(Reading time: 19 - 38 minutes)

தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 13 - ஸ்ரீ

Unnodu naanirukkum mani thuligal

மனமே நலமா உந்தன் மாற்றங்கள் நிஜமா

புது புது விதமா நீ சொல்லு ஏதோ வந்தது சுகமா

நீ சொல்லு நடந்தது என்ன

எனை மாற்றி போனது என்ன

அவளை நான் கண்டுக்கொண்டேன்

அங்கே நான் தொலைந்து போனேன்

காலை எழுந்தவனுக்கு கண்டிப்பாக ஷான்யாவின் தந்தையை பார்க்க போக வேண்டுமா என்றிருந்தது.இருந்தும் ஏதோ ஒரு உந்துதலில் கிளம்பிச் சென்றான்.இவன்  உள்ளே நுழைந்த நேரம் ராஜசேகர் ஒரு பெஞ்சில் சோர்வாய் அமர்ந்திருந்தார்.

மெதுவாய் அவரருகில் சென்றவன் சாதாரணமாய் இருப்பதாய் காட்டிக் கொண்டு அவரிடம் பேச ஆரம்பித்தான்.

ஹாய் அங்கிள் குட் மார்னிங்

குட் மார்னிங் ஆத்விக்..”

என்னாச்சு அங்கிள் இவ்ளோ டயர்டா இருக்கீங்க?”

ம்ம் அதெல்லாம் ஒண்ணுமில்ல..நைட் சரியா தூங்கல அதனால இருக்கும்..”

ஏன் அங்கிள் எதாவது பிரச்சனையா?சொல்ல கூடாதுனா வேண்டாம்..”

கல்யாண வயசுல பொண்ணு இருக்குறதே பெரிய பிரச்சனை தான?”

“???”

என் பொண்ணை நேத்து பெண் பார்க்க வந்துருந்தாங்க..பையன் எங்களைவிட பெரிய இடம்.எல்லாம் நல்லாதான் போய்ட்டு இருந்தது.என் பொண்ணையும் பிடிச்சுருக்குனு சொன்னாங்க.ஆனா வரதட்சனைனு ஆரம்பிச்சு அவங்க போட்ட லிஸ்ட்..என் சக்திக்கு ரொம்பவே அதிகம்.

நானும் எப்படியாவது சமாளிச்சுரலாம்னு தான் நினைச்சேன்.ஆனா என் பொண்ணு முடியவே முடியாதுனு அவங்க முன்னாடியே சொல்லிட்டா.இவ்ளோ கஷ்டப்பட்டு எனக்கு கல்யாணத்தை பண்ணி நாளைக்கு உங்க கடைசி காலத்துல என்ன பண்ணுவீங்கனு கேட்குறா?”

சரியா தான அங்கிள் கேட்டுருக்காங்க..இதுக்கு எதுக்கு நீங்க சோகமா இருக்கீங்க?”

உன்கிட்ட சொல்றதுக்கு என்ன..நா எப்பவுமே ஒரு நல்ல கணவனாவோ அப்பாவாகவோ இருந்ததில்ல ஆத்விக்.அதே நேரம் நல்ல குடும்பத் தலைவன்.புரியலை இல்ல?

என் குடும்பம் சந்தோஷமான குடும்பமா இருக்கணும் யோசிச்சு செயல் பட்டுருந்தா நா நல்ல கணவன் நல்ல அப்பா.நான் என் குடும்பம் கட்டுக்கோப்பா வெளியுலகத்துல மரியாதையான குடும்பமா இருக்கணும்னு நினைச்சு தான் இத்தனை வருஷம் வாழ்ந்துருக்கேன்.அதனால தான் நான் ஒரு நல்ல குடும்பத் தலைவன்னு சொன்னேன்.

எனக்கு இரண்டு பொண்ணுங்க இரண்டு பேரையும் சின்ன வயசிலிருந்தே என் கட்டுப்பாட்டுக்குள்ள வச்சுருந்தேன்.நான் சொல்றத தான் கேட்கணும் செய்யணும்.அவ்ளோ ஏன் நான் முடிவு பண்ண படிப்பைத் தான் இரண்டு பேரும் படிச்சாங்க.அது அவங்களுக்கு பிடிச்சுதா பிடிக்கலையா வேற விருப்பம் எதுவும் இருக்கா எப்படி எதையுமே நான் கேட்டதில்ல.

அவ்வளவு ஏன் நேத்து வந்த வரன் கூட நானா பார்த்து முடிவு செய்ததுதான்.என் பொண்ணு ஒரு வார்த்தை கூட மறுத்து பேசல.ஆனா அவங்க வரதட்சணைனால நான் கஷ்டப்படுவேன்னு யோசிச்சு என் பொண்ணு கல்யாணமே வேண்டாம்னு சொன்னதும் மனசுல முதல் தடவையா கவலை வந்துருச்சு..”

அங்கிள் ரிலாக்ஸ்..”

என் பொண்ணு என் மேல எத்தனை அக்கறையா இருந்துருக்கா..அவளுக்குத் தெரியும் எதிர்த்து பேசினா நான் அவகிட்ட கோபபடுவேன்.ஏன் அடிக்க கூட அடிப்பேன்னு தெரிஞ்சும்..

உண்மையை சொல்லணும்னா அவ  என்ன மாதிரி அப்பாகிட்ட இருந்து தப்பிச்சா போதும்னு நினைச்சு வாயை திறக்காம இருந்துருக்கலாம்.ஆனா அவ அப்படி பண்ணலையே..நா அவ நிலைமையை பத்தி ஒரு தடவை கூட யோசிக்காத அப்பாவா இருந்தாலும் அவ என்னை பத்தி யோசிச்சு என் மேல இத்தனை பாசமா இருந்துருக்காளேனு நினைச்சு நினைச்சு இராத்திரியெல்லாம் தூக்கமே வரல..”

அங்கிள் உங்க நிலைமை எனக்கு புரியுது..இருந்தாலும் நீங்க இதை நினைச்சு அளவுக்கு அதிகமா சந்தோஷம் தான் படணும்.எங்க அம்மா அப்பா அடிக்கடி சொல்லுவாங்க பெண் குழந்தைங்க இருக்குற அப்பா அம்மா எல்லாருமே ரொம்பவே பாக்கியம் பண்ணிணவங்கனு.

நீங்களும் அதில் ஒருத்தர் தான.அது மட்டுமில்லாம உங்க வளர்ப்பு தான் உங்க பொண்ணை இந்தளவு நல்ல குணத்தோட உருவாக்கியிருக்கு.அப்பறம் ஏன் வருத்தப்படுறீங்க.கொஞ்ச நாளா தான் உங்களைத் தெரியும் இருந்தும் என்னாலேயே உங்களை ஓரளவு புரிஞ்சுக்க முடியும் போது இத்தனை வருஷத்துல உங்க பொண்ணு உங்களை புரிஞ்சுக்க மாட்டாங்களா சொல்லுங்க?”

உண்மைதான்..நான் தான் யாரைப் பத்தியுமே கவலைபடாம இருந்துருக்கேன்.அதுதான் பெரிய குற்றவுணர்ச்சியா இருக்கு.உன்னை கூட எனக்கு ஏன் பிடிச்சது தெரியுமா?யார்கிட்டேயும் நா முகம் கொடுத்து பேசினதே இல்ல.கேட்டா கேட்டதுக்கு பதில் மட்டும் சொல்லிட்டு நகர்ந்துருவேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.