(Reading time: 6 - 12 minutes)

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 20 - ஜெய்

Gayathri manthirathai

மூவரும் அறையின் உள்நுழைந்து நடக்க ஆரம்பித்தவுடன் அதன் வெப்பநிலை மாற்றத்தை முதலில் கவனித்தனர்...

“ஹே சந்தோஷ் கவனிச்சியா... இந்த இடமே அப்படியே காஷ்மீர்ல இருக்கறா மாதிரி இருக்கு... டெம்பரேச்சர் மைனஸ்ல இருக்கும் போல இருக்கே...”

“ஆமாம் சக்தி... அதுவும் தவிர எத்தனை கிளீனா இருக்கு பார்த்தியா.... அண்ட் நிறைய நடமாட்டம் இருந்தா மாதிரியும் தெரியலை... சந்தியா இப்படி ஒரு இடம் இருக்கறதை எப்படி கண்டுபிடிச்ச...”

“அந்த பொண்ணு தற்கொலை நடந்த அன்னிக்கு நைட் நான் இங்க வந்து ஏதானும் துப்பு கிடைக்குமான்னு பார்க்க வந்தேன்... நாம உள்ள வந்தோமே அந்த அறைக்கு ரெண்டு ரூம் தள்ளித்தான் லேப்ல அந்த பொண்ணு இறந்து கிடந்தது... நான் இந்த இடத்தை கடக்கும்போது ஒருத்தர் இந்த ரூம் உள்ள நுழைந்தார்... அங்கிருந்த சுவற்றின் வழியா இந்த அறைக்கு உள்ள போறதை பார்த்தேன்... இந்த மாதிரி சீக்ரெட் பிளேஸ் இருந்தா கண்டிப்பா எதாச்சும் சட்ட விரோதமா பண்ண வாய்ப்பிருக்குன்னு அவர் பின்னாடியே நானும் உள்ள நுழைஞ்சுட்டேன்...”

“சந்தியா எத்தனை பெரிய ரிஸ்க் தெரியுமா நீ எடுத்தது... இருந்தாலும் உனக்கு அசட்டு துணிச்சல் அதிகம்... மாட்டி இருந்தேனா என்ன ஆகுறது... அடுத்த முறை எங்கக்கிட்ட சொல்லாம தனியா வந்து இந்த மாதிரி ரிஸ்க் எடுக்காத...”

“சந்தோஷ் நான் ரொம்ப ஜாக்கிரதையாத்தான் வந்தேன்... யாரும் என்னை கண்டுபிடிக்க முடியாதபடித்தான் அன்னைக்கு பதுங்கி இருந்தேன்... அதே மாதிரி அவர் ரூம்விட்டு போன பிறகும் ஒரு அரைமணிநேரம் கழிச்சுத்தான் நான் அந்த இடத்தை விட்டு வெளிய வந்தேன்...”

“உனக்கே தெரியும் காலேஜ் முழுக்க எத்தனை இடத்துல CCTV வச்சிருக்காங்க அப்படின்னு... அதுல எதுலயாச்சும் மாட்டி இருந்தேனா என்ன ஆகுறது...”

“இல்லை சக்தி உள்ள போனவர் இந்த பக்கம் CCTV ஆபரேஷன் off பண்ணிட்டுத்தான் உள்ள போனார்.. அதுனாலதான் நானும் தைரியமா நுழைஞ்சேன்....”

“மறுபடியும் அதையே சொல்லாத சந்தியா... நீ உள்ள நுழைஞ்ச இடத்துல வேற ஆளுங்க இருந்து இருந்தா என்ன பண்ணி இருப்ப... என்னதான் எல்லாவிதமான தற்காப்பும் உனக்கு தெரியும்னாலும் தேவையில்லாத ரிஸ்க் எதுக்கு...”

