Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 13 - ஆதி [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 13 - ஆதி [பிந்து வினோத்]

Vaanum mannum katti kondathe

ண்ணாடி வழியே தெரிந்த இயற்கை அழகு சினேகாவின் கண்ணில் பட்டாலும் அவளின் கருத்தில் நிறையவில்லை.

மீண்டும் ஒரு முறை கைக் கடிகாரத்தில் நேரம் பார்த்தாள்.

அவள் வேலையை தொடங்கும் நேரம் ஆகி விட்டது புரிந்தது...

இன்றும் ஆகாஷ் இந்த பக்கம் வரப் போவதில்லையா???

அவளுள் ஏமாற்றம் குமிழிட்டது... ஆகாஷ் ஆபிஸிற்கு வருகிறான் என்பது தெரிந்தாலும் அவனை சந்தித்து, பேசி ஒரு வாரம் ஆகப் போகிறது...

ஏன் இப்போதெல்லாம் முன்பு போல சீக்கிரமாக இந்த் பக்கம் வராமல் போகிறான்? வேலையில் பிஸியாக இருக்கிறானோ?

மனதில் ஓடிய கேள்விகளுடனே தன் க்யூபிற்கு சென்றாள்...

அது என்னவோ ஆகாஷை பார்க்க வேண்டும் என அவளின் மனம் பரபரத்தது...

அவனுக்கு அவளை பற்றிய நினைவு கூட இருக்குமொ என்னவோ...!

அவளின் மனதுக்குள் வளர்ந்து வரும் ஆசைக்கு எதிர்காலம் பிரகாசமாக இல்லை என்பது அவளுக்கு தெளிவாக புரிந்தது. ஆனாலும் அதை ஏற்றுக் கொண்டு ஆகாஷை விட்டு விலகி இருக்க அவளுக்கு மனம் வரவில்லை...

இந்த ப்ராஜக்ட் அதிகபட்சம் நான்கு ஐந்து மாதங்கள் மட்டுமே... அதற்கு பிறகு இப்படி எல்லாம் அவனை அருகில் இருந்து பார்ப்பதுக் கூட அரிதாகி விடும்...

சரி, அப்படி பார்த்து என்ன செய்ய போகிறாய்? என அவளுடைய அறிவு அதட்டிக் கேட்ட கேள்வியை சாமர்த்தியமாக ஒதுக்கி வைத்தது அவளின் இதயம்!

அவளின் செல்போனில் வாட்ஸ்-அப் மெசேஜ் வந்திருப்பதின் அறிகுறியாக மெல்லிய ஓசைக் கேட்டது.

போனை கையில் எடுத்து பார்த்தாள்.

மகாலட்சுமி ஜோக் ஒன்றை அனுப்பி இருந்தாள்.

அதை படித்து புன்னகைத்தாலும் அவளின் மனதில் குற்ற உணர்வும் தோன்றியது.

இத்தனை வருடங்களில் மகாலக்ஷ்மியிடம் இருந்து அவள் எதையுமே மறைத்ததில்லை! இப்போது ஆகாஷ் மீது அவளுக்கு தோன்றி இருக்கும் அன்பு ஒன்றை தவிர...!

மகாலட்சுமிக்கு தெரிந்தால் அவள் என்ன சொல்வாள் என்பது சிநேகாவிற்கு நன்றாகவே தெரியும்... ஏன் அவளின் அறிவுமே அதை தானே சொல்லிக் கொண்டிருக்கிறது...!!!

அது ஏன் காதல் என்று ஒன்று வந்து விட்டால் இதயமும், மூளையும் இப்படி அடித்துக் கொள்கின்றன???

“சினேகா!”

சியாமளாவின் குரலில் சிந்தனையில் இருந்து வெளிப்பட்டாள் சினேகா.

“சொல்லுங்க மேம்”

“நேத்தைக்கு நீ கொடுத்த ட்ராயிங்க்ல மேப் ஸ்கேல் சரியா இல்லைன்னு பிரபா சொல்லிட்டு போனார்.”

