Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 05 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 05 - சசிரேகா

unnale-ennaalum-en-jeevan-vazhuthe

மானா மதுரை

மல்லி தோட்டத்தில் இருந்த கயிற்றுக் கட்டிலில் வானத்தில் நிலவை ரசித்துக் கொண்டே சுற்றிலும் வீசிய மல்லியின் வாசனையோடு கூடிய இதமான காற்றில் தன்னை மறந்து பழைய நினைவுகளில் மிதந்துக் கொண்டிருந்தான் முத்து.

சிறிது நேரம் போனதும் பழைய நினைவுகளில் அவனுக்கு ஏற்பட்ட கசப்பான வாழ்க்கையை நினைத்து வெறுத்தான்.

அந்நேரம் அவனுக்கு வைஷ்ணவியின் நினைவு சற்றும் வரவில்லை, ஏதேதோ நினைத்துக் கொண்டு கவலையுடன் கண்கள் கலங்கி கண்ணீர் கன்னத்தை வருட அதை துடைக்க கூட மனமின்றி வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்நேரம் அவனது செல்போன் மணியடிக்கவே குழம்பினான்.

இந்நேரம் யாரு ஃபோன் பண்றது வீட்ல இருந்துதான் பண்ணுவாங்க போ எடுக்கலைஎன சொல்லிக் கொண்டே கண்கள் மூடினான்.

ஃபோனோ விடாமல் அடிக்கவே பொறுக்க முடியாமல் ஃபோனை எடுத்துப் பார்த்தான். வைஷ்ணவி என இருக்கவே அதிர்ந்து எழுந்து அமர்ந்தவன் அவசரமாக ஃபோனை ஆன் செய்து போசினான்

ஹலோ வைஷூஎன தயக்கமாக பேச அவளோ உற்சாகமாக பேசினாள்.

ஆமாம் நண்பா, நான்தான் எப்படியிருக்க நண்பா சாப்பிட்டியா, தூங்கறியா, டிஸ்டர்ப் பண்ணிட்டேனா நான் இப்பதான் சாப்பிட்டேன், ஹாஸ்டல்ல சாப்பாடு ஓரளவுக்கு சுமார்தான் ஆனா பசியோட இருக்கற நேரத்தில அமிர்தமா இருந்துச்சி தெரியுமா,

இன்னிக்கு சப்பாத்தியும் சப்ஜியும் வைச்சிருந்தாங்க ஒரு வெட்டு வெட்டிட்டேன் ஆமா உன் வீட்ல எல்லாரும் நல்லாயிருக்காங்களா, ஆமா என்ன எதுவுமே பேச மாட்டேங்கற, தூங்கறியா நான் வேணா அப்புறமா பேசட்டுமா, ஏன்னா எனக்கு இப்ப தூக்கமே வரலை, நேத்து காலேஜ் சீட்டு வாங்க அது இதுன்னு ஊர் சுத்தினதால அசதியில தூக்கம் வந்துடுச்சி, இன்னிக்கு இங்கயே இருக்கேனா பொழுதும் போகலை, தூக்கமும் வரலை,

நாளைக்கு சன்டே வேற, நான் ஒரு ப்ளான் வைச்சிருக்கேன் என்ன தெரியுமா நானும் உமாக்காவும் லைப்ரரி போகப் போறோம் ஓ சாரி உனக்கு உமாக்கா யார்ன்னு தெரியாதுல்ல நான் அவங்களைப் பத்தி சொல்றேன்” என அவள் ஆரம்பித்து ஒரு பெரிய கதையே கூறிக் கொண்டிருந்தாள்.

முத்துவை பேசவே விடவில்லை, பேச அவனுக்கும் எதுவும் தோன்றவில்லை அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லக்கூட அவள் வாய்ப்பு தராததால் அவள் சொன்ன கதையை ம் கொட்டிக் கொண்டே கேட்டு வைத்தான்.