“சரி சந்தோஷ்... அடுத்த முறை உங்ககிட்ட சொல்லிட்டே எதுனாலும் பண்ணறேன்... இனி தனியா எங்கயும் போகலை போதுமா.... என்ன சக்தி மாமு அமைதியா வர்ற... உன் பங்குக்கு நீயும் கொஞ்சம் ரம்பத்தை போடேன்.. ஒரு காதுலதான் ரத்தம் வருது... அடுத்த காது ப்ரீயாத்தான் இருக்குது...”

“கொழுப்புடி உனக்கு... ஒருத்தன் நல்லதுக்கு சொன்னா ரம்பம் போடறனா... ஹே சக்தி அங்க பாருடா ஏதோ லேப் மாதிரி இருக்குது...”

“அது லேப் இல்லை சந்தோஷ்...”

“அப்பறம்....”

“நீங்க ரெண்டு பெரும் அங்க ஸ்டான்ட் மாதிரி இருக்கற எடத்துல போய் நில்லுங்க.... ஆனா எதுலயும் கை வைக்காதீங்க... முடிஞ்சா ரெண்டு பேர் கையும் பின்னாடி கட்டிக்கோங்க....”, அவர்கள் சென்றதும் சந்தியா நின்றிருந்த இடத்தின் அருகிலிருந்த நம்பர் லாக்கில் சில எண்களை அழுத்தினாள்...

அந்த இடத்தின் தன்மையே அப்படியே மாறிவிட்டது... இவர்கள் பார்க்கும்போது ஒரு லேப் போல காட்சியளித்தது இப்பொழுது ஏதோ ஒரு கிடங்கு போலத் தெரிந்தது...

“ஹே இது என்ன ஜீபூம்பா வேலை... அப்படியே டோட்டலா ரூமே மாறிப்போச்சு...”

“முதலில் நாம பார்த்தது illusion ஸ்க்ரீன் சக்தி... யாரானும் இங்க வந்தாலும் ஏதோ லேப் போல தெரிய பண்ணி வச்சிருக்காங்க... உண்மைல இந்த இடம் உறுப்புகள் சேமிக்கும் இடம்... நீங்க நிக்கற இடத்துல இருந்து பத்தடி அந்தப்பக்கம் நகர்ந்து பாருங்க... உங்களுக்கு புரியும்....”

சந்தியா சொல்ல சக்தியும், சந்தோஷும் அங்கு சென்று பார்த்து அதிர்ந்தார்கள்... அங்கிருந்த கண்ணாடி பெட்டிகளில் மனிதர்களின் கண்களில் ஆரம்பித்து பல உறுப்புகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன... அதுவும் தவிர சில மனித உடல்களும் பதப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தது...

“என்னடா சந்தோஷ் சினிமா மாதிரி இருக்கு... இந்தாளை நான் ஏதோ சின்ன லெவல் திருட்டுத்தனம் பன்றவன்னு நினைச்சேன்... பார்த்தா ஏதோ பெரிய அளவுல பண்றா மாதிரி தெரியுது... இப்படி எல்லாம் பண்ண ஏகப்பட்ட செலவாகுமே எங்க இருந்துடா இவனுக்கு பணம் வருது...”

“ஆமாம் சக்தி... எனக்கும் அதுதான் புரியலை.... இங்கிலீஷ் படம் பார்க்கிறா மாதிரி இருக்கு... ஹைடெக் டெக்னாலஜி... இதை வடிவமைக்கவே ஏகப்பட்ட செலவாகி இருக்கும்... நமக்கு ஏகப்பட்ட வேலை இருக்குது... சந்தியா இதை எல்லாம் இப்போ ரெகார்ட் பண்ண முடியுமா...”

“போன்ல பண்ண முடியாது சந்தோஷ்... இங்க நுழைஞ்ச உடனே உங்க போன் செயலிழந்து போய்டும்...”

“ஹ்ம்ம் நான் சின்ன பென் கேமரா வச்சிருக்கேன்.... அதுல ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்...”

சக்தி அவனின் பென் கமெராவில் அந்த அறையை பதிவு செய்து கொண்டான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.