Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 13 - பூர்ணிமா செண்பகமூர்த்தி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 13 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

Idho oru kadhal kathai

முடிவிலா இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் என்று முடியும் எனத் தோன்றியது அமுதனுக்கு, கதையின் வேகம் சற்றுக் கூடினால் தான் என்ன, கதையின் எழுத்தாளர் பெண் போல, எனவே நிதானமாக யோசித்துக் கதையை எழுதிக் கொண்டிருக்கிறாள் என அமுதன் நினைத்தான்.

வெள்ளைத்தாமரை இதழ்-12     இதோ ஒரு காதல் கதை  பகுதி-12

ன்டா  அவனைப் பார்த்தாலே தெரியல. அது அவ தம்பின்னு . அவ தம்பி ரகு.!”

“நான் தான் சரியா பார்க்கலைன்னு சொன்னேனே!”

அது சரி. நீ ஒருத்தன விடாம சண்டைக்குப் போறியே. இதெல்லாம் நல்லா இல்லடா.

என்னால அவ கூட வேற யார் பேசினாலும் தாங்க முடியல.

இதெல்லாம் சரி  வராது தினேஷ். அவங்க குடும்பத்தைப் பத்தி உனக்குத் தெரியாது.அவ தான் அவங்க வீட்ல ஒரே பொண்ணு. எல்லாருக்கும் ரொம்பச் செல்லம். அவங்க இஷ்டப்படி தான் அவளும்  நடப்பா. அவளோட இஷ்டப்படி தான் அவங்களும் நடப்பாங்க.

நீ ரெண்டாவது ஒண்ணு சொன்னியே அது போதும். அவ இஷ்டப்படி அவங்க நடந்தா போதும். என் இஷ்டப்படி அவ நடந்தா போதும்.

அப்பா சாமி நீ அடி வாங்குறதை யாராலும் மாத்த முடியாது போல. படத்தைப்  போட்டுறப் போறான். உள்ளே போவோம். வந்து தொலை!

படம் பார்த்தும் முடிந்து விட்டது.  டேய்  இங்கே பக்கத்தில தானே அவ வீடு இருக்கு. அங்கே போவோமா?

நீ உதை  வாங்குறதும் இல்லாம எங்களையும் கோர்த்து விடுறியா. நாங்க போறோம்பா எங்க வீட்டைப் பார்த்து.

நான் போய்  அவங்க வீட்டைத் தேடித் பார்க்க தான் போறேன்டா.

என்னவோ பண்ணு. நாளைக்கு உயிரோட நீ இருந்தேனா கிளாஸ்ல பாப்போம்.

ராபின் பத்தடி முன்னே செல்ல, கார்த்திக் மட்டும் பின் நின்று, தினேஷின் காதோடு காதாக,  அன்னிக்கு கிளாஸ்ல அவளை  வரச்சொல்லி ராபின் மட்டும் தனியாப் பேசினப்பவே எதோ அவகிட்ட சொல்லி இருப்பான்டா. வேண்டாம் நீ இப்போ ரிஸ்க் எடுக்காத. வீட்டுக்குப் போகலாம். ஏதாவது பெரிய பிரச்சினை வந்திரும்.

சரிடா, வீட்டுக்கே போகலாம்.

மறுநாள் , மூவரும் சாப்பிட்டு விட்டு காண்டீனில் இருந்து வந்து கொண்டு இருந்தனர்.

ரம்யா மட்டும் தனியாக  ஒரு மரத்தருகே நின்று  மேலே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவள் நின்ற இடத்தில் இருந்து கட்டடத்தின் மாடிகளில் உள்ள வராந்தாவில் யார் நிற்கிறார்கள் என்று பார்க்க முடியும்.

கீழ இருந்து யாரடா அங்கே பார்க்கிறாள்  உன் அருமைத்  தங்கச்சி?

ஒரு வேளை  என்னைத் தான் தேடுறாளோ? – இது தினேஷ்

உன் தலை! என் கிட்ட எதாவது புக் கேட்க என்னைத் தேடி இருப்பா. - இது ராபின்.

அவ கிட்டேயே  கேட்போமா?

வேணாம்டா  வேணாம் ! நானே கண்டு பிடிக்கிறேன்.

தினேஷ் வேகமாக ஓடிச் சென்று படிகளில் ஏறி அவள் பார்வை படுமாறு நின்றான்.