நேரம் சென்றது, நிலாவோ வானத்தின் மையத்திற்கு வந்துவிட்டது. கைக்கடிகாரத்தில் மணியை பார்த்தான். இரவு 1 மணி என்றது.

மறுபக்கம் வைஷூவோ மிகவும் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தாள் ஏதேதோ கதைகள் சொன்னாள் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத கதைகள், அந்த ஹாஸ்டலில் தங்கியிருந்த பெண்களை பற்றி கூறிக் கொண்டே இருந்தவள் உடனே தனது தோழிகளை பற்றிப் பேசலானாள். அடுத்து காலேஜ் பற்றிப் பேசலானாள்.

3 வருடம் தான் படித்த காலேஜில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை சொல்லி சிரித்து சிரித்துப் பேச சில இடங்களில் தன்னையும் அறியாமல் சிரித்தான் முத்து, பல இடங்களில் அவளது உற்சாகமான பேச்சில் மனம் மகிழ்ந்தான்.

இதோ அதோவென இரவு 2 மணியளவில் மெல்ல கொட்டாவி விட்டபடியே பேசினாள் வைஷூ, அதைக் காதால் கேட்டதும் உடனே புரிந்துக் கொண்ட முத்து அப்போதுதான் பேசவே ஆரம்பித்தான்

வைஷூ வைஷூ நான் சொல்றதைக் கேளுஎன அவளது பேச்சை பாதியில் நிப்பாட்ட முயற்சி செய்ய அவளும் சட்டென அமைதியாகி

என்னப்பாஎன கேட்டாள்

தூங்கு

ஏன் உனக்கு தூக்கம் வருதாஎன்றாள் கொட்டாவி விட்டபடியே

ஆமாம் உனக்கும் தூக்கம் வருது போல

ஆமாம் முத்து சரி நான் தூங்கறேன் குட்நைட்

குட்நைட்என சொல்லி ஃபோனை அவள் கட் செய்யவும் நிம்மதி பெருமூச்சுவிட்டபடியே சிரித்த முகத்துடன் கட்டிலில் அமர்ந்தான்.

இப்போது அவனது கவலை அனைத்தும் பறந்துவிட்டது போல் ஒரு உணர்வு, சிறிது நேரம் ஊர் கதைகளை கேட்டதில் அவனது கவலையை மறந்தே விட்டான்.

வைஷ்ணவியின் பேச்சில் இருந்த சிறுபிள்ளைத்தனத்தில் தனது மன கவலையை மறந்தவன் கண்கள் மூடினான்.

இப்போது அவனுக்கு அந்த இதமான காற்றுகூட இன்பத்தை அளிக்க அதை ரசித்தபடியே உறங்கலானான்.

விடிந்தது

Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 05 - சசிரேகாmadhumathi9 2019-06-06 07:27
wow 16 pages :dance: nice epi sasi. (y) neenga kathai kondu pogum vidham padikkum aarvaththai thoondugirathu :clap: muthu,vaishnavi iruvarume than pakkaththai maraikkiraargal.eppo solla pogiraargal :Q: waiting to read more. :GL: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 05 - சசிரேகாAdharvJo 2019-06-05 20:13
interesting update ma'am :clap: :clap: vaidhegi sounds innocent hope she takes wise decision :yes: nondhu noodles aga irukuravarukku phone pottu blade poduradhu ena nyayam pa :P nama hero porumaisali thaan but avaroda love yen uthikichi :Q: boss unga feelings ellam numb agidichinu no sad feelings....u have grown up boss mudhurichi vandhudichi ;-) anyway ellam nuts pottu health drink kudupanga kudichi nala padinga...adutha varam parkalam . thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 05 - சசிரேகாதீபக் 2019-06-05 18:23
Sis today's episode fantastic :clap: . Hide and seek game of Muthu and vaishnavi is super both don't want to relieve the truth (y) . Eagerly waiting for next part :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top