(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 21 - ஜெய்

Gayathri manthirathai

லைமை மருத்துவர் முதுகில் ஏதோ அழுந்துவதை பார்த்து திரும்பிய அதே வேளையில் அருகில் நர்ஸ் சீருடையில் நின்று கொண்டிருந்த இருவரால் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரின் கையும் மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவரின் கையும் பின்னால் வளைக்கப்பட்டு விலங்கு மாட்டப்படுவதை அதிர்ச்சியுடன் பார்த்தார்....

“ஏய் யார் நீங்க... என்ன பண்ணிட்டு இருக்கீங்க...”, தலைமை மருத்துவர் தன் பின்னால் இருப்பவரை திரும்பி பார்த்தபடியே கேட்டார்...

“ஹ்ம்ம் உங்க மச்சான்.... மாமனார் வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்ன்னு வந்திருக்கோம் மாப்பிள்ளை....”

“ஹே என்ன விளையாடுறியா.... எங்க வந்து யார் கிட்ட பேசிட்டு இருக்கேன்னு தெரியுதா.... முதல்ல முதுகுல இருந்து கையை எடு....”

“கையா.... கொஞ்சம் திரும்பி பாருங்க மாப்பு... சுட்டா டுமீல்ன்னு சத்தம் வருமே.... துப்பாக்கி துப்பாக்கி இல்லை... அதுதான் வச்சிருக்கு...”

“டேய் யாருடா நீங்கல்லாம்.... எங்க வந்து யார் மேல கை வச்சிருக்கீங்க தெரியுமா.... ஒரு குரல் கொடுத்தா போதும் அடுத்த நிமிஷம் நீங்க காலி....”

“டாக்டர் மாதிரி பேசுங்க மாப்பு.... அடியாள் மாதிரி பேசாதீங்க... அது என்ன பட்டுன்னு இப்படி சொல்லிட்டீங்க... எங்க குரல் கொடுங்க பார்க்கலாம்.... அப்படி யார் வந்து எங்களை காலி பண்றாங்கன்னு....”,குரலில் ஏகப்பட்ட நக்கல்...

“நீ நிஜமாவே ஆம்பளையா இருந்தா முகமூடி கழட்டிட்டு பேசுடா.... எதுக்கு முகத்தை மறைச்சுட்டு வீரம் காட்டற...”

“ஹாஹாஹா பார்றா... மாப்பு நான் முகமூடி போட்டு இருக்கறது உனக்கு பயந்துட்டு இல்லை... infection எதுவும் இங்க ஆகக்கூடாதுன்னுதான்... ஓகே இப்போ நாம டீல்க்கு வருவோமா... நாங்க இப்படியே உங்க மூணு பேரையும் பொத்துனாப்புல கூட்டிட்டு போவோமாம்... நீங்களும் அமைதியா எந்த கலாட்டாவும் பண்ணாம நல்ல புள்ளைங்களா வருவீங்களாம்... சரியா....”

“ஏய் என்ன நக்கல் பண்றியா.... மரியாதையா எங்க ரெண்டு பேர் விலங்கை கழட்ட சொல்லு... ஏம்மா இந்த ஹாஸ்பிடல்ல வேலை செஞ்சுட்டு எங்ககிட்டயே இப்படி நடக்கறீங்களே நல்லா இருக்குதா....”

“மாப்பு 2... வெரி சாரி... அவங்க உங்க ஹாஸ்பிடல் staff இல்லை... எங்க ஆளுங்க... முகமூடி போட்டு இருக்கறதால உங்களுக்கு அடையாளம் தெரியலைன்னு நினைக்கிறேன்... சரி ரொம்ப பேசிட்டோம்... இப்போ நாங்க சொல்றதை கேட்டு அப்படியே செய்ங்க....”

