(Reading time: 4 - 7 minutes)

தொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ

Kipi to kimu

ன்புள்ள கிமு,

ஹாய் !!! திஸ் இஸ் கிபி

என்னை நினைவு இருக்கா?

இல்லையா? (வெரி பேட்)

சரி நானே என்னை அறிமுகம் செய்துக்கிறேன். 

நான் சென்னைக்கு மிக அருகில் உள்ள கலை இன்ஜினியரிங் காலேஜில் டிரிபிள் ஈ பிரிவின் மூன்றாம் ஆண்டு மாணவி. இரண்டு வாரங்களுக்கு முன்பு எங்கள் காலேஜின் இருபத்தி ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் எங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது மாணவர்கள் சேலத்தில் உள்ள உங்கள் தாய்மை கருணை இல்லத்திற்கு வந்திருந்தோம். நாள் முழுக்க உங்களோடு கழித்தோம் . . 

இப்ப இப்ப நினைவு வந்திருக்குமே . .

காலையில் நாங்கள் வந்ததும் எங்கள் அனைவரையும் உபசரிக்க நீயும் உன் இல்லத்தை சேர்ந்தவர்களும் ரஸ்னா கொடுத்தீங்க. நான் கூட உதவுகிறேன் என ஒரு கிளாஸ் ரஸ்னாவை உன் மேல் தெரியாமல் கொட்டிவிட. .  . நீ  முதலில்  என்னை முறைத்து  பின்பு நான் அசடுவழிவதை பார்த்ததும் சிரித்துவிட.

கிருஷ்ண பிரியா என நான் கையை நீட்ட

நீயும் கிருபா முல்லை  என எனக்கு கைக் கொடுக்க

நீ கிமு நான் கிபி என நாம் ஹை பை கொடுத்துக் கொண்டோமே. .

அந்த ஒரு நொடியில் நம் நட்பு மலர்ந்தது.

நாள் முழுக்க நாம் ஒன்றாக சுற்றி திரிந்தோம். உன் இல்லத்தில் உள்ள வயோதிகர்கள் மற்றும் சிறுபிள்ளைகளை அறிமுகம் செய்து வைத்தாய். ஒன்றாக மதியம் சாப்பிட்டோம்.

எத்தனை கலாட்டா கிண்டல் கொண்டாட்டம். மாலையில் பிரிகையில் இருவர் கண்களும் கலங்கிவிட்டன. ஏதோ பல ஆண்டுகள் நட்பு போல.

அப்பாடா பிளாஷ் பேக் முடிஞ்சதா . .

ஹா ஹா ஹா . . . கிமு என் தமிழ் எப்படி?

எனக்கு இரண்டு வாரமாக உன் நினைவுதான் கிமு. ஒரு ரகசியம் சொல்லவா யாரிடமும் சொல்லாத . . உன்னோடு பேச இல்லத்திற்கு போன் செஞ்சேன். ஆனால் (ஹிட்லர்) வார்டன் பேச அனுமதிக்கல.

எக்சாம் படிக்கிறாள் என ஏதோ காரணம் சொல்லிட்டார். போன்ல பேச இரண்டு நிமிட மட்டுமே அனுமதியாம். நமக்கு ரெண்டு நிமிஷம் போதுமா என்ன?

நீ எப்படி இருக்க?. . ( ஓ இது முதல்ல கேட்க வேண்டிய கேள்வியோ? சரி விடு Debut லெட்டரில் இதெல்லாம் சகஜம்)

இதுதான் நான் எழுதும் முதல் லெட்டர். அதுவும் தமிழ்ல. நான் யாருக்குமே லெட்டர் எழுதினதே இல்லை. அவசியமும் ஏற்படல. ஸ்கூல்ல கூட லெட்டர் ரைட்டிங்க சாய்ஸ்ல விட்டுட்டேன்.

என் லெட்டர் உனக்கு புரியுதா?

வாட்ஸஅப் . . பேஸ்புக்ல சாட்டிங் பண்ற மாதிரி லெட்டர் எழுதுறேன். நீ தப்பா நினைக்க மாட்டே தெரியும். கிமு இதுக்கு மேல பார்மலா எழுத வர்ல. எக்சாம் எப்படி எழுதி இருக்க? நான் எக்சாம் சுமாரா பாஸ் பண்ற அளவு எழுதி இருக்கேன்.

என் அப்பா ராஜன் எம்.என்.சி ல வொர்க் பண்றார். ஆபீஸ்தான் அவர் முதல் குடும்பம். அம்மா ரம்யா ஹவுஸ் வொய்ப்  நார்த் கொரியால இருந்து நார்த்தங்கா ஊறுகாய்வரை அத்துபிடி.

என் தம்பி சரண் டிவெல்த் எழுதியிருக்கான். அடுத்து விவசாயம் படிக்கப் போறானாம். என் பேமிலி பத்தி அன்னிக்கு சொல்ல மறந்துட்டேன். அதான் ஒரு சின்ன இன்ட்ரோ.

ஒரு ஹாப்பி நியூஸ் அடுத்த மாசம் நான் அம்மா அப்பா தம்பி எல்லாரும் உன்னை வந்து மீட் பண்ணப் போறோம். அப்ப உனக்கு புது போன் வாங்கிட்டு வரேன். எப்ப வேணா பேசலாம்.

அப்புறம் சிமி பாட்டி, கோக்குல். வரின், ஹிட்லர் எல்லாரையும் கேட்டதா சொல்லு.

நீ உன் பாஸ்ட் லைப் பத்தி சொன்ன விஷயங்கள் என் மனசுல பதிஞ்சுப் போச்சு. இப்படிகூட வாழ்க்கையில நடக்குமானு ஆச்சரியமா இருக்கு கிமு. சினிமா நாவல்ல படிக்கிற மாதிரி இருக்கு.

நம்ம ரெண்டு பேருக்கும் கிட்டதட்ட ஒரே வயசுதான் இருக்கும். உன்னுடைய மெச்சூரிட்டி அண்ட் லைப் பத்தின கிளாரிட்டி எனக்கு சத்தியமா இல்லடா.

என்னை கஷ்டமே தெரியாம வளர்த்துட்டாங்க. எனக்கு என்ன வேணுமோ அது அடுத்த நிமிஷம் என் கையில இருக்கும். இது நல்லதா கெட்டதானு தெரியில.  

எனக்கு ரிப்ளை லெட்டர் எழுதுவியா? காத்திட்டு இருக்கேன்.

வித் லாட்ஸ் ஆப் லவ்

கிபி

என்னும்

கிருஷ்ண பிரியா

கடிதங்கள்  இணைக்கும் . . .

Episode # 02

Go to Kipi to Kimu story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.