(Reading time: 19 - 38 minutes)

பாரேன்..என் மாமாக்கு எவ்ளோ அறிவுனு..பரவால்ல என்னோட சேர்ந்த ஒரு மாசத்துலயே நல்ல இம்ப்ரூவ்மெண்ட் போங்க..”

இந்த வாய் கொஞ்ச நேரம்கூட அமைதியாவே இருக்காதா??”

ஏன் இல்லாம??சாப்டும் போதும் தூங்கும் போதும் நானென்லாம் பேசவே மாட்டேன் தெரியுமா ரொம்ப சமத்து!”

அடடா இது தெரியாம போச்சே நாங்க மட்டும் என்ன தூங்கும்போது ஓஓஓஓ னு சத்தம் போட்டுட்டே தூங்குறோமா..ஆனாலும இந்த வாயை அமைதியாக்க ஒரு வழி என்கிட்ட இருக்கு

ஆஹான்..வொர்ஸ்ட் சூப்பர் மார்கெட் நீங்க வந்த வேலையை கவனிக்காம இப்படி மொக்கையை போட்டுட்டு இருக்கீங்களேகொஞ்சமும் பொறுப்பே இல்ல..”,என்றவள் சிரிக்காமல் கூறிமுடித்துக் கண்ணடித்தாள்.

சரியான கேடி டீ நீ..உன்னை போய் நல்லவனு நம்பிட்டு இருக்காங்க பாரு எல்லாரும்…”

என் மாம்ஸ் அளவு எல்லாரும் ப்ரிலியண்டா இருக்க முடியுமா சொல்லுங்க?”

பதிலுக்கு பதில் நல்லா பேசுவாயால வாழறதுனு சொல்லுவாங்க..அது உனக்கு நல்லாவே பொருந்தும் என் வாயாடி பொண்டாட்டி..”

இப்போ இது ரொம்ப முக்கியம்..மாம்ஸ்ஸ் என்னை கொலைவெறி ஆக்காதீங்க..அப்பறம்….”

ஹா ஹா உன்னை வெறுப்பேத்தி பாக்குறதுல எனக்கு ஒரு ஆனந்தம்அப்போ தான் இன்னும் ஸ்பெஷலா கவனிப்ப இல்லையா?”

ம்ம் பாருங்க எப்படி கவனிக்குறேன்னு”,என்றவாறே அவனது தேவையை நிறைவேற்றியவளாய் அவனை ஒருவழியாக்கிக் கொண்டிருந்தாள்.

அன்று கடைக்கு தாமதமாகச் செல்வதால் ஜெயந்தே அவளை கல்லூரியில் விடுவதாகக் கூறினான்.ஆத்விக் கூறியதை அவனிடம் தெரிவித்தவள் வரும்போது அவனையே வீட்டில் விடும்படி கூறுவதாகக் கூறிவிட்டாள்.

மாலை கல்லூரி முடியும் நேரத்தில் ஆத்விக் அவளை அழைத்துக் கொண்டு பார்க்கிற்கு வந்து சேர்ந்தான்.

டேய் ஆத்வி எனக்கென்னமோ அவரு வருவாருனு நம்பிக்கையே இல்ல டா?”

இல்ல ஜீ கண்டிப்பா வருவாருனு தான் தோணுது..குழம்பிய குட்டைல தான் மீன் பிடிக்க முடியும்னு சொல்லுவாங்களே..அந்த நிலைமை தான் இப்போ எனக்கும்..அவரு கொஞ்சம் யோசிக்குற அப்போவே நம்ம பக்கம் இழுத்தா தான் உண்டு.இல்லைனா திரும்ப வாய்ப்பு கிடைக்குறது ரொம்ப கஷ்டம்..”

என்ன டா ஏதோ தீவிரவாத சதி திட்டம் ரேஞ்ச்க்கு பேசுற..ஐயோ எப்படி இருந்த நல்லவன் என் ப்ரெண்டு இப்படி ஆக்கிட்டாங்களே!”

ஜீ!!!!அதோ பாரு வந்துட்டாரு அவரு தான்..”

சரி டா சரி டா எதுக்கு இவ்ளோ எக்ஸைட் ஆகுற..பிகரை பார்த்தா கூட இப்படியெல்லாம் ரியாக்ட் பண்ண மாட்ட டா நீ..”,எனும்போதே அவர் அவர்களின் அருகில் வந்திருந்தார்.

ஹாய் அங்கிள்..நான் சொன்னனே என் ப்ரெண்ட் இவ தான் பேரு ஜீவிகா..”

அவர் அவளை விசித்திரமாய் பார்த்தவாறே சிறு தலையசைப்போடுஅங்கிருந்த மற்றொரு பென்ஞ்சில் அமர்ந்தார்.

ஹலோ அங்கிள் எப்படியிருக்கீங்க?”

மம்ம் நல்லாயிருக்கேன் நீ எப்படி இருக்க?”

ப்ச்ச் பாக்குறீங்க இல்ல ரொம்ப வருசமா இப்படியே தான் அங்கிள் இருக்கேன்..நோ சேஞ்ச்..இல்லடா ஆத்வி?”,எனும்போதே அவன் அடக்கிவாசி எனும் வகையில் தலையசைத்து செய்கை செய்தான்.

அதன் பின்புதான் அவரைப் பற்றி சிந்தனை வந்தவளாய் நாக்கைக் கடித்தவாறே அவரைப் பார்த்து சிரித்து வைத்தாள்.

அவ எப்பவும் அப்படி தான் அங்கிள் காமெடி பண்ணிக்கிட்டே இருப்பா..நாங்க ரெண்டு பேரும் காலேஜ் மேட்ஸ்..அப்போ இருந்து இப்போ வர என்னோட பெஸ்ட் ப்ரெண்ட் இவ தான்.”

..ஆனாலும் கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத மா..உங்க வீட்ல ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?”

எதுக்கு அங்கிள்??”

இப்படி பையனோட சுத்துறதுக்கு?”

யாரோ ஒரு பையனோட பீச் பார்க்னு சுத்தினா கண்டிப்பா செருப்பால கூட அடிப்பாங்க தான்.ஆனா இவன் என்னோட ப்ரெண்ட் ஆச்சே..ப்ரெண்ட்னா அண்ணா தம்பி மாதிரி அதுவும் ஒரு ரிலேஷன்ஷிப் தான அங்கிள்..”

ம்ம் இந்த காலத்து ஆண் பெண் நட்புல எல்லாம் பெருசா எனக்கு நம்பிக்கை இல்ல..சும்மா தொட்டு தொட்டு பேசுறது கண்ட நேரத்துல சுத்துறது அரட்டை அடிக்குறதுனு பார்த்தாலே எரிச்சல் தான் வரும்..அதான் கேட்டேன்..”

ம்ம் நீங்க சொல்றதும் கரெக்ட் தான் அங்கிள்..ஆனா நீங்க சொல்றதெல்லாம் ஒரு அளவு ஹை க்ளாஸ் மக்கள்கிட்ட தான்.நம்மளை மாதிரி மிடில் க்ளாஸ் பிள்ளைங்களுக்கு எல்லாத்துக்குமான வரைமுறை நல்லாவே தெரியும்.விருப்பப் படி இருக்க விடுறாங்கனு தெரிஞ்சு அதை தப்பா பயன்படுத்திக்குற நட்பு இந்த காலத்துல ரொம்பவே கம்மி தான் அங்கிள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.