Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 09 - பூர்ணிமா செண்பகமூர்த்தி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 09 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

Idho oru kadhal kathai

டிகார ஒலியையும் மேசை விளக்கின் ஒளியையும் தவிர வேறு எதுவுமில்லாத அமைதியான இரவில் என்றுமில்லாத அதிசயமாய் தூங்காமல் கதையைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டு இருந்தான் அமுதன்.

வெள்ளைத்தாமரை இதழ்-8 இதோ ஒரு காதல் கதை பகுதி-8

தொலைக்காட்சியில் தனக்குப் பிடித்த நிகழ்ச்சி ஒன்றை பார்த்து கொண்டு இருந்தாள் ரம்யா .

தொகுப்பாளினி : வணக்கம் . யார் பேசறிங்க ?

தொலைபேசிக்குரல் : வணக்கம் . நான் தினேஷ் பேசறேன் மேடம் .

தொகுப்பாளினி: தினேஷ் , எப்படி இருக்கீங்க ?

தொலைபேசிக்குரல்: நான் நல்லா இருக்கேன் மேடம் . நீங்க எப்படி இருக்கீங்க ?

தொகுப்பாளினி: நானும் நலம் ! அப்புறம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க தினேஷ் ?

தொலைபேசிக்குரல்: நான் இன்ஜினியரிங் படிச்சிட்டு இருக்கேன்.

தொகுப்பாளினி: ஒ குட் ! என்ன பாட்டு வேணும் தினேஷ் உங்களுக்கு ?

தொலைபேசிக்குரல்: மேடம், நான் விஜய் பேன் . எனக்கு அவர் நடிச்ச "வசீகரா" படத்தில் இருந்து வேணா வேணா விழுந்திடுவேனா சாங் போடுங்க !

தொகுப்பாளினி: இந்த பாடலை யாருகாவது டெடிகேட் பண்றீங்களா?

தொலைபேசிக்குரல்: இந்த சாங்கை என்னோட முறைப்பொண்ணு முட்டகண்ணிக்காக டெடிகேட் பண்றேன்.

தொகுப்பாளினி: அவங்க பெயர் முட்டகண்ணியா?வித்தியாசமா இருக்கே !

தொலைபேசிக்குரல்: இல்ல இல்ல அவ நிஜப் பேர் அது இல்ல. அவ கண்ணு ஆளை விழுங்கற அளவு பெருசு. ரெண்டு கண்ணும் ரெண்டு கோழி முட்டை சைசுக்கு இருக்கும்.அதான் அந்த பேரு. அது மட்டும் இல்ல, அவளுக்கு நிறைய பேர் இருக்கு, மிரிண்டா பாட்டில், ரம்மினு

தொகுப்பாளினி: ஓகே தினேஷ் . நீங்க கேட்ட அந்த பாடல் இப்போது உங்களுக்காகவும் உங்க முட்டகண்ணிக்காகவும் ..

பாடல் தொடங்கியது .

"வேணா வேணா விழுந்திடுவேனா, கண்கள் கண்டால் கவிழ்ந்திடுவேனா?"

இவன் அந்த தினேஷ் தானோ? இவன் திமிருக்கு அளவே இல்லையா ? வேற தினேஷா இருக்குமோ ?முட்டைகண்ணி முறைப்பொண்ணு, அத்தைப்பொண்ணுன்னு வேணும்னே கதை சொல்லிட்டு இந்த பாட்டை டெடிகேட் பண்ணச் சொன்னானே!கடைசியா ரம்மின்னு சொன்னா மாதிரி கேட்டுது.என் பிரமையோ யோசித்துக்கொண்டே ரிமோட்டில் வேறு சேனல் மாற்றியவளை, “நல்ல சாங் அக்கா! சிநேகா விஜய் காம்போ சூப்பரா இருக்கும்!கேட்க விட மாட்டியே என்றான் அவள் தம்பி ரகு. “தம்பி! நீ டென்த் படிக்கிற !டிவி பக்கமே வரகூடாது! ஓடிப்போ ! என்று அவனை விரட்டி கொண்டிருந்தாள்.

