Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 05 - பிந்து வினோத் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 05 - பிந்து வினோத்

Roja malare rajakumari

ப்ச்.. என்னம்மா நீங்க.... இப்படி ஆபிஸ் டைம்ல ஏர்போர்டுக்கு வர சொல்றீங்க???”

சிறுவனைப் போல சினுங்கியப் படி கேட்டான் அஜய்.

“அஜய், இப்படி அலுத்துக்கிட்டு நீ ஒன்னும் வர வேண்டாம். நானே உபெர்ல போயிக்குறேன்... விஜய்க்கு மட்டும் இன்ஸ்பெக்ஷன் இல்லைனா இந்த பிரச்சனையே இல்லை...”

“ஈவ்னிங் டைம்னா எனக்கும் பிரச்சனை இல்லம்மா...”

“சும்மா பொய் சொல்லாதே...! இது வரைக்கும் எத்தனை நாள் லீவ் போட்டு இருக்கன்னு எனக்கு கொஞ்சம் சொல்லு”

“அம்மா, அண்ணா கல்யாணத்துக்கு அப்புறம் எடுக்க லீவ் எல்லாத்தையும் சேர்த்து வச்சிருக்கான்னு நினைக்கிறேன்”

“டேய் விஜய் வாயை மூடிட்டு சாப்பிட்டுட்டு ஆபிஸுக்கு கிளம்பு... அம்மா கிட்ட இப்படி பத்தி வைக்குற வேலை எல்லாம் செய்யாதே”

“அதெப்படிண்ணா வாயை மூடிட்டு சாப்பிடுறது???”

“டேய்ய்ய்ய்ய்....”

அஜய்யின் கோபத்தை பார்த்து சாரதாவும், விஜயும் வாய் விட்டு சிரித்தார்கள்.

“இப்போ என்ன சொல்றீங்கம்மா? மதியம் ஒரு மணிக்கு நான் உங்களை வந்து பிக்கப் செய்யனும், அதானே?”

“ஆமாம் அஜய்! டைமுக்கு ஏர்போர்ட் போகனும். வரது சின்ன பொண்ணு....”

“சின்ன பொண்ணுன்னா அஞ்சு வயசுப் பொண்ணா???”

“விஜய் நடுல பேசாதே... இவளுக்கு இருபத்தி மூணு, நாலு வயசு இருக்கும். ஆனா முதல் முறையா சென்னைக்கு வரா. அவளை பத்திரமா வீட்டுக்கு அழைச்சுட்டு வர பொறுப்பு நமக்கு இருக்கு...”

“ப்ச்... சித்தி பேசாம இந்த பொண்ணை அவங்களே நம்ம வீட்டுக்கு வந்து விட்டுட்டு போயிருந்திருக்கலாம்...”

“கலாவால வர முடிஞ்சா வந்திருப்பா அஜய்... இவ்வளவு வருஷத்துல உன் சித்தி உதவின்னு எதுவுமே கேட்டது இல்லை. முதல் முறையா கேட்டிருக்கா... “

“சரி சரிம்மா... நான் டான்னு ஒரு மணிக்கு வந்திருவேன்... நீங்க ரெடியா இருங்க”

“என் செல்லம்டா கண்ணா நீ....”

“அண்ணன் மட்டும் செல்லமா? அப்போ நான்?”

“நீ கிட்சன்ல இருக்கே அந்த வெல்லம்டா தம்பி....!!!! சரி எனக்கு டைமாச்சு நான் கிளம்புறேன்... நீயும் நேரத்துக்கு கிளம்பு! அம்மா ஒரு மணிக்கு வந்திருவேன் ரெடியா இருங்க!!!”

ரண்டு மகன்களும் வேலைக்கு கிளம்பி சென்ற பின், ரோஹினிக்காக சுத்தபடுத்தி இருந்த அறைக்கு மீண்டும் சென்று பார்வையிட்டார் சாரதா.

விஸ்தாரமான அறை தான்... இரண்டு பெரிய ஜன்னல்கள் இருந்ததால் வெளிச்சமாகவும் இருந்தது... வீட்டை சுற்றி தென்னை மரம், வேப்ப மரம் என பல ரக மரங்கள் இருந்ததால், காற்றும் சிலு சிலுவென வீசியது...

