Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 12 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes
Pin It

தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 12 - சசிரேகா

Unnaiye thodarven naane

காலையில் கண்விழித்த சரவண பெருமாள் மெதுவாக கண்களை கசக்கி கொண்டு எழுந்து கட்டிலை பார்க்க அங்கு மாதவி இல்லாமல் போகவே அவசரமாக எழுந்து கீழே வந்தான்.

அங்கு மாதவி திருமாலிடம் சிரித்துக் கொண்டே அழகாக பேசிக் கொண்டிருக்கவே அதை ரசித்தவன்

பரவாயில்லையே குரல் நல்லாயிடுச்சே இனி இவள் பாடறதை கேட்கனும் அழகா பாடுவாளே ரெக்கார்டு பண்ணிக்கனும்என நினைத்துக் கொண்டே சிரித்தப்படியே அங்கு வந்தான். அவனைப் பார்த்த திருமால்

என்னப்பா இப்பதான் எழுந்தியா

ஆமாம்ங்கஎன சொல்ல அவரோ எங்கோ செல்வதற்கு ஏற்ப ரெடியாக இருப்பதைக்கண்டு

எங்க போறீங்கஎன கேட்ட சரவணனிடம்

அதுவா இங்க லேக் இருக்குல்ல, அங்க படகு சவாரி நடக்குது அதான் எல்லாரையும் கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன்என சொல்ல சரவணனோ

ஆனா, இன்னிக்கு போட்டியிருக்கே

“11 மணிக்குதான் போட்டி ஆரம்பிக்குது, அதுக்குள்ள போயிட்டு வந்துடலாம்னு மாதவி சொன்னாப்பாஎன சொல்ல சரவணனின் பார்வை மாதவி பக்கம் ஒரு நொடி சென்று விட்டு வந்தது.

ஓ மாதவியே சொல்லிட்டாளா அப்புறம் என்ன நாங்களும் வரோம் ஒண்ணா போலாம்என சொல்ல அவரும் சரியென்றார்,

சரவணனோ மாதவியை பார்த்து தன் தொண்டையில் தானே கைவைத்து சைகை செய்து காட்ட அவள் சரியாகிவிட்டது என தலையாட்டிவிட்டு தன் தந்தையுடன் வேறு பக்கம் சென்றாள்.

சரவணனும் அறைக்குச் சென்று குளித்துவிட்டு மாசியை எழுப்பினான்.

அவனும் எழுந்து குளித்துவிட்டு வந்ததும் சரவணனிடம்

நாம இப்ப எங்கண்ணா போறோம்

ஏரிக்குதான், படகு சவாரி போகனும்னு என் பொண்டாட்டி ஆசைப்படறாஎன அவன் இழுத்து இழுத்து பேச

எதுக்கு இப்படி இழுக்கறண்ணா நல்லாதானே இருந்தீங்கஎன அச்சப்பட

போடாஎன செல்லமாக பேசவும் அதிர்ந்தான் மாசி

அண்ணா வேணாம் இது தப்பு, தாலி கட்டிட்ட பின்னாடிதான் எல்லாம் அதுதான் மரபு

டேய் ஏண்டா இப்படி பேசற நான் என்ன அப்படிப்பட்டவனா

அதுசரி எதுக்கு இந்த சந்தோஷம்

தெரியலை இன்னிக்கு ஏதோ நல்லது நடக்கும்னு என் உள் மனசு சொல்லுது

சரி சரி வாங்கண்ணா போய் சாப்பிட்டு கிளம்புவோம்என சொல்லி மாசி குளித்து ரெடியாகி அவனுடன் வெளியேறி ஒன்றாக சாப்பிட்டு முடித்தவர்கள் வண்டியிடம் வந்தார்கள்.

அதற்குள் பஸ்ஸில் அனைவரும் ஏறிக்கொண்டிருக்கவே சரவணன் மாதவியை கண்களால் தேடினான்.

அவளும் பஸ்ஸில் பின்னாடி சீட்டில் அமர்ந்துக் கொண்டே தன்னை பார்ப்பதைக் கண்டு ரசித்தவன் தன் காரில் ஏறி அமர்ந்தான். அவள் பஸ்ஸில் இருப்பதைக்கண்டு சிரித்தான்.

மாசியும் பஸ் செல்லட்டும் என காத்திருந்து பஸ் பின்னாடி செல்ல ஆயத்தமானான். பஸ்ஸும் கிளம்பியது மாசியும் வண்டியை கிளம்பினான்.

நேராக பஸ் ஏரிக்கு அருகில் உள்ள பார்க்கிங்கில் சென்று நின்றது.

Lake

Unnaiye thodarven naane

Unnaiye thodarven naane

Unnaiye thodarven naane

அனைவரும் பஸ் விட்டு இறங்குவதற்குள் சரவணனும் மாசியும் அவர்களுக்கு முன்பாக பிரசன்ட் ஆனார்கள்.

