Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - சுஷ்ருதா – 12 - சித்ரா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - சுஷ்ருதா – 12 - சித்ரா

sushrutha

னந்தன்  திரும்பி  வந்தவுடன் அவனிடம் மனைவியை ஒப்படைத்துவிட்டு ஒன்றும் நடக்காதது போல் ,இயல்பாக அவன் பெரியம்மா கிளம்ப தான் செய்தார் .

இத்தனை  நாட்கள்  துணையாக இருந்த அவருக்கு  ,இப்போது அவன் திரும்பி வந்தவுடன் தன்  மகளுடன் சென்று இருக்க ஆசையாக தான் இருக்கும் என்று நினைத்து சந்தோஷமாகவே அவரை வழி அனுப்பி வைத்தான் .

தனிமையில்  விடப்பட்ட போதும் ,மனைவியிடம்  எதிர்பார்த்த  மகிழ்ச்சி தென்படவில்லை என்பது தான் முதல் உறுத்தலாக  இருந்தது .

இருந்தும் இத்தனை  நாட்கள் பிரிந்து இருந்தது அதுவும் இந்த முக்கிய கட்டத்தில் கூட இல்லாது  போனதில் ,அவளுக்கு கோபம் என்றே அதை எடுத்துக்கொண்டான் .

அவனால் முடிந்தவரை இழந்த பொன்னான காலத்தையும் ஈடு செய்வது போல் ,அவளுடன் நேரம் செலவிட்ட போதும் ,அவளிடம் எந்த தாக்கமும் இல்லை .

கேட்டால் கேள்விக்கு ,அளவான ஒற்றை வார்த்தை பதில் ,மற்ற நேரத்தில் வெறித்த பார்வையுடன் ,ஏதோ சிந்தனையில் இருப்பது ,என்று இருந்தது அவள் போக்கு ..

கர்ப்ப காலத்ததின்   ஹார்மோன்  மாற்றம் என்பதையும் தாண்டி ,அவளை ஏதோ  அரிக்கிறது  என்பது மெல்ல அவனுக்கு புரிந்தது .

அது சம்பந்தமாக  எத்தனை  விதமாக அவளிடம் பேசி பார்த்த போதும் ,எந்த பதிலும் வரவில்லை .

அவளது மகப்பேறு மருத்துவரிடம்  ,தன்  சந்தேகத்தை கேட்க ,அவர்களது  நிலையில் ,உடம்பு உபாதையில் ,கர்ப்பமாக இருக்கும் சிலர் இப்படி இருப்பதுண்டு ,என்று சொல்லி விட்டு ,

அதனால் தான் ,அம்மா வீட்டில் இருக்கும் நடைமுறை  இருப்பதும் ,அம்மாவின்  அன்பு ,அவர்கள் கடந்து வந்த இந்த நிலையை பற்றிய அவர்களுடைய அனுபவ பாடம் ,என்று அவர்கள் பகிர்ந்து கொள்ளும் போது  ,,இவள் மனதில் இருக்கும் குழப்பம் மறையும் என்று அவர் வழி காட்ட 

அம்மா வீட்டில் அவளை விட முடியாத அவர்கள் சூழ்நிலையை ,அவரிடம் சொல்லாமல்  திரும்பி வந்தான் .

அம்மாவுக்கும்  சேர்த்து அவன் அன்பு காட்டியபோதும் ,நிலைமை நாளுக்கு நாள் ,மோசமாக போனது ,அவனை சற்றும் சட்டை செய்யாமல் அவளுக்குள்ளே அவள் சுருண்டாள் .

இவளது இந்த நிலை குழந்தையையும் பாதிக்குமோ என்று வேறு அவனுக்கு கவலையாக இருந்தது .

பேசாமல் அவள் அம்மாவை சந்தித்து இவள் நிலை குறித்து பேசலாமா என்று நினைப்பான் ,உடனே அந்த நினைப்பை மாற்றிக்கொள்வான் .

கர்ப்பமாக இருக்கும் மகளை  எட்டி கூட பார்க்காத பெற்றோரிடம் என்ன உதவி கேட்பது ,கேட்டு செய்ய வேண்டிய உதவியா இது ..

