Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 01 - பிந்து வினோத் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 01 - பிந்து வினோத்

Roja malare rajakumari

ஹாய் ஃபிரென்ட்ஸ், இங்கிலாந்து அரச குடும்பம் பற்றி தெரிந்துக் கொள்வது எனக்கு மிகவும் பிடித்த ஒரு பொழுதுபோக்கு. அப்படி அந்த அரசக் குலத்தினரை பற்றி படிக்கும் போது, இது போல மாடர்ன் (ஆனால் ட்ரேடிஷ்னல்) அரச குடும்ப பின்னணியில் ஒரு சிம்பிள் காதல் கதை எழுதினால் என்ன என தோன்றிய எண்ணத்தின் விளைவு தான் இந்த கதை :-) ஈசி - கோ - ஜாலி கதை :-)

ஆண்டு - 2019

இடம் - சேனைத் தீவு *

மச்சிவாய! நமச்சிவாய! அந்த ஈஸ்வரன் உங்களுக்கு சக்தியையும், ஞானத்தையும் கொடுக்கட்டும்!’ என தன் காலில் விழுந்து வணங்கிய ரோஹினியை, மனமார வாழ்த்தினார் ரோஷன்.

நிமிர்த்து நேரே நின்ற ரோஹினி, கண்களை எட்டாத புன்னகையுடன்,

“வணக்கம் தாத்தா!” என்றாள்.

தன்னுடைய சொந்த பேத்தியைப் போல அவர் தூக்கி வளர்த்த ரோஹினியின் முகத்தில் இருந்த வருத்தம் ரோஷனின் மனதையும் வருத்தியது.

அவர்கள் இருக்கும் சேனைத் தீவு* பசிபிக் பெருங்கடலின் நடுவே இருக்கும் ஒரு சிறிய தீவு.

சர்வதேச அளவில் புகழ்ப்பெற்ற சுற்றுலா தளமாகவும், கடல் தொடர்பான உணவுகளுக்கு பிரபலமானதாகவும் இருக்கும் தீவு அது.

அங்கே ஆயிரக்கணக்கன மக்கள் வாழ்ந்தாலும் இருபத்தி ஓராம் நூற்றாண்டான இந்த காலத்திலும் அமைதியான மன்னராட்சியே அங்கே நடந்து வந்தது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் சோழர்களுடன் வர்த்தக ரீதியாக நெருக்கமான உறவு கொண்டிருந்ததால் இப்போதும் தமிழை முக்கிய மொழியாக பேசும் தீவாக இருந்தது.

சேனைத்தீவின் மன்னராக இருந்த ரோஹினியின் தந்தை ரஞ்சன் பத்து வருடங்களுக்கு முன் இறந்த பிறகு அவரின் மனைவி ராணி ரேவதியே ராஜாங்க விஷயங்களை கவனித்து வந்தார்.

திடீரென மாரடைப்பில் ரேவதி இறந்து விட ரோஹினி தாயையும், சேனைத்தீவு ராணியையும் இழந்து நின்றது!

இருபத்தி ஐந்து வயதில் பெற்றோரை இழந்து நிற்கும் ரோஹினியின் நிலையை எண்ணி ஆதங்கப் பட்டார் ரோஷன்.

ஆனால் இப்போது அவளுக்காக வருத்தப் பட்டுக் கொண்டு நிற்கும் நேரமில்லை என்பதை உணர்ந்தவராக,

“இளவரசி, உங்களுக்கு தெரியாதது இல்லை. உங்க அம்மா ராணி ரேவதி இறந்ததினால் நம்ம தீவு ராஜா, ராணி இல்லாமல் அனாதையாக இருக்கு. இந்த நேரத்தில் இளவரசியான நீங்க தான் ராணியாக மூடி சூடனும். ஆனால் உங்களுக்கு ராஜாங்க விஷயங்களில் அனுபவம் இல்லை. அதனால நீங்க நம்ம தளபதி விக்கிரமாதித்தனை கல்யாணம் செய்துக்கிட்டா உங்களுக்கும் நல்லது, நம்ம தீவுக்கும் நல்லது” என்றார் திடமான குரலில்.

ரோஹினியின் முகத்தில் கோபம் எட்டிப் பார்த்தது.

“என்ன தாத்தா பேசுறீங்க? நாம என்ன பதினெட்டாவது நூற்றாண்டிலா இருக்கோம். 2019ஆம் வருஷத்தில வந்து இப்படி சொல்றீங்க? என் கல்யாணம் என் விருப்பம் போல தான் நடக்கும்”

“இளவரசி நீங்க சொல்வது சாதாரண விஷயங்களுக்கு சரி தான். உலகத்துல பெண்கள் தனியாகவே எவ்வளவோ செய்றாங்க. ஆனால் ஆயிரகணக்கான மக்களுக்கு ராணியா இருந்து தலைமை தாங்குறது என்பது வேற. உங்களுக்கு அதில் அனுபவம் இல்லை. விக்ரம் ரொம்ப நல்லவர். இந்த தீவுக்காகவே எதையும் செய்பவர்”

“என்னை கல்யாண செய்துக்குற தியாகத்தையும் செய்வார்!!!”

