(Reading time: 17 - 33 minutes)

அதில் சில வகை பழங்களுடன் கூல் ட்ரிங்சையும் நிறைத்து வைத்து அடுக்கி வைத்திருந்தனர் அதைப் பார்த்து முகம் சுழித்தவன் பின் எழுந்து சமையல் அறையில் நின்றான். தலைக்குக்குளித்து அதைச் சரியாகத் துடைக்காமல் இருபக்கங்களிலும் முடியை சிறிய கிளிப்கொண்டு முடிந்து கீழே முடியை விரித்து வைத்து இருந்தாள். நைட்டியும் கொஞ்சம் நினைந்துதான் இருந்தது. இவனுக்காக எதையோ ஒரு பக்கம் கிளறியபடி மற்றொரு பக்கம் அடுப்பில் தோசையை வார்க்கிறாள். அவன் பசி ஞாபகம் வர அவள் எங்கே என்று சமையலறையை நோக்கிச் சென்றவன் சற்று நேரம் அவளையே ஆழமாகப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். பரவால்ல பார்க்க நல்லாத்தான் இருக்கா ஆனால் எங்கேயோ பார்த்திருக்கேனே என்று ஞாபகம் எல்லாம் வராமல் என்னவள் என்ற எண்ணமே தோன்றியது அவனுள். சட்டென்று அவளை நெருங்கியவன் அடுப்பின் அருகில் இருந்த இடத்தில் ஏறி அமர்ந்து கொண்டு தட்டை கையில் ஏந்தினான்‌. கையில் ஏந்தி அவள் பக்கம் காட்டினான் அச்சோ ரொம்ப பசிக்கிறது போல என்று அவன் தட்டில் தோசையைத் தக்காளி தொக்குடன் பரிமாறினாள் அவள். பரிமாற பரிமாற பரிமாற 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 அப்பா 12 தோசைகள் இவன் என்ன இப்படி சாப்பிடுகிறான் விட்டால் சமையலறையிலுள்ள அனைத்து பொருட்களையும் விழுங்கி விடுபவன் போல் கருமமே கண்ணாகத் தோசையிலேயே குறியாக இருந்தான். சாப்பிடப் பன்னிரண்டாம் தோசையை முடித்த பின் தான் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

அப்பாடி போதும் மா...

 இப்போதுதான் ஏதோ கொஞ்ச மாச்சும் வயிறு நிரம்பியது மாதிரி இருக்கிறது என்று அவன் சொல்ல அடப்பாவி என்ற பார்வை தான் இவளிடம் இருந்து வந்தது. சரி ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்து விட்டான் என்று மாவைத் திரும்பவும் பிரிட்ஜில் வைக்கப் போக அவன் அவளைத் தடுத்து நீ உட்கார் இப்போது நான் உனக்குச் சுட்டுத் தரேன் என்று சுட்டுக் கொடுக்க ஆரம்பித்தான். எனக்கு வேண்டாம் என்று அவள் மறுக்க அவன் பாட்டுக்கு ஒரு தோசையை எடுத்து தட்டில் போட்டான் ரொம்ப் பிகு பண்ணாமல் ஒழுங்கா சாப்பிடு என்று மிரட்டினான் அவன் கண்ணில் என்ன செய்தியைக் கொண்டாலோ அமைதியாக அவன் கொடுத்த தோசையை உண்ண ஆரம்பித்தாள். வாய் அவள் பாட்டிற்குத் தோசையை மென்று விழுங்க மூளையோ இவளைப் பல கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தது அவள் மனதிலும் மனதிடம் மனமோ அவன்போல் கரைந்து ஓடியது.

