“நமக்கு முன்னாடி முழுக்க கண்ணாடி கேஸ் இருக்கு... இதை தாண்டி நாம உள்ள போகலாமா சந்தியா....”
“உள்ள போக வேற ஒரு சீக்ரெட் நம்பர் இருக்கு சக்தி... அது அன்னைக்கு என்னால பார்க்க முடியலை... நான் அவர்கிட்ட மாட்டக்கூடாதுன்னு ஒளியற நேரத்துல அவர் அதை பிரஸ் பண்ணிட்டார்....”
“நாம வேணா ஏதானும் நம்பர் குத்துமதிப்பா போட்டு ட்ரை பண்ணிப் பார்க்கலாமா...”
“அது ரிஸ்க் சந்தோஷ்... சப்போஸ் தப்பானா எங்கயானும் அலாரம் அடிக்கறா மாதிரி வச்சிருந்தாங்கன்னா மாட்டிப்போம்...”
“ஆமாம் சந்தோஷ் சந்தியா சொல்றது சரி... ஓகே நாம இப்போ வெளிய போகலாம்... அந்த டாகுமென்ட்ஸ் வேற எடுக்கணும்....”, பேசியபடியே மூவரும் வெளியில் வந்தனர்....
“சந்தியா அந்த பொண்ணு கொலை நடந்ததை பார்த்த சாட்சி இருக்குன்னு சொன்னியே... அது யாரு...”
“அது எங்க காலேஜ்ல கிளீன் பண்ணுற பையன் சக்தி... அவன் அன்னைக்கு அந்த ரூம்ல இருக்கற கப்போர்டு பின்னாடி சுத்தம் பண்ணிட்டு இருந்து இருக்கான்... அப்போதான் அந்தப் பெண்ணை கொலை பண்ணி இருக்காங்க...”
“உனக்கு எப்படி தெரிஞ்சது....”
“இங்க காலேஜ் சேர்ந்த புதுசுல ஒரு நாளைக்கு அவன் ரொம்ப களைப்பா தெரிஞ்சான்னு சாப்பாடு வாங்கி கொடுத்தேன்... அன்னைலேர்ந்து ரொம்ப பழக்கம் ஆகிட்டான்... தினம் ஒரு வாட்டியானும் என்னை பார்த்து பேசாம போக மாட்டான்... அந்த கொலை நடந்த பிறகு ஒரு ரெண்டு மூணு நாளா அவனை நான் காலேஜ்ல பார்க்கலை... நேத்திதான் வந்தான்... அவன்கிட்ட பேசும்போது ஏதோ பயத்துல இருந்தா மாதிரியே இருந்துச்சு... நான் மடக்கி மடக்கி கேட்டதுல அந்த கொலையை பார்த்தேன் அப்படின்னு சொல்லிட்டான்... அவன் சொல்ல ஆரம்பிச்ச நேரம் கரெக்டா என்னோட friends பக்கத்துல வந்துட்டாங்க... அதனால விளக்கமா கேக்க முடியாம போய்டுச்சு... நாளைக்கு அவனை காலேஜ்ல பார்த்து விஷயத்தை கறக்கணும்....”
“காலேஜ்ல அவன்கிட்ட இந்த விஷயம் பேசாத சந்தியா... விஷயம் கொஞ்சம் வெளிய போச்சுன்னாக் கூட அலெர்ட் ஆகிடுவாங்க... காலேஜ் ரெகார்ட்ல அவன் வீட்டு அட்ரஸ் இருக்கும்... அங்க அவனை பார்த்து பேசலாம்...
சக்தி சொல்வது சரியாக இருந்ததால் தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் டீன் அறையிலிருந்த கணினியிலிருந்து பதிவு செய்துகொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றனர்....
தொடரும்
Go to Gayathri manthirathai story main page
{kunena_discuss:1216}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.