(Reading time: 14 - 28 minutes)

ஆனால் இப்போதும் அவளுக்கு குழப்பமே மிஞ்சியிருந்தது.இஷானின் திட்டம்தான் என்ன?கோபத்தை தீர்ப்பதற்காக செய்த திருமணம் எனில் அதை நிலைநாட்ட விளைவதன் பொருள் என்ன!அனைத்திற்கும் மேலாய் சாதாரணமாகவே கோபம் கொள்பவன் தான் இத்துனை கோபமாய் பேசிய பின்னும் பொறுமை காப்பதில் நிச்சயமாய் எதோ விடயம் இருக்கிறது அல்லவா!

வாழ்வை அதன் போக்கில் கொண்டு செல்வது மட்டுமே இப்போதைக்கு அற்ப நிம்மதியையாவது கொடுக்கும் என்ற முடிவிற்கு வந்தவளாய் மனதை அமைதிப்படுத்திக் கொண்டு நடக்கப் போகிற அனைத்தையும் பார்வையாளராய் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்திருந்தாள்.

அடுத்த விடியல் சற்றே திடத்தை அளித்திருந்தது சிவகங்காவதிக்கு.அவள் தயாராகி  முடித்திருந்த நேரம் நஸீம் நிர்மலமான முகத்தோடு அவள் முன் வந்து நின்றான்.அனைத்தையும் துடைத்து வைத்தார் போன்ற பாவம் அவனிடத்தில்.என்ன எண்ணுகிறான் என்பதை அவளால் கணிக்க முடியவில்லை ஆனாலும் ஏதோ ஒரு மனப் போராட்டம் சூறாவளியாய் சூழ்ந்திருக்கிறதோ என்றே தோன்றியது.

அவளின் அமைதியை கண்டவன்,”நம் பயணத்தை தொங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.மிக முக்கியமான விடயம் ஒன்று உன்னிடம் கூற வேண்டியது இப்போது அவசியம் அதற்காகவே நான் இங்கு வந்தது.நம்மிடத்திற்கு சென்ற பின் சூழ்நிலை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.”

எப்படி வேண்டுமானாலும் என்றால் புரியவில்லை?”

நம் நிக்காஹ் பற்றிய விவரம் தெரிந்த பின் சூழ்நிலை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.அனைத்தையும் நான் சமாளித்துக் கொள்வேன்.ஆனால் எக்காரணத்தை கொண்டும் தாதி அவர்களின் மனம் புண்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது உன் கடமை

சிலரைப் போன்று யாரைப் பற்றிய கவலையும் இன்றி என் எண்ணங்களை மட்டுமே நிறைவேற்றும் கடினமனம் கொண்டவள் நான் இல்லை.”

நல்லது மிக நல்லது வாக்கில் கூறுவதை விட செயலில் காட்டினால் இன்னும் மகிழ்ச்சி.மறுபடியும் கூறுகிறேன் எப்படி நடந்த நிக்காஹ்ஹாக இருந்தாலும் இரு மதங்களின் கடவுள்களின் ஆணைப்படி நம் உறவு உண்மை, வாழ்வு முழுவதற்கும்!!புரிந்து நடந்து கொள்வாய் என்று எண்ணுகிறேன்.செல்லலாம் தானே?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

மௌனமாய் தலை கவிழ்ந்தவள் அவனோடுச் செல்ல தயாரானாள். ரத்தன்சிங்கிடமும் அவன் பெற்றோரிடமும் விடைபெற்று மணமக்கள் கிளம்பத் தயாராக சிவகங்காவதிக்கு பிறந்த அகத்தின் சார்பாய் அளிக்கப்பட வேண்டிய அத்துனை மரியாதைகளையும் எவ்வித குறையுமின்றி ரத்தன் சிங் வழங்கிஅனுப்பினான்.

பல்லக்கில் அமர்ந்திருந்தவளுக்கு வாழ்வின் மீதான கலக்கம் முதன் முறையாய் எட்டிப் பார்த்தது. சிறைக் கைதியாய் இருந்தபோது மனதிலிருந்த திடம் இப்போது சிற்றரசின் அரசியாய் செல்லும் போது நிச்சயமாய் இருக்கவில்லை.

வாழ்வில் நிச்சயம் பல சவால்களை சந்திக்க வேண்டிய சூழல் இருக்கிறதோ என்றே தோன்றியது.அதைவிட முக்கியமாய் நஸீமை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற வருத்தமே இன்னும் மேலோங்கியது.

அனைத்து குழப்பங்களுக்கும் விடையாய் ஈசனே இருப்பான் என்று உணர்ந்த நொடி மனம் சற்றே மட்டுப்பட்டது.அரண்மனையை அவர்கள் அடைந்திருந்த நேரம் சமீரா  பணிப் பெண்களைக் கொண்டு அனைத்து ஏற்படுகளையும் செய்திருந்தார்.அவரைக் கண்டவள் பாதம் பணிந்து எழுந்து நிற்க அவளின் தோள்பற்றி எழுப்பியவர் முகத்தை மூடியிருந்த ஆடையை உயர்த்தி அவளை கன்னம் தாங்கி உச்சி முகர்ந்தார்.

இந்த நொடிக்காகவே என் உயிர் உடலில் ஒட்டியிருந்தது நஸீம்!!இப்படி உனைக் காண வேண்டும் என்பது என் எத்துனை வருட கனவு என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவார்.சிவகங்காவதி என் செல்வமே இன்றுதான் இந்த அரண்மனை பரிபூரண அழகு பெற்றிருக்கிறது.அல்லாஹ்ஹின் ஆசிகள் என்றும் கிடைக்கட்டும்.வா மகளே”,என்றவர் அவளை உள்ளே அழைத்துச் செல்ல நஸீம் அரசவையை கவனிக்கச் சென்றான்.

இத்துனை விடயங்கள் நடைந்தபோதும் சிவகங்காவதி ஒரு வார்த்தை கூட பேசவில்லை,அவர்களோடு அமைதியாய் சென்றாள்.

இதோ இது உனக்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட அந்தப்புர மாளிகை.உனக்குத் தேவையான அனைத்தும் இங்கு இருக்கிறது.உன் பிறந்த அகத்தில் இருந்ததைப் போன்றே இங்கும் உனக்கு சகல மரியாதைகளும் வசதிகளும் கிட்டும்.எனக்கு சற்றே களைப்பாய் உள்ளது உன்னை பிறகு வந்து சந்திக்கிறேன்.”

அவர் அங்கிருந்து நகர்ந்தவுடன் பணிப் பெண்கள் அவளைச் சுற்றி நிற்க ஏற்கனவே அவளோடு உரையாடிக் கொண்டிருந்த ஆயிஷாவும் அங்குதான் நின்றிருந்தாள்.

சிவகங்காவதி மெதுவாய் எழுந்து தன் பார்வையை சுழற்றினாள்.பிரம்மாண்டமான பகுதி அவளுக்காகப் போடப்பட்ட மிகப் பெரிய பஞ்சணை.ஒப்பனையறையில் மிகுந்த வேலைப்பாடுகளோடு கூடிய ஆளுயர கண்ணாடி அறைகளின் விட்டம் முழுவதும் வண்ணமயமான ஓவியங்கள் என அத்துனை வர்ணணையோடு அமைக்கப் பட்டிருந்தது.

அனைத்தையும் பார்வையிட்டவள் ஆயிஷாவிடம் வந்து சாதாரணமாய் அமர்ந்தவள்,”வாழ்க்கை ஒரு நாளில் எத்துனை மாற்றங்களைக் கொடுத்துவிடுகிறது இல்லையா?!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.