“உன்னோட மிரட்டலுக்கெல்லாம் நாங்க ஆட முடியாது... மரியாதையா நீங்க யாருன்னு சொல்லுங்க... இங்க சுத்தி எல்லா இடத்துலயும் கேமரா இருக்கு... இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்க எல்லாம் கூண்டோட உள்ள போகப்போறீங்க....”

“மாப்பு 2... என்ன பாதி மயக்க மருந்தை மாத்தி உங்களுக்கு கொடுத்துட்டானா... இப்படி உளர்றீங்க.... நீங்கதானே இந்த ரூம்க்குள்ள நுழையறதுக்கு முன்னாடி எல்லா காமெராவும் off பண்ணுனீங்க.... இதுக்கு பேர்தான் self ஆப்பு... நீங்களா வெளிய போகாம யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டாங்க... இனியாவது நாங்க சொல்றதை கேக்கறீங்களா...”, இனி அவர்கள் சொல்வதை கேட்பதை தவிர வேறு வழியில்லை என்று தலையை ஆட்டினார் அறுவை சிகிச்சை நிபுணர்...

“ஓகே இப்போ நீங்க ரெண்டு பேரும் அமைதியா உங்க கைல விலங்கு மாட்டி இருக்காங்களே அவங்க கூட போங்க... நடுவுல எதுவும் திருகுத்தாளம் பண்ணனும்ன்னு நினைச்சீங்க... உங்க தலையோட தலை சிதறிடும்... இதை ஞாபகத்துல வச்சுட்டு கவனமா நடங்க....”, அந்த குரலின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இருவரும் நர்ஸ்களின் பின்னால் சென்றனர்...

அவர்கள்  கைகளின் விலங்கை கழட்டி விட்டாலும் முதுகில் துப்பாக்கியை பிடித்தபடியே வந்தனர் நர்ஸ் இருவரும்... பிரதான வாயில் வழியாக சென்று அனைவரின் கவனத்தையும் கவராமல் டாக்டர்களுக்கென்று பிரத்யேகமாக இருக்கும் வாயில் வழியாக கார் பார்க்கை அடைந்து அங்கிருக்கும் திரைகள் மூடிய வாகனத்தில் இருவரையும் ஏற்றி வாகனத்தின் கைப்பிடியுடன் அவர்கள் கையை விலங்கிட்டனர்.....

“பாஸ் ஆபரேஷன் சக்ஸஸ்.... நீங்க அவரை கூட்டிட்டு வரலாம்....”

நர்ஸ் வேடத்திலிருந்தவரிடமிருந்து அழைப்பு வந்த பின்னர் தலைமை மருத்துவரும் அதே வழியில் அழைத்து வரப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டார்... பின்னர் மூவரின் வாயும், கண்ணும் கட்டப்பட்ட அடுத்த நிமிடம் வண்டி அந்த இடத்தை விட்டு நகர்ந்தது....

முழுவதும் மூடப்பட்ட வாகனமாதலால் உள்ளிருந்தவர்களால் வெளிச்சத்தங்களை கேட்க முடியவில்லை... தாங்கள் எங்கே யாரால் அழைத்து செல்லப்படுகிறோம் என்று ஒன்றும் தெரியாமலேயே பயணித்தனர்.... இதில் நடுநடுவே வாகனம் ஒரு ஐந்து நிமிடம் நிறுத்தப்பட்டு பின் ஓட ஆரம்பித்தது...  அதில் மூவரும் தாங்கள் இறங்குவோமா, இல்லை கடைசி வரை இப்படியே வாகனத்திலேயே சுற்றிக் கொன்றிருப்போமா என்று குழம்பிப் போயினர்... இறுதியில் இரண்டு மணிநேரத்தின் முடிவில் வாகனம் நிறுத்தப்பட்டு மூவரும் இறக்கப்பட்டு நடத்தி அழைத்து செல்லப்பட்டனர்....

“டேய் முத்து எப்படி இருக்க... என்னாச்சு மறுபடி காலேஜ்க்கு ரெண்டு நாளா வேலைக்கு வரலை....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.