திருமாலிடமே இருந்த மாதவியை எப்படி தனியாக பிடிப்பது என அறியாமல் திணறியவனைப் பார்த்து பாவப்பட்ட சொப்னா தன் தந்தை திருமாலிடம் வந்தாள்

என்னப்பா இது, எப்ப பாரு மாதவி கூடதான் நீங்க இருப்பீங்களா, என்கூட இருக்க மாட்டீங்களா, எனக்கே கொஞ்ச நாள்ல கல்யாணம் ஆகப்போகுது அதுக்கப்புறம் நான் கனடா போயிடுவேன், இருக்கற கொஞ்ச நாளாவது நீங்க என் கூட இருக்கலாம்லஎன பாசமாக பேசிய மகளைக் கண்டு கண் கலங்கிய திருமாலும் மாதவியை சுந்தரியிடம் விட்டுவிட்டு சொப்னாவை பிடித்துக் கொண்டு நடந்தார்.

சொப்னாவின் பேச்சைக் கேட்டு குழம்பிய மாதவி சுந்தரியிடம்

என்னடி நடக்குது இங்க, இவ்ளோ நாளா சரவணன்தான் வேணும்னு சொன்னாளே, இப்ப திடீர்ன்னு கனடா போறேங்கறா என்னாச்சி

ம் சரவணன் அண்ணாகிட்ட போய் லவ் சொல்லியிருக்கா, அவர் முடியாதுன்னு சொல்லிட்டாராம், அதான் மனசை மாத்திக்கிட்டா

ஓ அப்படியா! ஆனா, சொப்னா எப்படி டக்குன்னு மனசு மாறியிருப்பா, அப்படி என்ன சொல்லி சொப்னாவை மாத்தினாரு

யாருக்கு தெரியும் பின்னாடிதானே இருக்காரு போய் கேளுஎன சொல்லிவிட்டு சட்டென முன்னோக்கி செல்ல மாசியும் சுந்தரியுடன் நடந்தான்.

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 12 - சசிரேகாAdharv 2019-06-10 19:51
Strategy therinji attack panuradhula Ena thappu :Q: sarvanan Oda asaigal neraivatha poringanu solladhinga :D vitta masi hero vagavum.saravanan anti herovaga mariduvanga pole irukke 😝😝 pavam masi-i Ram's disappoint panamal parthukonga :yes: interesting update ma'am 👏 👏👏 👏 waiting to see the kambu suthu between madhavi and sarvanan...btw Ella therinja sagalakalavaliki Tamil pattu varalaye facepalm :grin:

Thank you and keep.rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 12 - சசிரேகாsasi 2019-06-11 15:14
ஹாய் ஆதர்வ் தாங்க்ஸ் உங்க கமெண்ட்டுக்கு மாதவி தெலுங்கு பொண்ணு சோ தமிழ் பாட்டு வரலை அப்புறம் கம்பு சண்டை அடுத்த வாரம் இல்லை சாரி அடுத்த வாரம் பட்டிமன்றம் இருக்கு ஆதர்வ் அதுக்கே அந்த பாகத்தில பக்கம் அதிகமாயிடுச்சி அதனால கம்பு சண்டை போட்டியை தள்ளி வைச்சிட்டேன் பட் கண்டிப்பா சண்டை உண்டு யார் ஜெயிக்கறாங்கங்கறது சஸ்பன்ஸ் யார் ஜெயிச்சாலும் கண்டிப்பா சண்டை வரும் யாரோ ஒருத்தர் பிரிய போறாங்க இந்த க்ளூ உங்களுக்காக நல்லாயிருக்கா நன்றி அடுத்த வாரம் உங்களை சந்திக்கிறேன் நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 12 - சசிரேகாmadhumathi9 2019-06-10 09:38
:clap: (y) nice epi sasi :clap: yaar vetri peruvaargal :Q: endru paarppom.intreresting aaga poguthu kathai. :thnkx: 4 this epi. :GL: waiting to read more.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 12 - சசிரேகாsasi 2019-06-11 15:15
Quoting madhumathi9:
:clap: (y) nice epi sasi :clap: yaar vetri peruvaargal :Q: endru paarppom.intreresting aaga poguthu kathai. :thnkx: 4 this epi. :GL: waiting to read more.

தாங்ஸ் மதுமதி பட் கம்புசண்டை அடுத்த வாரம் இல்லை அதுக்கு அடுத்த வாரம்தான் ஏனா அடுத்த வாரம் பட்டிமன்றம் இருக்கு அதுக்கே பக்கம் அதிகமாயிடுச்சிப்பா சாரி பட் அடுத்த வாரம் உங்க கமெண்ட்டுக்காக நான் காத்திருப்பேன் பை
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 12 - சசிரேகாதீபக் 2019-06-10 08:40
Sis today's episode is fantastic :clap: . Eagerly waiting for competition next week :yes: . This episode is really enjoyable one :thnkx: for this happy update. Waiting for next part. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 12 - சசிரேகாsasi 2019-06-11 15:15
Quoting தீபக்:
Sis today's episode is fantastic :clap: . Eagerly waiting for competition next week :yes: . This episode is really enjoyable one :thnkx: for this happy update. Waiting for next part. :GL:

நன்றி தீபக் இன்னும் பட்டிமன்றம் பாக்கி இருக்கு அது முடிஞ்சாதான் கம்பு சண்டை போட்டி சாரி ஆனா சண்டை போட்டி கட்டாயம் உண்டு தொடர்ந்து படிங்க படிச்சிட்டு கமெண்ட்டும் எழுதுங்க நன்றி
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top