மறுநாள் மதியம். ராபின் தனியாப் பேசணும்னு வரச் சொன்னதற்கு என்ன காரணம்? சும்மா யோசிச்சிட்டே இருக்கிறதுக்கு நேர்ல போய் பார்த்திடலாம்! என்ன பெருசா ஆகிடப்போகுது ?என்று நினைத்தவாறே அவனது வகுப்புக்குச் சென்றாள் ரம்யா. ராபின் வகுப்பறையில் அவன் மட்டுமே இருந்தான். தினேஷ் இல்லை என்று பார்த்தும் ரம்யாவின் கண்கள் அங்கும் இங்கும் தேடின. அதை உணர்ந்து கொண்ட ராபின், "வா ரம்யா , உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.! அதைத் தனியா தான் நான் சொல்லணும்.

அதனாலதான் அவங்க ரெண்டு பேரை கழட்டி விட்டுட்டு நான் மட்டும் வெயிட் பண்றேன் . கார்த்திக்கும் , கண்மணியும் லவ் பண்றது அவங்க வீட்ல தெரிஞ்சு ஒரே பிரச்சனை . கண்மணிக்கு பாதி நாள் அடியும் திட்டும் தான். போனா வாரம் கூட அவளை கன்னத்தில் அவங்கம்மா அறைஞ்சு எப்படி வீங்கி இருந்தது தெரியுமா? வீட்ல அடிவாங்கிட்டு வண்டில இருந்து விழுந்திட்டேன், பூச்சி கடிச்சி அலர்ஜி ஆகிடுச்சுனு பொய் சொல்லுவா. உன்கிட்ட கூட அவ அப்படித்தான் சொல்லி இருப்பா.அவ நல்லாப் படிக்கிற பொண்ணுன்னும் அவளோட ப்யூச்சர் நல்லா இருக்க படிப்பு முக்கியம்னு யோசிச்சிட்டு அந்த காரணத்துக்காகத்தான் தொடர்ந்து அவளைப் படிக்க அனுமதிச்சிட்டு அவளை காலேஜ்க்கு அனுப்பிட்டு இருக்காங்க. இல்லைன்னா எப்பவோ அவளைக் காலேஜ்ல இருந்து நிப்பாட்டி இருப்பாங்க. கண்மணி வீடு எங்க வீடு இருக்கிற ஏரியால தான் இருக்கு. கார்த்திக், கண்மணி ரெண்டுபேரையும் எனக்கு ஸ்கூல் டேஸ்ல இருந்தே தெரியும். இதனால் எப்பவும் அவங்க வீட்டுல சண்டை, டென்ஷன் தான் நீ இது மாதிரி லவ் பிரச்சனையில மாட்டிக்கிராத. இங்கே சலனப்படுத்துற மாதிரி விஷயங்கள் நடக்கும்தான். அதில் நாம தடுமாறாமல், தடம் மாறாமல் படிப்பைப் பார்த்துட்டுப் போய்டே இருக்கணும். நம்ம குடும்பம்லாம் லவ் பண்ணினா ஏத்துக்குற குடும்பம் கிடையாது . அது உனக்கே தெரியும்னு நினைக்கிறேன். நீயும் நல்லாப் படிக்கிற பொண்ணு. உன் ஸ்டடீஸ்,பியூச்சர் கரியர் எல்லாத்தையும் ஸ்பாயில் பண்ணிடாத. சரி நேரம் ஆகிடுச்சு. அவனுங்க வந்திடுவாங்க. நீ உன் கிளாஸுக்கு போ. பார்த்து!. சீக்கிரம் கிளம்பு . அப்புறம் பார்ப்போம். நான் சொன்னத மறந்துராத பை " என்று படபடவென சொல்லி முடித்தான் ராபின்.

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Poornima ShenbagaMoorthy

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 09 - பூர்ணிமா செண்பகமூர்த்திmadhumathi9 2019-05-12 22:17
wow nice epi. :clap: robin nalla& poruppulla annanaa irukkar (y) dhinesh pogum vazhi sariya? Waiting to read more. :GL: :thnkx: 4 this epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 09 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-05-13 16:16
Thank you friend Madhumathi9 for the comment and encouragement! Cheers! Keep reading!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 09 - பூர்ணிமா செண்பகமூர்த்திAdharvJo 2019-05-12 12:38
Paah Robin sema bro thaan (y) ena oru munecharikai!! avaroda frnd-a thangachi-ku route vidradhu theriyama irukurare facepalm how sad!!
muttakanni-ku dhinesh kodukura expl very funny :D :P dialogues and screen play is cool and enjoyable ma'am as always :clap: :clap: Sad of Kannmani :sad:
Aduthu ena agum therindhu kola waiting. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 09 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-05-13 16:14
Thank you friend AdharvJo for your constant encouragement! Happiness overloaded to see your comments every week :) :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top