(Reading time: 19 - 38 minutes)

தொட்டு பேசுறதும் நம்பி வெளில போறதும் வெளில இருந்து பாக்குறவங்களுக்கு தப்பா தெரிஞ்சாலும் கூர்ந்து கவனிச்சோம்னா அதுல இருக்குற ஒழுங்கு நல்லாவே புரியும்.எங்க ப்ரெண்ட்ஷிப்பையே அதுக்கு உதாரணமா சொல்லுவேன்.அது மட்டுமில்லாம நான் ஒரு லெக்சசரர் சோ காலேஜ்ல தினம் தினம் எத்தனையோ ஸ்டண்ட்ஸை பாக்குறேன்.

அவங்களையெல்லாம் பார்க்கும் போது நட்பு மேல இன்னமும் நம்பிக்கை அதிகமாகுதே ஒழிய குறையவே மாட்டேங்குது.”

ம்ம் கரெக்ட் தான் இருந்தாலும் அந்தகால மனுஷன் இல்லையா..அதனாலயா இருக்கும்..”

ச்ச என்ன அங்கிள் இப்படி சொல்லிட்டீங்க ஆத்விக்கை விட ஒரு ஏழெட்டு வயசு அதிகமா இருப்பீங்களா அதுக்குப் போய் இப்படி சொல்றீங்களே!”,என்று அவள் முடித்தபோது ஆத்விக் அடிப்பாவி என்று முணுமுணுத்தவாறே அதிர்ச்சியாய் அவளைப் பார்த்திருந்தான்.

அட என்னம்மா நீ எனக்கு கல்யாண வயசுல பொண்ணே இருக்கா!”

என்ன வார்த்தை சொல்லிட்டீங்க..நா உங்களுக்கு ஸ்கூல் படிக்குற பையனோ பொண்ணோ தான் இருக்கும்னு நினைச்சேன்.இப்படி ஏமாத்தீட்டீங்களே!!!”,அவள் கூறிய விதத்தில் அவரே லேசாய் சிரித்து விட்டிருந்தார்.

ஹப்பாடா எங்க நா சொன்னதெல்லாம் உண்மைனு நினைச்சுருவீங்களோனு பயந்துட்டேன் அங்கிள்..பரவால்ல நீங்க ரொம்ப ஸ்மார்ட் தான்..”

நல்லா பேசுறம்மா நீ..ஆனா பல நேரத்துல உன்னை மாதிரி லேசான மனசோட இருக்குறதுதான் வாழ்க்கைக்கு நல்லது..எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா இரு..”

தேங்க்ஸ் அங்கிள்..எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்..”

அதற்குள் ஆத்விக்கின் மொபைல் அழைக்க ஜெயந்த்தின் எண் என்பதை பார்த்தவன் அவளிடம்,

ஜி மச்சான் தான் கால் பண்றாரு

ஹலோ சொல்லுங்க ஜெய்..”

“….”

..சரி சரி நா வந்துட்றேன் அதுகுள்ள..இருங்க ஆத்விகிட்ட கொடுக்குறேன்..”,என்றவள் போனைக் கொடுக்க அதை வாங்கியவன் சற்றுத் தள்ளி நின்று பேச ஆரம்பித்தான்.

என் வீட்டுக்காரர் தான்..இப்போ எல்லாம் என்னை விட இவங்க நல்லா ப்ரெண்ட்ஸ் ஆய்ட்டாங்க அங்கிள்..டூ பேட்..”

லவ் மேரேஜாம்மா உன்னோடது?”

ம்ம் கேக்க நல்லா தான் இருக்கு ஆனா நமக்கு அந்த கொடுப்பனையெல்லாம் எங்க??அம்மாவே பார்த்து பரிதாபப்பட்டு சரி போ நானே கல்யாணம் பண்ணி வைக்குறேன்னு வச்சுட்டாங்க…”

அப்பறம் எப்படி ஆத்விக்கோட அவரு இவ்ளோ நல்லா பேசுறாரு ஒண்ணும் சொல்லலையா?”

