Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 03 - பிந்து வினோத் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 03 - பிந்து வினோத்

Roja malare rajakumari

லா சொன்ன விபரங்களை குறிக்கிட்டு பேசாமல் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார் சாரதா.

சாரதாவின் கணவரின் தம்பி மணியனை தான் கலா திருமணம் செய்திருந்தார். மணியன் கலாவை கை விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டப் போது சாரதா மட்டும் கலாவை ஆதரித்தார்.

அதனால் தான் பல வருடங்கள் ஓடி, சாரதாவின் கணவர் மறைந்தப் பிறகும், இப்போதும் இவர்கள் இருவர் நடுவே நல்லுறவு இருந்துக் கொண்டு இருந்தது.

கலா ரோஹினியை பற்றி முழுவதுமாக சொல்லி முடிக்கவும்,

“பாவம் தான் அந்த பொண்ணு... சரி, நான் என்ன செய்யனும் கலா?” என்று நேரடியாக கேட்டார் சாரதா.

“ரோஹினி வெளி உலகம் தெரியாம வளர்ந்த பொண்ணுக்கா. அவ தங்கி இருக்க பாதுகாப்பான இடம் வேணும். அவளை நல்லபடியா பார்த்துக்க அன்பான ஒருத்தங்க வேணும்”

“என் வீட்டுக்கு உன் ராஜக்குமாரியை அனுப்பி வைக்கலாம்னு யோசிக்குறேன்னு சொல்லு”

“அது.... வந்து... ஆமாம்க்கா... ரோஹினி ஒரு ஆறு ஏழு மாசம் உங்க வீட்டில தங்கினா உங்களுக்கு பரவாயில்லையா?”

“என்ன கேள்வி இது கலா? எத்தனை தடவை சொல்லி இருக்கேன், இது உன் சொந்த வீடு போலன்னு... “

“ஹப்பா! தேங்க்ஸ்க்கா... அப்புறம், நீங்க சில விஷயங்களை மனசில வச்சுக்கனும்...”

“என்ன?”

“ரோஹினி யாரு, என்னங்குறது வெளியே யாருக்கும் தெரிய வேண்டாம்...”

“சரி... நான் சொல்லலை...”

“அப்புறம், ரோஹினி இளவரசி! அதாவது...”

“புரியுது கலா. கவலைப்படாதே... அவளோட அரண்மனை மாதிரி நாங்க பெரிய வீட்டில இல்லைனாலும் பெரிய மனசை வச்சிருக்கோம், அவளை நல்லபடியா பத்திரமா பார்த்துப்போம்...”

“நீங்க எப்படி பார்துப்பீங்கன்னு எனக்கு தெரியும்க்கா.... ஆனால் ரோஹினி ஏதாவது சொல்லி, உங்க மனசு வருத்தப் பட்டுறக் கூடாதே...”

“என் மனசெல்லாம் அப்படி வருத்தப் படுற மனசில்லைன்னு உனக்கே தெரியும்... அதிகமா யோசிக்காம அவளை அனுப்பி வை. நான் பார்த்துக்குறேன்”

“சரிக்கா! ரோஹினி எந்த ப்ளைட்ல வரான்னு விபரங்களை சீக்கிரமே உங்களுக்கு சொல்றேன்...”

போனை கட் செய்து வைத்த சாரதா, ரோஹினிக்காக தான் செய்ய வேண்டியவற்றைப் பற்றி யோசித்த படி மேஜை மீதிருந்த அலார்ம் கிளாக்கை பார்த்தார்.

மணி நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது.

நிரஞ்சனா வரும் நேரமாகிவிட்டதே என அவசரமாக சமையலறைக்கு சென்று பாலை ஸ்டவ்வில் வைத்து டீ தயாரிக்கும் வேலையில் ஈடுப்பட்டார்.

ஐந்து நிமிடத்தில் அழைப்பு மணி ஓசைக் கேட்டது.

எட்டிப் பார்த்தால் நிரஞ்சனா தான் நின்றிருந்தாள். பச்சை நிற சேலையில் பளிச்சென்று இருந்தாள்!

கிரில் கதவை அவளுக்காக திறந்து விட்டார் சாரதா.

உள்ளே நுழையும் முன்பே,

“அத்தை, ரொம்ப டையர்ட்!!!! எங்கே என் டீ...” என்றாள் நிரஞ்சனா.

“டீச்சரா இருந்துட்டு உனக்கு நல்லதை சொல்லிக் கொடுக்க நான் கஷ்டப் பட வேண்டி இருக்கு. முதல்ல போய் முகத்தை கழுவிட்டு வா...”

“டீ குடிச்சிட்டு கழுவுறேன் அத்தை...”

“ஹுஹும் அதெல்லாம் முடியாது”

“இருங்க, இருங்க உங்க பையனை கல்யாணம் செய்தப்புறம் உங்க கண்ணுல விரலை விட்டு ஆட்டுறேன்!!!!!”

“நீ தானே!!!! க்கும்...!!! அதை அப்புறமா பார்க்கலாம்... இப்போ போய் முகம், கையெல்லாம் வாஷ் செய்துட்டு வா... உனக்காக டீ மட்டும் இல்லை, முறுக்கும் வச்சிருக்கேன்.”

சினுங்கியப் படி சென்றாள் நிரஞ்சனா.

அவள் வரும் முன் அவளுக்காக டீ, முறுக்கு அனைத்தையும் தயாராக எடுத்து வைத்தார் சாரதா.

சாரதா பக்கத்தில் அமர்ந்து தேநீரை பருகிய நிரஞ்சனா,

“உங்க டீ இஸ் தி சீக்ரட் ஆப் மை எனர்ஜி அத்தை... என்ன ஸ்ட்ராங், என்ன டேஸ்ட்...” என்றாள்.

“போதும், போதும் ஐஸ் வச்சது... இன்னைக்கு எனக்கு எக்ஸ்ட்ரா வேலை இருக்கு... சீக்கிரமா குடிச்சு முடி...’

“அது என்ன? அப்படி என்னை விட முக்கியமான வேலை?”

“அந்த லாஸ்ட் ரூமுல கோடவுன் மாதிரி எல்லா பொருளையும் போட்டு அடைச்சு வச்சிருக்கேன். அதை கிளீன் செய்யனும்...”

“ஏன் எதுக்கு கிளீன் செய்ய போறீங்க?”

“வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வர போறா...”

“வரப் போறான்னா சொன்னீங்க??? பொண்ணா வரப் போறா???”

“ஆமாம்” என்றார் சாரதா.

கண்களில் கேள்வியுடன் அவரை பார்த்தாள் நிரஞ்சனா.

Episode # 02

Episode # 04

Go to Roja malare rajakumari story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 03 - பிந்து வினோத்madhumathi9 2019-05-17 08:49
wow iniya adhirchi + kudhoogalam.intha epi seekkiram kodththatharkku big :thnkx: (y) aduththa epiyai padikka kaaththukondu irukkirom. :GL: mam.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 03 - பிந்து வினோத்Srivi 2019-05-17 08:01
Unexpected short update Bindu Sissie.. So nice.. appo andha Saradha aunty paiyan a Rohini love pannuvalo. Waiting to read more..
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top