமை காத்திருக்கமாட்டேன்.இதற்குமேல் இதைப்பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை தாங்கள் செல்லலலாம்

என்றவன் அதற்கு மேல் அவருக்கு பேச வாய்ப்பின்றி அங்கிருந்து கிளம்பச் செய்திருந்தான்.தலைமை குருவிற்கே இந்த நிலையெனும் போது வேறு யாருக்கும் அவனிடம் இதைப் பற்றி பேசுவதற்கு துணிவிருக்கவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "காணாய் கண்ணே..." - காதல் & சரித்திரம் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அனைவரையும் பொதுவாய் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அங்கிருந்து அவன் நகர்ந்துவிட அரசவையில் சலசலப்பு ஏற்பட ஆரம்பித்திருந்தது.இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் அரச குடும்ப விடயத்தில் தலையிடுவது சரியில்லையென சிலர் ஒதுங்கிக் கொள்ள சிலருக்கோ மதத்தின் மீதிருந்த அதீத பக்தியால் இதற்கு ஏதேனும் செய்தே ஆக வேண்டும் என்ற முடிவில் இருந்தனர்.

தனதறைக்கு வந்த நஸீமிற்கோ மனம் விரும்பியவளை கரம்பிடித்த மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் தனக்கெதிராக இருப்பவர்களால் மக்களுக்கோ சிவகங்காவதிக்கோ எவ்வித ஆபத்தும் வராமல் காக்க வேண்டும் என்ற சிந்தனையே மேலோங்கி இருந்தது.

அதைவிட சிவகங்காவதி எப்போது தன் மனதை புரிந்து கொள்ளப் போகிறாள் என்ற ஏக்கமும் சற்றே இருந்தது என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

நாட்கள் அதன் போக்கில் கடந்து கொண்டிருக்க சிவகங்காவதியும் சற்றே அவ்விடத்திற்கு பழக்கப் பட்டிருந்தாள்.நஸீம் அவளை சந்திப்பதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.அதுவே அவளை சற்று ஆறுதல் படுத்தும் விடயமாய் இருந்தது.

அதுமட்டுமன்றி அவள் எதற்காகவும் கட்டாயப்படுத்தப் படவில்லை.அவள் எப்போதும்போலவே ரஜபுத்திர உடைகளையே அணிந்து கொண்டாள். நெற்றித் திலகமும் இப்போது திருமணமானவள் என்பதற்காக நெற்றி வகிட்டில் நீளமாய்  குங்குமமும் இட்டுக் கொண்டள்.அவளுக்கான புலால் சேர்க்காத சைவ உணவு தனியாக சமைக்கப்பட்டது.

ஆயிஷா அவளை ஒருமுறை கேலி செய்து கூட சிரித்தாள்,”ஆனாலும் எங்கள் ஷாகின் ஷாவை இப்படி தலைகீழாய் மாற்றியிருக்க வேண்டாம்.”

நானா??நான் என்ன செய்தேன்!”

ம்ம் நிக்காஹ் செய்து கொள்ளாமல் இருந்தவரின் மனதில் இடம்பதித்து தங்களுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறாரே இதற்குப் பெயர் வேறு என்ன!அந்த கரும்பாறை மனிதனுக்குள்ளும் இப்படி ஒரு மென்மையான மனது இருக்கிறது என்பதை மறுத்து விடுவாயா?”

நீயாக எதையேனும் உளறாதே!நடந்ததே கட்டாயத் திருமணம் இதில் காதலாம் நேசமாம்

என்ன சிவகங்காவதியாரே அனைத்திலும் சாமர்த்தியசாலியன தாங்கள் இந்த விடயத்தில் இத்துனை விவரமற்றவராக இருக்கிறீர்களே!உங்களை கவனித்துக் கொள்ளும் விதத்திலேயே தோன்றவில்லையா இது கட்டாயத்தையும் கடந்த காதல் என்று?!!”

ஏன் ஏதேதோ கூறி குழப்புகிறாய் ஆயிஷா!!!”

அடடா எனதருமை அரசியாருக்கு காதலைப் பற்றி ஒன்றும் தெரியவில்லையே!!எங்கள் உசூர் இதுவரை எந்தப் பெண்ணையும் நிமிர்ந்து கூட பார்த்திராதவர்.உலகிலேயே அழகிய பதுமையைக் கொண்டு வந்து அவர்முன் நிறுத்தி விட்டாலும் மரம் செடி கொடிகளைப் பார்ப்பது போன்ற பார்வையைத் தான் அந்த பதுமையிடத்திலும் பதிப்பாராம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.