“இப்படி பிடிவாதம் பிடித்தால் எப்படி இளவரசி?”

இந்த கேள்வியை அவர் கேட்டப் போது,

“ஹ்க்கும்...” என யாரோ தொண்டையை சரி செய்யும் ஓசைக் கேட்டது.

ரோஹினி, ரோஷன் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

அங்கே விக்ரம் நின்றிருந்தான்.

முப்பது வயதை நெருங்கி கொண்டிருக்கும் விக்ரமின் தோற்றத்தில் எந்த குறையையும் காண ரோஹினியால் முடியவில்லை.

ஆறடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்துடன் தான் இருந்தான்.

நிமிர்ந்து நேராக அவளின் கண்களை பார்க்கும் அந்த கண்களில் நேர்மையும், கூர்மையும் பளிச்சிட்டது!

அவன் குணத்தை பற்றியும் அவள் இதுவரை தவறாக கேள்வி பட்டதில்லை.

ஆனால் திருமணம் என்பது வேறு விஷயம்!

ஏனோ விக்ரமை அவளுடைய கணவனாக நினைத்துப் பார்க்க கூட அவளால் முடியவில்லை.

இரண்டு பேரும் தன்னைப் பார்த்து விட்டதை தெரிந்துக் கொண்ட விக்ரம், அவர்களின் முன்னே வந்து நின்றான்.

“உங்க பேச்சில் குறுக்கிட்டதற்கு மன்னியுங்கள் இளவரசி, திவான்”

“பரவாயில்லை விக்ரம். நாங்க பேசிட்டு இருந்தது உன் சம்பத்தப் பட்ட விஷயம் தானே” என்று விக்ரமிடம் சொன்ன ரோஷன், ரோஹினியிடம்,

“இன்னும் இரண்டு நாளில் நல்ல முகூர்த்தம் இருக்கு இளவரசி. அன்னைக்கு உங்க திருமண அறிவிப்பை சொல்லி நிச்சயதார்த்தம் முடிச்சிடலாம். உங்க அம்மாவின் இழப்பில் இருந்து நீங்க வெளி வந்த பிறகு... ஒரு மூன்று நாலு மாதத்துக்கு அப்புறம் கல்யாணத்தை வச்சுக்கலாம். இந்த தீவு மக்களுக்காக நீங்க இதை செய்யனும்” என்றார்.

“ஆமாம், செய்து தான் ஆகனும்!” என்றான் விக்ரம் கண்டிப்பான குரலில்.

அவன் சொன்ன தொனி ரோஹினியின் கோபத்தை அதிகப் படுத்தியது.

ஆனாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.

“திவான், இளவரசிக்கு தனிமை தேவை. நாம மற்ற ராஜாங்க விஷயங்கள் பேசனும் வாங்க...” என்று ரோஷனையும் தன்னுடன் அழைத்துச் சென்றான் விக்ரம்.

அவர்கள் இருவரும் சென்ற உடன் ரோஹினியின் கோபம் சுயப்பச்சாதாபமாக மாறியது!

அவள் ஏன் இளவரசியாக பிறக்க வேண்டும்...??? சாதாரண பெண்ணாக பிறந்திருக்கக் கூடாதா...???

சொந்த அம்மாவின் மரணத்தைப் பற்றிக் கூட வருத்த பட முடியாமல் நிற்கும் நிலை தேவை தானா!!!!

அவளுக்கும் அவளின் சொந்த நாடான இந்த சேனைத்தீவை பிடிக்கும் தான்...!

ஆனால் அதற்காக விக்ரமை கல்யாணம் செய்துக் கொள்வதா???

முடியவே முடியாது என அவளின் மனம் சண்டித்தனம் செய்தது!

* - கற்பனைத் தீவு

Episode # 02

Go to Roja malare rajakumari story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 01 - பிந்து வினோத்AdharvJo 2019-05-12 12:29
Unga karpanai Island la travel pana waiting :D Nice start bindu ma'am :clap: :clap: look forward to read next update.

THank you and :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 01 - பிந்து வினோத்Bindu Vinod 2019-06-23 07:45
thanks adharv :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 01 - பிந்து வினோத்Shanthi S 2019-05-12 03:53
vaamma duraiyamma ;-)

Princess Rohini ena seiranu parpom 👌
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 01 - பிந்து வினோத்Bindu Vinod 2019-06-23 07:45
:P nandri calvin :D
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 01 - பிந்து வினோத்madhumathi9 2019-05-11 21:05
:clap: nalla thodakkam.but :Q: vikram nallavaraa irukkum pozhuthu marukka kaaranam enna endru therinthu kolla miga aavalaaga kaathu kondu irukkirom. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 01 - பிந்து வினோத்Bindu Vinod 2019-06-23 07:44
Thank you madhumathi :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 01 - பிந்து வினோத்ரவை.. 2019-05-11 18:51
Bindu vinod! Writing historical serial is taking a great risk. More than the readers, the writer has to read a lot! Language has to be in tune with the period of the story. Wish you all the best! Started with a bang!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 01 - பிந்து வினோத்Bindu Vinod 2019-06-23 07:43
Thanks ji. But this is not historical series :-)

This one's happ in 2019. I have mentioned it in the episode also.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top