Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 04 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 5 votes
Pin It

தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 04 - சுபஸ்ரீ

Ringa ringa roses

ணேஷ் நிதானமாக காலையில் எழுந்தான். வேலை இல்லாததால் அரக்கபறக்க தயாராகி அலுவலகம் போக வேண்டிய அவசியம் இல்லை. நினைத்த பொழுது நினைத்ததை செய்வதும் ஒரு சுகம். தன்னைதவிர உலகில் மற்ற அனைவருமே வேலைக்கு செல்வது போல தோன்றியது. வெறுப்பும் ஏமாற்றமும் கலவையாய் உள்ளத்தை எரித்தது.

ஜன்னல் வழியே சாலையை பார்த்தான். திலக் இறந்த இடம் தெரிந்தது. சாக் பீஸ் கோடுகளுக்குள் முடிந்துவிட்டது அவன் வாழ்க்கை. அப்படி ஒரு நிகழ்வு நடந்ததுப் போல மக்கள் மனதில் சுவடே இல்லை. அவரவர் வாழ்க்கை அவர்கள் முன். நேற்று இந்த நொடி திலக் உயிரோடு இருந்திருக்கிறான்.

நேற்றுதான் அவன் சந்தித்து அனுபவித்த இறுதி காலை . . இறுதி மாலை . . இறுதி இரவு. எல்லாம் நேற்றோடு முடிந்துவிட்டது. திலக் இனி கடந்த காலத்திற்கு உரியவன். உலகம் அவனை மறந்துவிட்டது.

சில நாட்களில் அவன் நட்புகள் அவனை மறந்துவிடும். சில மாதங்களில் அவனை உறவுகள் மறந்துவிடும். அவனின் தங்கை அவள் திருமணம் வாழ்க்கையில் அடிஎடுத்து வைத்ததும் புதுஉறவுகள் அவனை மறக்கடித்துவிடும்.

அவனின் பெற்றோர் மட்டுமே என்றென்றும் அவன் நினைவுகளை சுமந்து இருப்பார்கள். அந்த தாய் திலக்கை கருவுற்ற நாளில் இருந்து அவனின் ஒவ்வொரு அசைவையும் மனதில் இருத்தி மகிழ்ந்தவள். அவனை பெற்றெடுத்து தாலாட்டி சீராட்டியவள்.

ஆனால் அவளையும்விட திலக்கின் பெரியப்பாவின் மனத்துயரத்தை யாரும் அறிய மாட்டார்கள். இது விபத்தா? அல்லது பழிவாங்கலா? எனப் புரியாமல் மனதில் ஊழலும் சஞ்சலங்களை தன்னுள்ளே வைத்து புலம்பி வேதனைப் பட்டது அந்த உள்ளம்.

திலக் பெரியப்பாவின் உள்ளகிடங்கை கணேஷ் அறிய வாய்ப்பில்லை. இருப்பினும் திலக் மற்றும் காணாமல் போன வைரம் இரண்டுமே அவன் நிம்மதியை கெடுத்தது. வைரம் எங்கே போயிருக்கும்?  . .  நிச்சயம் மதி அலுவலகத்தில்தான் விழுந்திருக்க வேண்டும்.

கேன்டீனில் எவனோ அபேஸ் செய்துவிட்டான் என நினைத்தவன். மதியுடன் பேசலாம் என போனை கையில் எடுத்தான். “சின்ன தாயவள் தந்த ராசாவேஎன போன் பாடி அவன் அம்மா அழைக்கிறாள் என பிரத்யோகமாக செட் செய்திருந்த ரிங்டோன் மூலம் அறிவித்தது.

போனை உயிர்பித்து “சொல்லுமாஎன்றான்

என்னடா பண்றா?” அம்மா கேட்க

அவசரமா ஆபிஸ் கிளம்புறேன்என சொல்ல ஆசைதான் ஆனால் அப்படி ஒரு சந்தர்ப்பம்தான் அமையவில்லை.

சும்மாதான் இருக்கேன்என்றான் பெருமூச்சுடன்

வேலைக்கு முயற்சி பண்றியாடா?”

பாத்துட்டுதான்மா இருக்கேன்சோர்வாக பதில் வந்தது.

நான் ஒரு விஷய சொன்னா கோச்சிக்க மாட்டியேதயங்கியபடி கேட்டார்

அப்ப கோப்பட்ற மாதிரி எதையோ சொல்ல போறே . . சரி சொல்லு

உனக்கு நல்ல வரன் வந்திருக்கு . .”

