Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes

“ஏன் இப்படி செய்து வைத்திருக்கிறது?”

“ம்…. எதற்காக இப்படி இருக்கும்?. பொதுவாக இதுபோன்ற வீர்ர்கள் தங்களை பற்றிய விவரங்களை ரகசியமாகவே வைத்திருப்பார்கள். எதிரிகள் கையில் சிக்கிவிடக் கூடாதே என்று… இது அந்த ஷட்டிலை இயக்கும் விதம் பற்றிகூட பதிந்து வைத்திருக்கிறது… ஒருவேளை இவற்றிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்குமோ…” அவன் பேசிக் கொண்டு இருக்கும்போதே அந்த விவரங்கள் மறைய ஆரம்பித்தன.

“ஹனிகா இவற்றை உடனேயே உன் விசுவல் ரெக்கார்டரில் பதிவு செய்து கொள்.” என்று பரபரத்தான்.  அவன் சொன்னதை செய்து கொண்டே,

“இவை ஏன் இப்படி மறைந்து போகின்றன.”

“குறிப்பிட்ட டைமிற்குள் ஏதாவது பாஸ்வேர்ட் தர வேண்டியிருக்கும். ஆட்டோமேட்டிக்காக அவை குறிப்பிட்ட இடைவெளியில் தோன்றி மறையலாம். நீ இதை செக் செய்து பார் ஹனிகா”

“சரி…”

“எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் வருகிறது. இவை முப்பத்திரெண்டு ஜோடி குரோமஸொம் உடையவை என்று சொன்னாயே… அதில் பெரும்பாலும்  மூளை தொடர்புடைய புரோட்டினை உருவாக்கும் என்று நினைக்கிறேன். அதீத சிந்திக்கும் திறன் உடையவையாக இவை இருக்கலாம். அதனாலேயே அவை ஞாபக மறதிக்கும் ஆட்படலாம்.”

“அது எப்படி?”

“எல்லா உயிரினங்களுக்கும்  ஆரிஜின் ஒன்றுதான்.ஆரம்பத்தில் அவற்றின் குரோம்ஸொம் என்ணிக்கையும் ஒன்றாகத்தான் இருந்திருக்கும். காலப்போக்கில் அவற்றின் வாழ்க்கை மாற்றத்திற்கேற்ப குரோம்ஸொமின் எண்ணிக்கை அதிகரிக்கவோ குறையவோ செய்திருக்கலாம். இந்த ஏலியன்கள் அறிவை வளர்க்கப்போய் நினைவை இழந்திருக்கலாம்.”

“அதனால்தான் இந்த குறிப்புகளை பதிவு செய்து வைத்திருக்குமோ?”

“கரெக்ட்… ம்… நம்முடைய பயத்தையே சக்தியாக எடுத்துக் கொண்டு… ஆக்ஸிஜனை உட்கொண்டு உயிர் வாழும்… குறைந்த ஞாபக சக்தியே உடைய உயிரினம் இந்த அளவிற்கு மின்வரோவின் மீது பகை பாராட்ட என்ன காரணம்?”

“க்வார்ட்ஸ்…?”

“அதை உங்களிடம் இருந்து அது பறிக்கிறதா… இல்லை நீங்கள் அதனுடன் போட்டி போடுகிறீர்களா?”

“சிம்ஹன்… இந்த ஏலியன்களுடன் எங்களுக்கு ஜென்மபகைதான்”

“அதை யார் உருவாக்கியது? சும்மா ஒரு எதிரியை கை காட்டிக் கொண்டு வேறு விசயங்களை சிந்திக்க விடாமல் செய்வது யார். இந்த இடத்தில் எல்லாமே பழைய விசயங்களாக இருக்கிறது. குறிப்பிட்ட கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றன. நீ இதைபற்றி சிந்தித்து பார் ஹனிகா.”

“சுதந்திரமாக சிந்திப்பதே முன்னேற்றதின் அடையாளம.” அவன் சொல்லி விட்டு மறைந்து போனான்.

