Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 04 - பிந்து வினோத் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 04 - பிந்து வினோத்

Roja malare rajakumari

நிரஞ்சனாவின் கேள்வி பொதிந்த பார்வை சாரதாவை சிரிக்க வைத்தது.

“இப்போ எதுக்கு நீ என்னை இப்படி பார்க்குற?”

“நீங்க ஹை-ஃபை அம்மான்னு தெரியும்... ஆனாலும் எல்லா பொண்ணையும் வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்ற உங்க மூத்த மகன் அஜய்க்காக இப்படி எல்லாம் செய்வீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை!!!!”

“கொழுப்பு தானே உனக்கு...” என்று சொல்லியபடி, வலிக்காமல் அவளின் காதை திருகிய சாரதா,

“நீ சொல்ற மாதிரி செய்யலாம்னு எனக்கும் கூட ஆசை தான் நிரு... ஆனா இந்த விஷயத்தில மூத்தவனை விட மோசமா இருந்த விஜய்க்கே உன்னை மாதிரி ஒரு ரவுடி காதலி கிடைச்சிருக்கும் போது, மூத்தவனுக்கு அவனுக்கு ஏத்த மாதிரி ஒருத்தி வராமலா போயிடுவான்னு விட்டுட்டேன்...” என்று சொல்லிவிட்டு சிரித்தார் சாரதா.

“ப்ச்... போங்க அத்தை! அதெல்லாம் எந்த காலத்தில் நடக்க போகுது!” என்று அலுத்துக் கொண்டாள் நிரஞ்சனா.

சரியாக அதே நேரம், “அம்மா...” என்று அழைத்தப் படி கேட்டை திறந்து உள்ளே நுழைந்தான் அவன்!

‘பூவெல்லாம் உன் வாசம்’ அஜித்தை நினைவுப்படுத்தும் தோற்றத்துடன் இருந்தவனை அலுப்புடன் பார்த்தாள் நிரஞ்சனா!

சாரதாவோ முகம் மலர அவனை வரவேற்றார்.

“வா அஜய்! வெள்ளி தான் வருவேன்னு சொன்ன? அதிசயமா சீக்கிரம் வந்திருக்க... வா வா... உனக்கும் டீ போடுறேன்...”

“அதெல்லாம் வேண்டாம்மா. மத்தியான ட்ரெயின்லயே சீட் கிடைச்சது, அதனால அதிலேயே கிளம்பிட்டேன்.... ரொம்ப டையர்டா இருக்கு. தூங்கப் போறேன்... எழுந்து நைட் உங்க சமையலை ஒரு வெட்டு வெட்டுறேன்...” என்றவன், நிரஞ்சனா பக்கம் பார்த்து,

“க்ளாக் வேலை செய்யுதோ இல்லையோ, நீ ஓசி டீக்கு தினமும் கரக்ட்டா ஆஜர் ஆகிடுற நிரஞ்சனா” என்றான்.

நிரஞ்சனா அவனுக்கு பதில் சொல்ல தொடங்கும் முன்பே கையில் இருந்த duffle bag உடன் உள்ளே சென்று மறைந்தான்.

அவன் சென்ற பக்கமே பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா.

“அவனை பத்தி தெரியுமே விடு நிரஞ்சனா” என்று அவளை தேற்ற முயன்றார் சாரதா.

“இல்லை அத்தை, இது சரி இல்லை! நான் என்ன நினைக்குறேன்னா ஹாஸ்பிட்டல்ல யாரோட குழந்தையையோ உங்களுக்கு மாத்தி கொடுத்திட்டாங்க... இவரு உங்க மகனா இருக்க சான்ஸே இல்ல”

“அடி!! அவன் அவங்க அப்பா மாதிரி!”

“ஹுஹும், மாமா இப்படி முசுடா இருந்திருந்தா நீங்க எப்படி அவரை கல்யாணம் செய்திருப்பீங்க?”

“வாயாடி!!! அவரும் முசுடு இல்லை, என் மகனும் முசுடு இல்லை!”

“மாமாவை பத்தி சின்னதா ஏதாவது சொன்னா கூட, உடனே பொங்கி எழுந்திருவீங்களே!!! அவர் இருந்தப்போ உங்க இரண்டு பேரையும் பார்திருக்கனும்...”

பேச்சுவாக்கில் அப்படி சொன்ன நிரஞ்சனா, சாரதா முகம் வாடுவதைக் கண்டு மனம் சுணங்கினாள்.

மாமாவை பற்றிய பேச்சை எடுத்திருக்க கூடாது என மனதினுள் சொல்லிக் கொண்டு, தன்னைத் தானே மானசீகமாக virtual ஆக கொட்டிக் கொண்டவள், சாரதாவின் கவனத்தை திருப்ப,

“ஆமாம், யாரோ கெஸ்ட் வர போறதா சொன்னீங்களே அத்தை, யாரு அது?” என்றுக் கேட்டாள்.

“தெரிஞ்சவங்க வீட்டுப் பொண்ணு நிரஞ்சனா. ஒன்னு இரண்டு மாசம் தங்குவான்னு நினைக்கிறேன்.”

“அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சா???”

“ஹுஹும்... இல்லை....”

“கல்யாணம் ஆகாத பொண்ணை எந்த தைரியத்துல இரண்டு பசங்க இருக்க வீட்டுக்கு அனுப்பி வைக்குறாங்க???”

“எல்லாம் நீயும் நானும் காவலுக்கு இருக்கோம்ங்குற தைரியம் தான், வேறென்ன!”

“அடடா, எனக்கு அடுத்து காவல் காக்குற வேலை வேறயா??? ஆளை விடுங்க சாமி!”

“நான் விட்டுட்டா உன்னை விஜய் விட்ருவானா??? ஹ்ம்ம்...!!!!???”

கேலியாக கேட்டு சிரித்த சாரதாவை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் நிரஞ்சனா.

அவளின் சொந்த அம்மாவிடம் கூட இப்படி ஜாலியாக கதை பேசி சிரித்ததில்லை...

அதென்னவோ இவரிடம் சிரிப்பு, கோபம் அரட்டை என எதையுமே பகிர முடிந்தது.

விஜய்க்கும் அவளுக்கு நடுவே இருக்கும் காதல், ஒரு இக்கட்டான சூழலில் தொடங்கி மெல்ல மெல்ல மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருப்பது...

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 04 - பிந்து வினோத்Thenmozhi 2019-06-02 20:39
super. Younger brother smart-a ready-a irukkar. Annan yen ivvalavu slow-a irukkar? :D
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 04 - பிந்து வினோத்madhumathi9 2019-05-17 12:18
Hey :dance: intha thodar mazhaiyil magizhchiyodu padiththu kondu irukkirom. (y) :clap: :thnkx: :thnkx: 4 this epi.but munbellam niraiya pages koduppeergale? Ippo ean kuraivaana pages kodukkareenga :Q: waiting to read more. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 04 - பிந்து வினோத்AdharvJo 2019-05-17 11:34
wow rendu epis-um lively and cute bindu ma'am 😍👏👏👏👏

Niru and aunty Oda combo :cool:

Unga series oda sweet people's meet Pani achi :dance: so Ro than Ajay Oda maharani-ya vara porangalo :Q: waiting to see what happens next. Thanks for the super fast epis
Keep rocking
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top