(Reading time: 19 - 38 minutes)

ஜீவிகா ஏதோ கூற வருவதற்குள் அவள் கைப்பற்றி இழுத்தவன் அமைதியாய் அங்கிருந்து நகர்ந்துவிட்டிருந்தான்.

காரினுள் அமரும் வரையுமே ஆத்விக் ஒன்றும் பேசவில்லை.மனம் பொறுக்காதவளாய் ஜீவிகாவே அவனை சமாதானப்படுத்தினாள்.

டேய் ஆத்வி ஒண்ணும் இருக்காது டா நீ ஏன் இப்படியிருக்கஎதாவது பேசு

இல்ல ஜீ நான் தான் தப்பு பண்ணிட்டேன்.அவ சொன்னப்போவே இந்த விஷயத்தை அப்படியே விட்டுருக்கனும்..தேவையில்லாம..இதுவரை யாரோட கஷ்டத்துக்கும் நா காரணமா இருந்ததில்ல ஜி..இப்போ அவ பேசினதெல்லாம் கேட்டல..ரொம்ப கில்டியா இருக்கு ஜி..”

ஆத்வி ப்ளீஸ் டா நீ இப்படியிருந்தா எனக்கு கஷ்டமாயிருக்கும்..அங்கிளுக்கு ஒண்ணுமில்ல ஹி வில் பி ஆல்ரைட்..கம் டவுண் ஆத்வி..”

ம்ம் ஜி சரி ஆய்டுவேன்..உன்னை வீட்ல விட்டுறேன்.மச்சான் தேட போறாரு..”,என்றவன் அவளை வீட்டில் விட்டுட்டு இலக்கில்லாமல் காரை செலுத்திக் கொண்டிருந்தான்.இங்கு ஜீவிகா ஜெயந்திற்கு அழைத்து விஷயத்தைக் கூறினாள்.

ஜெய் எனக்கென்னவோ ரொம்ப பயமா இருக்கு..”

ஜீவி அவனுக்கு தைரியம் சொல்லிட்டு நீயே இப்படி பேசினா எப்படி..ஒண்ணும் ஆகாது டா..”

இல்லை ஜெய் ஆத்வி இவ்ளோ அப்செட் ஆகி நான் பார்த்ததேயில்ல..என்னவோ பதட்டமாவே இருக்கு..ரொம்ப நேரமா கால் பண்ணிட்டே இருக்கேன் எடுக்கவே மாட்றான்..”

சரி நா கிளம்பி வீட்டுக்கு வரேன்..நாம என்ன பண்றதுனு பார்க்கலாம் மா..நீ டென்ஷன் ஆகாத.”

அதற்குள் ஆத்விக்கின் தாய் அவளை அழைத்து இன்னும் வீட்டிற்கு வரவில்லையே என்று விசாரிக்க அவளின் பயம் இன்னுமாய் அதிகரித்து விட்டிருந்தது.வெகு நேரம் முயற்சி செய்து ஒரு வழியாய் ஆத்விக் அழைப்பை ஏற்றிருந்தான்.

ஹலோ ஆத்வி சனியனே எங்கடா போய் தொலைஞ்ச…”

ஹலோ மேடம்..”

..ஹலோ சார் சாரி யாரு நீங்க இந்த போன்..”

இது இந்த ஏரியால உள்ள பார்ல இருக்குங்க இதோட ஓனர் குடிச்சுட்டு மயக்கத்துல இருக்கார்..”

என்ன!!!??”

ஐயோ சார் நாங்க இப்போ உடனே வரோம்..அதுவரை அவனை கொஞ்சம் பாத்துக்கோங்களேன்ப்ளீஸ்..இந்த நம்பருக்கு வேற எந்த கால் வந்தாலும் அட்டெண்ட் பண்ணாதீங்க ப்ளீஸ் சார்….”

சரி மேடம் சீக்கிரம் வாங்க”,அவள் அழைப்பைத் துண்டிப்பதற்கும் ஜெயந்த் வருவதற்கும் சரியாய் இருக்க கிட்டத்தட்ட அவனை நோக்கி ஓடியவள் விஷயத்தைக் கூற மறுயோசனையின்றி தான் சென்று அழைத்து வருவதாய் கூறினான்.

நானும் வரேன்ங்க..”

ஜீவிம்மா..அந்த இடத்துக்கெல்லாம் நீ எதுக்கு நா பாத்துக்குறேன்…”

நான் கார்லயே இருக்கேன்ங்கஎன்ன நிலைமைல இருக்கானோ தெரில நீங்க தனியா எப்படி சமாளிப்பீங்கப்ளீஸ்ங்க…”

சரி டா வா..அம்மா அப்பாகிட்ட வேற எதாவது சொல்லிக்குறேன்..இல்லைனா பயந்துருவாங்க..வா போலாம்..”,என்றவறு இருவருமாய் அந்த இடத்திற்கு விரைந்தனர்.

காரில் செல்லும் வழியிலெல்லாம் ஜெயந்திடம் புலம்பிக் கொண்டே வந்தாள் ஜீவிகா.

இந்த கடன்காரன் ஆத்வி ஏன் இப்படி ஆய்ட்டான்னே புரில..பைத்தியம் தான்ங்க பிடிச்சுருக்கு அவனுக்குதண்ணி அடிக்குற பழக்கமெல்லாம் கிடையாது அவனுக்கு..”

டென்ஷன் ஆகாத ஜீவிரொம்ப குழப்பத்துல இருக்கானோ என்னவோ பேசி புரிய வைக்கலாம்ரிலாக்ஸ் ஆகு..”,அதற்குள் அந்த இடம் வந்து விட அவன் எண்ணிற்கு அழைத்து மீண்டும் அந்த நபரோடு பேசி ஜெயந்தும் அவருமாய் ஆத்விக்கை அழைத்து வந்து காரில்அமர வைத்தனர்.

அந்த நபருக்கு இருவருமாய் நன்றி கூறிவிட்டு காரில் முன்னிருக்கையில் அமர ஜீவிகா ஆத்விக்கையே பார்த்திருந்தாள்.சில நொடி மௌனத்திற்குப் பின் என்ன நினைத்தாளோ சட்டென திரும்பி  அவன் தோளின் மீது முடிந்த மட்டும் பலமாய் அடித்தாள்.

சற்றே போதையிலிருந்து தெளிந்தவனாய்,”ஷா..ன்ன்யாயா..நா..வே..ணும்..னே..”

அடிங்க மவனே..உன் ப்ரெண்டான பாவத்துக்கு என் புருஷனை பாருக்கு எல்லாம் வர வச்சுட்டு உனக்கு ஷான்யாவா..குடிகார குரங்கே எழுந்துரா டேய்..”

ஜீவி என்ன பண்ற அவன் சுய நினைவிலேயே இல்ல அவனை போய் அடிக்குற..அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிப்போம்..”

என்ன பண்ணலாமா இந்த எரும மாட அப்படியே கொண்டு போய் கடல்ல தூக்கிப் போட்டுருவோம்..”

ஜீவி!!!”

பின்ன என்னங்க குடிச்சா கவலை எல்லாம் போய்டுமா..அங்கிளும் ஆன்ட்டியும் இவனை இந்த நிலைமைல பார்த்தா என்ன நினைப்பாங்க..கொஞ்சம் கூட அறிவே இல்லங்க..எனக்கு ஆத்திரம் அடங்கவே மாட்டேங்குது..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.