ட்யூப் லைட் ஸ்விட்சை மீண்டும் தட்டி அது எரிவதை உறுதிப் படுத்திக் கொண்டு, ஃபேன் ஸ்விட்சை தட்டிப் பார்த்தார் சாரதா.

சின்ன ஒலியுடன் ஓடிய அந்த மின்விசிறியில் இருந்து காற்று நன்றாக தான் வந்தது... இருந்தாலும்... வருபவள் இளவரசி ஆச்சே....!!!!

தன்னுடைய அறையில் இருந்த டேபிள் ஃபேனையும் கொண்டு வந்து வைத்தார்....

படுக்கை விரிப்புகள், தலையணை என அனைத்தையும் மீண்டும் சரி பார்த்து அழகாக எடுத்து வைத்தார்...

சொன்னது போலவே ஒரு மணிக்கு ‘டான்’ என வந்து நின்றான் அஜய்.

“ஹப்பா என்ன ஒரு பங்க்ச்சுவாலிட்டி கண்ணா! உன்னை பார்த்து கடிகாரத்துல நேரத்தை செட் செய்யலாம் போலருக்கே!!!!”

“செய்ங்க செய்ங்க... இப்போ கிளம்புங்க! இரண்டு மணி நேரத்துக்குள்ளே வந்திருவேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்...”

“நான் ரெடியா தான் இருக்கேன்... வா கிளம்பலாம்...”

சாரதாவும் அஜயும் சென்னை விமான நிலையத்தை அடைந்த போது ரோஹினி வரும் மலேஷிய விமானம் தரை இறங்கி இருந்தது.

விமான நிலையத்தில் இருந்த விமான பட்டியலில் விமான எண்ணை கண்டுப்பிடித்த அஜய்,

“நல்ல வேளை ஃபிளைட் டிலே இல்லாமல் டைமுக்கு வந்திருச்சு... அந்த பொண்ணு பேரு என்ன சொன்னீங்கம்மா அவ வந்துட்டா கிளம்பிடலாம்...”

“அவ பேரு ரோஹினி” என்ற சாரதா, கையோடு கொண்டு வந்திருந்த ‘ரோஹினி’ என்று எழுதப்பட்டிருந்த சிறு பெயர் பலகையை கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்றார்.

இது வேறா என்று அலுத்தப் படி அம்மாவின் கையில் இருந்த பலகையை வாங்கி தூக்கிப் பிடித்தான் அஜய்.

சாரதாவிற்கு ‘புல்லரித்தது’!!!! அஜயும் விஜயும் பார்த்து பார்த்து அவருக்காக இப்படி ஒவ்வொன்றும் செய்யும் போது அவருக்கு இதயம் கனிந்து இளகும்... மகன்களின் இந்த பாசத்தை பார்க்க கணவர் இல்லாமல் போய் விட்டாரே என்ற ஏக்கம் தோன்றும்...

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 05 - பிந்து வினோத்Thenmozhi 2019-06-02 20:41
what Binds usually unga hero's heroine-kaga enna ellamo seivanga, ivaru oru petti thookka ivvalavu kashta padurar ;-)

Princess madam, vachu senga :P :D
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 05 - பிந்து வினோத்madhumathi9 2019-05-18 05:56
:grin: ajaikkum,rohinikkum adikkadi sandai varumendru ninaikkiren.nice epi.egarly waiting to read more. wow idhu ennevendru sollvathu magizhchiyin alavu koodikonde selgirathu. wow ore naalil 3 epi. :dance: :GL: :GL: (y) :thnkx: :thnkx: 4 this epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 05 - பிந்து வினோத்AdharvJo 2019-05-17 20:40
wow cute epi Bindu ma'am :clap: :clap: Ingayum Ro oru adambaramana life than expect panuvangalo :Q: anyway her "nga" mannerism is cool :D innum ivanga Ajay-i eppadi ellam verupethuvangan padika miga miga arvamaga irukken :P Ajay pavam than ;-) hope aunty will samilchify!!

thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# ரோஜா மலரே ராஜகுமாரிராஜம். 2019-05-17 20:21
இருவர் சந்திப்பும் முதலில் மோதலில் ஆரம்பிக்கும்.
பின்னர் காதலில் முடியும்.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top