அவன் சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்த ஹனிகாவிற்கு பல குழப்பங்கள் வந்தன. அவளுடைய கிரகத்திற்கு எதிரி இந்த ஆன்ட்ரமீடா ஏலியன்கள் இல்லையா? அவளுடைய தாத்தா காலத்திலிருந்தே இந்த கிரகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை… ஒரிடத்தில் எல்லாமே தேங்கி நிற்கின்றன.. எப்போதோ போட்ட வரையறைக்குள்தான் வாழ்கின்றனர்.

அவர்களை சிந்திக்க விடாமல் ஒரு வலிமையான எதிரியை உருவாக்கி அதனை அழிப்பதே வாழ்வின் நோக்கம் என்ற மாயையை உருவாக்கி… அவர்களை பொம்மைகள்போல் வைத்திருப்பவர்கள் யார்?

பூமி கிரகம்!

இமாலயம்.. பனிப்பிரதேசம்… கருத்தரங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர்கள் பேசியது சிம்ஹனுக்கு தெரிந்த விசயங்கள்தான். தெரிந்த விசயங்களை பேசுவதற்கு பதில் அவற்றின் நீட்சியை பேச வேண்டும்… அப்போதுதான் புதிய செய்திகள் கிடைக்கும். அவனுக்கு போரடித்து போனது. எழுந்து வெளியே வந்தான்.

வெள்ளை பனி போர்வைபோல போர்த்தி இருந்தது. ஹனிகா சொன்ன செய்திகளை நினைத்து பார்த்தபடி நடந்து கொண்டிருந்தான்.

“உனக்காக நான் காத்திருந்த காலம் கண்ணீராக கரைந்து போனது. கண்கள் கல்லாகிப் போயின. எனை பற்றி கைகோர்க்க என் தெய்வமே நீ இன்று வந்து விட்டாய்… என் கண்ணில் ஈரம் இன்னும் உள்ளதை அறிவாயோ…” என்ற குரல் கேட்டு திரும்பினான்.

அங்கே காவி உடையணிந்த வயதான பெண்… சாத்விபோல  நிற்க… அவளுடைய முகம் நோக்கியவன் அதிர்ந்து போனான்…. அந்த சாத்வி…. ஹனிகாபோலவே இருக்கிறாரே…

“நீங்கள் யார்?” என்றான்.

“ஊழ்வினையின் பதிவுகள் மனமெங்கும் ரணமாக பதிந்திருக்க… உடல் எனும் நரகம் சுமந்து உனை காண காத்திருப்பவள்… சிம்ஹன்…”

அவனுடைய பெயரை சொல்லவும் இன்னும் அதிர்ந்து போனான். அவருக்கு எப்படி அவனுடைய பெயர் தெரியும்? அவர் ஏன் ஹனிகாபோலவே இருக்கிறார்…? ஹனிகா மின்வரோவை சேர்ந்தவள் அல்லவா? அவளின் நகல்போலவே இருக்கிறாரே… கொஞ்சம் வயதான நகல்…! சிம்ஹன் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே நின்றான்.

தொடரும்

Episode 11

Episode 13

Go to Yaanum neeyum evvazhi arithum story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

Add comment

Comments  
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார்AdharvJo 2019-05-24 21:23
who is this granny oru velai indha aliens oda avathar aga irukkumo :Q: sema dazzling epi Ms sagampari :clap: :clap: :hatsoff: to your R&D (y) Indha information ellam therinjika sema exciting aga irukku :yes: look forward to see what happens next. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார்Srivi 2019-05-22 00:29
Intriguing and interesting..woo..sema sema..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார்Sagampari 2019-05-23 13:48
Thank you srivi :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார்madhumathi9 2019-05-21 18:13
:clap: nice epi.interesting aaga irukku.avar hanikaavin thaayaaga irukkumo :Q:
Egarly waiting 4 next epi. :GL: (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார்Sagampari 2019-05-23 13:47
Thank you Madhumathi..
Oh.. she is not Manila's mom..
Guess who..This is a science fiction story
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top