அங்கிள் ஆனாலும் நீங்க அநியாயத்துக்கு ஸ்டிரிக்ட் ஆபீசரா இருக்கீங்களே..ஜெய் ரொம்ப நல்ல மாதிரி.அதுவும் இல்லாம எங்க மேல எந்த தப்பும் இல்ல நாங்க எந்த தப்பும் பண்ணல அப்படியிருக்க என்ன சொல்ல போறாரு..நம்ம ஒருத்தரை உண்மையா நேசிச்சோம்னா அவங்களை நம்பணும் சுதந்திரம் கொடுக்கணும்அப்படி கொடுக்கப்படுற சுதந்திரத்தை ஒழுங்கான வழியில் பயன்படுத்தனும்.

இதுதான அங்கிள் எந்த ஒரு உறவுக்கும் அடிப்படை..கட்டுப்படுத்தி வைக்க நினைச்சா ஒண்ணு அந்த உறவு கட்டுப்பாடை உடைச்சு எறிஞ்சுட்டு தூரம் போய்டும்.இல்லைனா தனக்குள்ளேயே மருகி மருகி உறவை காப்பாத்திக்குறதுக்காக உள்ளுக்குள்ளே ஜீவன் இல்லாம வாழும்.இப்படி ஒரு உறவு ரொம்ப காலத்துக்கு நீடிக்காது இல்லையா..”

எத்தனை உண்மையான வார்த்தை..சின்ன பொண்ணுக்கு இருக்குற பக்குவம் எனக்கு இல்லாம போச்சே..அப்போ என் ரெண்டு பொண்ணுங்களும் எனக்காக எல்லாத்தையும் மறைச்சு உயிர்ப்பில்லாத வாழ்க்கை தான் வாழ்றாங்களா?அவங்களை உயிரோட நான் சித்திரவதை பண்ணிட்டு இருக்கேனா!!”

ஏற்கனவே ஏதேதோ எண்ணங்களில் இருந்தவருக்கு மனம் மேலும் குழம்ப சட்டென வேர்க்க ஆரம்பித்திருந்தது அவருக்கு.

ஆத்வி டேய் இங்க வாயேன்..அங்கிள் என்னாச்சு??”

ஜீ!!அங்கிள் என்னாச்சு??”,எனும்போதே மயங்கிச் சரிந்திருந்தார்.அவசரமாய் அருகிலிருந்தவர்களை அழைத்து அவரைத் தன் காரில் ஏற்றியவன் ஜீவிகாவையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.அதற்குள் ஆத்விக்கின் மொபைலில் இருந்து ஷான்யாவின் எண்ணிற்கு அழைத்து விஷயத்தை சுருக்கமாய் கூறி வரச் சொல்லியிருந்தாள்.

ஷான்யாவின் தந்தையை பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு ஜீவிகாவும் ஆத்விக்கும் வெளியே பதட்டமாய் அமர்ந்திருக்க ஷான்யா தன் அன்னையோடு அவசரமாய் ஓடிவந்திருந்தாள்.என்ன ஏதென தெரியாமல் ஆத்விகை பார்த்தவளுக்கு கோபம் தலைக்கேற அவனை ஒரு வழியாக்கிவிட்டிருந்தாள்.

என்ன தான் உங்க பிரச்சனை.என்ன பண்ணீங்க எங்க அப்பாவை..நான் தான் தெளிவா என் முடிவை சொல்லிட்டேனே.அப்பறமும் ஏன் அவரை பார்த்து பேசுனீங்க?உங்களை எவ்ளோ உயர்வா நினைச்சு வச்சுருந்தேன்.இப்படி ஒரு காரியத்தை பண்ணுவீங்கனு நான் எதிர்பார்க்கலை..எங்கப்பாக்கு மட்டும் எதாவது ஆச்சு அப்பறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..என் கண்ணு முன்னாடி நிக்காதீங்க இங்க இருந்து போய்டுங்கஅட்லீஸ்ட் அப்பாவை அப்படியே விடாம இங்க வந்து அட்மிட் பண்ணீங்களே அதுவரை உங்களுக்கு புண்ணியமா போகும்..கிளம்புங்க இங்க இருந்து ப்ளீஸ்..”என்றவள் அவன்முன் இரு கரம் கூப்பி நின்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.