யதேச்சையாக இதை கவனித்த ரம்யா திடுக்கிட்டு தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.  

படபடப்புடன் தன் வகுப்புக்குள் புகுந்தும் விட்டாள்.

"என்ன இது? என்ன இது? தப்பாகி விடுமோ ?" இனிமேல் அங்கே நிற்கக் கூடாது.

சாயங்காலம் பேருந்தில் கண்மணி தான் ஜன்னலோரம் அமர்ந்து இருந்தாள். கல்லூரி வாயிலைக் கடக்கையில் ,  ரம்யா யாரையோ தேடிப்  பார்ப்பது போல் தோன்றியது.

ரம்மி, யாரைத் தேடுற. உண்மையச் சொல்லு. யாரையோ நீ தேடுற மாதிரித்தான் இருக்கு. அதெல்லாம் ஒண்ணுமில்ல!

தினேஷ் இன்று அங்கு தான் நின்று கொண்டு இருந்தான். ரம்யா ஜன்னலோரம் இல்லாவிட்டாலும் அவள் தலை எட்டி எட்டிப் பார்ப்பது அவனுக்குத் தெரிந்தது.

அவன் இதயமும் எட்டி எட்டிப் பார்த்தது.

வீட்டுக்கு வந்தும் ஒருவித படபடப்பிலேயே இருந்தால் ரம்யா.  இந்த தொலைபேசி எண்ணைப் பிடிப்பதற்குள்  எத்தனை போராட்டம் என்று எண்ணிக் கொண்டாள். இன்னும் எத்தனை நாள் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு என்றும் தெரியவில்லையே

அம்மா, சத்யாவுக்கு போன் பண்ணிக்கிறேன்.

சரி  பண்ணிக்கோ, நான் செடிக்குத் தண்ணீர் ஊற்றணும்.  சீக்கிரமா பேசிட்டு வச்சிரு. வள வளன்னு பேசிட்டு இருக்காத

ஒவ்வொரு எண்ணாக அழுத்தினாள் , எதிர் முனையில்  தொலைபேசி மணி ஒலித்தது.

ஒன்று..ரெண்டு...மூன்று..

எடுத்து விட்டார்கள் யாரோ எடுத்துவிட்டார்கள். பேசலாமா வேண்டாமா என்று உள்ளுக்குள் பயம் தயக்கம்

எதிர்முனைக் குரல் : ஹலோ !

ரம்யா : மௌனம் ..

எதிர்முனைக் குரல் : ஹலோ !  யார் பேசறீங்க. என்ன வேணும்?

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Poornima ShenbagaMoorthy

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 13 - பூர்ணிமா செண்பகமூர்த்திmadhumathi9 2019-06-09 14:32
Oh oh :Q: but avanga ammavirkku therinthaal enna nadakkum. (y) nice epi. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 13 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-06-10 16:21
thank you madhumathi! :thnkx: sila neram summa irukkiravangalai kelvi kette kelvi kette ninaikkatha visayathaiyum ninaikka vachiruvanga appadi thaan :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 13 - பூர்ணிமா செண்பகமூர்த்திAdharvJo 2019-06-09 12:37
:lol: Eli kundula mattikitta mathiri rombha casual sollurangale ji :P how did this happen Rummy :Q: hope her interest is on dhinesh!! pavam avarukku innoru bulb vendame ;-)
sema interesting update ma'am :clap: :clap: as always convo's were cool (y) BTW andha caller boy yarunu kandupidichitangala :Q: Amudhan pavam konjam additional page expect panuraru pole irukkungale (like me :P ) Curious to see how the story moves from here.
thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 13 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-06-10 16:22
Thank you AdharvJo! Every week I wait for your comments as I like you wait for the episode. Thanks for the continuous support. Few more weeks, all the questions will have the answers and I hope I will meet your expectations. Thanks a lot friend :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 13 - பூர்ணிமா செண்பகமூர்த்திThenmozhi 2019-06-09 10:18
cool epi Poornima.

women writer-na kathai nithanama pogumaama ;-) ;-) Interesting point :-)

So Ramya is in love. antah love oda future enna?

Waiting to read more.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 13 - பூர்ணிமா செண்பகமூர்த்திநன்றி! 2019-06-10 16:23
Thanks Themozhi for the comment! Usually girls have the patience and determination. That's why wrote like that. Just chumma ennoda assumption, Thanks :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top