அம்மா முதல்ல வேலை . . அப்புறம் . .”

இரு இரு கல்யாணமும் பண்ணிவெச்சி உனக்கு பிசினஸ்க்கு பணமும் தராங்கலாம் . . நல்ல வசதியான குடும்பம்பா

ஒண்ணு செய்வோமா இப்பவே அந்த வீட்டுக்கு போவோம்  . .ஐயா எனக்கும் என் ஆத்தாக்கும் சாகறவரை சோறு போடுங்கனு பிச்சை கேப்போம். . திண்ணையிலயே மிச்ச காலத்த கழிச்சிடலாம்

டேய்

கழுதை கழுத்துல தாலி கட்டணுமா இல்ல குரங்கா எதுனாலும் எனக்கு ஓகேதான் மா

கழுத குரங்குனுட்டு பொண்ணு வைரமாதிரி இருக்குடா

ஐயோ வைரமா எனக்கு வேணவே வேணாம்மா

எனக்கு தெரியும் அந்த குடிகாரன் பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருக்க . . என்ன மாய மந்திரம் பண்ணாளோ . .இப்படி ஆகிட்டயேடாஎன புலம்ப ஆரம்பித்துவிட்டாள் அவன் அம்மா.

ஏம்மா இப்படியெல்லாம் பேசற?”

நீ அடுத்த இரயில்ல கிளம்பி திருச்சி வர . . உடனே கல்யாணம்

விளையாடாதம்மாஅலுத்துக் கொண்டான்

நான் நல்லா இருக்கறப்பவே உனக்கு கல்யாணம் பண்ணிடணும்டா . . எனக்கு அப்புறம் நீ அநாதை

ஐயோ காலங்காத்தால சென்டிமெண்டா பேசாத தூக்க தூக்கமா வருது

அப்போ திருச்சி வர மாட்டே அப்படிதானே

வரேன் உன்ன பாக்க . .  கல்யாணத்துக்கு இல்ல . . சரி போன் வெக்கறேன்

என்னடா அவசரம்? அதுக்குள்ள போன் வெக்கற

ஜனாதிபதியோட மீடிங் இருக்கு . . வெறுப்பேத்தாத வைமா போனை

ஒருமுறை திருச்சி சென்றுவரலாமா என யோசித்தான். மாறுதல் அவசியமென மனதிற்கு தோன்றியது. காவல்துறையிடம் தெரிவித்த அனுமதி பெற்ற பின்னரே செல்ல முடியும் என்ற எண்ணமும் உறைத்தது.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Subhasree

Completed Stories
On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 04 - சுபஸ்ரீSubhasree 2019-05-14 11:02
Thank you so much friends for all your
beautiful comments. :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 04 - சுபஸ்ரீDurgalakshmi 2019-05-13 10:28
wow super :hatsoff:
Diamond kuzhanthai Kala
Kondru viduma .. so sad
Next epi seekrama kudunga sis
Story suvarasyma poguthu.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 04 - சுபஸ்ரீJanaki 2019-05-13 09:26
Thrilling episode Subhasree.
Very interesting :clap: :clap:
Diamond aduthu seya povthu ennavo? :Q:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 04 - சுபஸ்ரீAdharvJo 2019-05-12 12:22
facepalm inum ethanai perai bali kuduka poring sis :sad: Ivanga ellam ena pananga ethukaga kola paduranga? sad of the family members. Indha diamond oru eduthula adangi iruka matengudhey facepalm

Ganesh oda jobless vexed period rombha realistic aga depict seithu irukinga...hope u give him some good news ;-) As always another suspense filled epi sis :clap: :clap: thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 04 - சுபஸ்ரீShanthi S 2019-05-12 03:37
ring a ring a rosesnu rhymes vachu ipadi payamuruthuringa 👌 Good epi Subhashree.

Koncham sad koncham thigil.

Mele enna nadakuthunu parpom.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 04 - சுபஸ்ரீmadhumathi9 2019-05-11 20:59
facepalm vairam pogumidamellam asambaavidham nadakkirathey?enna kaaranam :Q: waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 04 - சுபஸ்ரீAnu22 2019-05-11 18:02
Super epi sis
Diamond kuzhanthai Kala effect pannuma?
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 04 - சுபஸ்ரீSahithyaraj 2019-05-11 14:45
Padikka padikka goosebumps :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top