“இல்லையே மேம், கரக்ட்டா தான் செய்தேன்...” என்று சொல்லிய படி அவளின் கம்ப்யூட்டரில் பிரபாகருக்கு அனுப்பிய டிராயிங்கை ஓபன் செய்துப் பார்த்தாள்.

ஒரு சில வினாடிகளிலேயே பிரபாகர் சொன்னது சரி என்பது புரிந்தது!

எப்படி இப்படி ஒரு முட்டாள்த்தனமான தவறை செய்தாள்???!!!

கேள்வி தோன்றிய உடனேயே கேள்விக்கான பதிலும் அவளுக்கு கிடைத்தது!

எல்லாம் ஆகாஷை நினைத்து உருகிக் கொண்டிருந்ததால் வந்தது தான்!!!

“என்ன ஆச்சு சினேகா, ஆர் யூ ஆல் ரைட்? ரெண்டு மூணு நாளா வித்தியாசமா இருக்க மாதிரி இருக்க?”

ஷியமளாவின் கேள்வி சினேகாவை இன்னும் அதிகமாக தடுமாற வைத்தது.

இப்படி எல்லோரும் தெரிந்துக் கொள்வது போலவா நடந்துக் கொள்கிறாள்!!!???

ஆனாலும் சமாளித்துக் கொண்டு,

“பெரிசா ஒண்ணுமில்லை மேம். லைட்டா ஃபீவரிஷா, தலைவலியும் இருந்துச்சு... அதான் கொஞ்சம் டல்லா இருந்தேன்” என்றாள்.

“அதானே பார்த்தேன்! சினேகாவாவது கவனமில்லாமல் தப்பு செய்றதாவது!!! வேணும்னா லீவ் எடுத்து ரெஸ்ட் எடுத்துக்கோ... ஆனால் கொஞ்சம் கவனமா பிரபாக்கு ஃபைல்ஸ் அனுப்பு. பிரபா சரியா பார்க்காம ஆகாஷுக்கு அனுப்பினாருன்னு வை, அப்புறம் அவ்வளவு தான்”

“இனிமேல் கேர்ஃபுல்லா இருக்கேன் மேம்!!! சாரி...”

“சாரி எல்லாம் எதுக்கு! நீ சின்சியர் சிகாமணின்னு எனக்கு தெரியும்!”

அதற்கு பிறகு மனதை அலைப் பாய விடாமல் பத்து மடங்கு சின்சியாரிட்டியுடன் வேலையை செய்தாள்.

ஆனாலும் மாலை நேரம் நெருங்கவும், மனம் மீண்டும் அலை பாய்ந்தது... ஆகாஷை ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது...

மனதை அடக்க இயலாமல் மேஜை மேலே இருந்த இரண்டு மூன்று பேப்பர்களை கையில் எடுத்துக் கொண்டு ஆகாஷின் அறை பக்கமாக சென்றாள்...

அங்கே இருந்த அவனின் செக்ரட்டரி ஐஸ்வர்யா, அவளை பார்த்து நட்புடன் கை அசைத்தாள்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 13 - ஆதி [பிந்து வினோத்]saaru 2019-06-07 17:10
Ha ha gentleman aaakum
Pakalam
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 13 - ஆதி [பிந்து வினோத்]AdharvJo 2019-06-06 17:33
:D ninga solli illana nanga avaru gentlemen ah illai-yanu alosanai nadathi iruka matome ji :grin: Nama gentlemen ennama pretend panuraru….. :P
lovely update ma'am :clap: :clap: Sneha dreams laye midhakuradhu cute.... :dance:
maha n her hubby ena problem ?? MIL than problem-o :Q: look forward to see what happens next. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 13 - ஆதி [பிந்து வினோத்]madhumathi9 2019-06-06 11:59
:clap: nice epi (y) waiting to read more. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top