அப்படி பார்த்தால்  தன்  பெரியம்மாவிற்கு  எவ்வளவு பெரிய மனசு ,கேளாமலே  உதவி செய்த பாங்கு,சோ   , அவரை தான் மறுபடியும் அணுக வேண்டும்  என்று முடிவு செய்தான் 

பிரசவ சமயத்திலும் ,குழந்தை  பெற்ற  பின்னும் உதவி கட்டாயம் தேவை ..

அதை மனதில் கொண்டு அவன் பெரியம்மாவை அழைக்க சென்ற போது  தான் ,அவர் மன  விகாரங்களை அவர் மகளிடம்  அவர்  பகிர்ந்து கொள்வதை கேட்க நேர்ந்தது .

நம்பி  ஒப்படைத்து சென்ற அவரே தன்  மனைவியின் மன  குழப்பத்திற்கு காரணம் ,என்பதை அவர் வாயாலே கேட்க நேர்ந்த போது ,உடைந்தே போனான் அவன் .

தன்  பெரியம்மா இப்படி செய்ய கூடும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை .

பூ போல வைத்து தாங்க  வேண்டிய கட்டத்தில் ,அவர் தன மனைவிக்கு செய்த கொடுமையின் வீரியம் அவனை அசைத்து போட்டது .

புயல் போல உள்ளே நுழைந்து ,அவன் பெரியம்மாவை உண்டு இல்லை என்று ஆக்கி ,தன்  உள்ள குமுறலை கொட்டிவிட்டு ,உறவை முறித்துக்கொண்டு வர தான் அவனால் முடிந்தது .

உடைந்து போயிருந்த அவன் மனைவியின் மனதை சரி செய்ய அவகாசம் இல்லாமல் போனது ,

அதுவும் இப்போது தான் ,மிக தாமதமாய் காரணம் கண்டு கொண்ட போதும், அதை மனதில் கொண்டு அவளுக்கு  தேவையான தெளிவை கொடுப்பதற்கு நேரம் இன்றி  ,அவள் பிரசவ நேரம் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னமே வந்தது . 

பிரசவம் அவள் நிலையை மோசமாக்கியது .

பிரசவத்திற்கு முன் தனக்குள் சுருண்டு இருந்தவள் ,பிரசவத்திற்கு பின் கட்டுக்கடங்காமல்  போனால் .

அவளை நம்பி குழந்தையை கூட அவளிடம் குடுக்க முடியாத நிலைமை .

எதோ ஒரு விதத்தில் ,அதுவும் அவளை பாதிக்க ,நிலைமை இன்னும் மோசமாகியது .

ஹிஸ்டெரிக் மனைவி ,பச்சிளம் கைக்குழந்தை ,பெரியவர்கள் இருந்தும் ஆதரவில்லாமல் அவன்  அல்லாடி கொண்டிருந்த அந்த நிலையில் தான்  சீதா பயிற்சி முடிந்து வந்து சேர்ந்தாள் .

சீமாவை ,குழந்தையும் பார்க்க வந்தபோது தான் ,சீமாவின் நிலை அவளுக்கு தெரிய  வந்தது .

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Chitra

Like Chitra Kailash's stories? Now you can read Chitra Kailash's full novels at Chillzee KiMo. No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
  • Sushrutha (Updated fortnightly on Friday Morning)
Add comment

Comments  
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 12 - சித்ராsaaru 2019-05-27 16:13
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 12 - சித்ராAdharvJo 2019-05-10 12:43
Entire family-a ippadi oru tragedy-la sikka vachittu poitangale andha old lady 3:) So initial epi la sita oda injuries reason Simava :sad:

Sasi idam sita, simavai patri solluvangala? Hope he can assist them... :yes: interesting update chitra ma'am :clap: :clap: waiting for park meet :P thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 12 - சித்ராmadhumathi9 2019-05-10 09:23
:clap: nice epi. (y) waiting to read more. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 12 - சித்ராSrivi 2019-05-10 02:07
Super sissy.. nice update .. But ippide aakitangale seema va 😥
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top