அவளுக்கும் பசி தானே அத்தைக்குச் செய்த கஞ்சி குடிக்கலாம் என்று நினைத்தவள் அவரைப் பார்க்க டாக்டர் வர அதை மறந்து போனால். அதன் பின் அவரிடமே அமர்ந்து இருந்தமையால் எதையுமே சாப்பிடவில்லை அவள் எனவே அமைதியாகச் சாப்பிட்டாள் 3 தோசைகளை. எப்படிப் போனது என்று கேட்டால் அவளிடம் பதில் இல்லை 3 தோசைகளை முடித்ததும் தான் அவளுக்குத் தெரிந்தது தோசைகளின் எண்ணிக்கை நான்காம் தோசையை அவன் சுட போக, ப்ளீஸ் வேண்டாம் பா போதுமே என்று பாவமாகச் சொல்ல அவள் தலை முதல் கால் வரை பார்த்தவன் டயட்டா என்று நக்கலாகக் கேள்வி கேட்டான். சற்று ஒல்லியான உடல். மெலிந்த இடை பலிச் தேகம். அவளை இப்படிக் கேட்க முடியாது தான். ஆனால், இந்த கேள்வியை அவனுக்குக் கேட்க வைத்தது அவள் சரியாக‌சாபிவில்லை என்ற எரிச்சலில் தான். அவளைப் பார்ப்பவர்கள் அனைவரும் சொல்ல முடியாது. இது அவளின் சாதாரணமான தேகம் அல்ல முன்பைவிட சற்று எடை கம்மி ஆகிருப்பாள் என்று. சமைத்ததற்கான அடையாளமோ சாப்பிட்டதற்கான அடையாளமோ அங்கே எதுவும்‌இல்லையே. இவள் எதுவும் சாப்பிடாமல் தான் அம்மாவுடன் இருந்திருக்கிறாள் போல என்று அவளையும் சாப்பிடவைத்தான். இவள்‌ என்னவென்றால் போதுமே என்று சாப்பிட அழுகிறாள். பார்க்க நல்லா உசரமா ஒட்டகுச்சி மாதிரி உயரம் இருந்தால் போதுமா கொஞ்சமா சதை பிடித்தால் தானே நல்லருக்கும் என்று மனதினுல்லே அவளிடம் பேசினான்.

பௌவ் அமைதியாக தன் ட்ரேட்மார்க்காண சின்ன புன்னகை சிந்திச் சென்றால். ஒரு வழியாகச் சமையல் கட்டை ஒதுக்கி வைத்து விட்டு வெளியே வந்தவளிடம் அப்பா எங்கே நீங்க அம்மா அறையில்.... (ஏதோ கேட்க வந்து பாதியிலே விட்டு விட்டார் ஹீரோ..) அப்பா எப்போதும் யாரையும் அவர் அறையில் விடமாட்டார் பிள்ளைகளான தங்களுக்குக் கூட சில நேரங்களில் அனுமதி கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. இவள் யார் என்று அவனுக்குத் தெரியவில்லை ஆனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அம்மாவைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டவள். அதுவும் இவளை எப்படி என்ன கேட்பது என்று தெரியாமல் அவன் கேட்க வந்ததைப் பாதியிலேயே நிறுத்திவிட்டான். அவன் கேட்க மறந்த கேள்விக்கும் சேர்த்து பதில் வந்தது அவளிடம் சார் வேலை விஷயமா கோயம்புத்தூர் போயிருக்கிறார்கள், நிவியும் நக்ஷ்ம் மலேசியா போயிருக்கிறார்கள், சஞ்.. சின்ன சார் படிப்பு விஷயமா ஏதோ ஊருக்குப் போய் இருக்கிறார்கள் என்று சொன்னார்கள் என்றாள். சரி என்று அவள் சொன்ன அனைத்து பதிலுக்கும் இரண்டு எழுத்து பதில் கூறினான் பின்பு சின்ன குரலில் அம்மாவுக்கு என்ன ஆயிற்று என்று கேட்க, சாதாரண காய்ச்சல் தான் இரண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்த சரியா போய்விடும் . டாக்டர் மாலைதான் வந்து சென்றார்கள் நாளை காலையும் வருவதாகச் சொல்லிச் சென்றார் என்று தலைகுனிந்தபடி கூறியவள் தயங்கியபடி உங்களால் இரண்டு நிமிடம் அம்மாவின் அருகில் உட்கார முடியுமா என்றால் சின்ன குரலில் ஏதோ அவசரம் என்று எண்ணியவன் சரி என்பதாகத் தலையை ஆட்டினான்.

2 comments

  • Nice episode oru Chinna request nenga yeluthum urainadai muraiya konjam casual ah pesara Mari kudukka midiyuma... Maththa padi unga kathiyin Kalam arumai :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.