(Reading time: 8 - 16 minutes)

“அக்கா நீயா... இங்க எப்படி வந்த... எனக்கு ரெண்டு நாளா ஒரே வயித்து நோவுக்கா... அதுதான் வரலை... இந்த குப்பத்துல உனக்கு  என்ன வேலை....”

“உன்னைப்பார்க்கத்தாண்டா வந்தேன்....”

“என்னை பார்க்க வந்தியா... என்ன விஷயம்க்கா... உனக்கு எதுனாச்சும் வேலை செஞ்சு கொடுக்கனுமா....”

“அதெல்லாம் வேணாம்... வா மொதல்ல போய் டாக்டர் பார்த்துட்டு வரலாம்... ஏன் வயிறு வலிக்குதுன்னு....”

“அட போக்கா... ரெண்டு நாள் முந்தி நம்ம தோஸ்த்துக்கு பொறந்த நாளு... முக்குல இருக்கற பாய் கடைலதான் கொண்டாடினோம்.... அன்னைக்கு பிரியாணி இஷ்டத்துக்கு அள்ளி உள்ளாறத் தள்ளினதோட பின் விளைவுதான் இது... அம்மா கஷாயம் வச்சு கொடுத்துச்சு.... ராவுக்குள்ள சூப்பரா ஆகிடுவேன்... நீ கவலைப்படாத.... சரி என்ன விஷயமா என்னை பார்க்க வந்த...”

“நாளைக்குள்ள சரியாகலைன்னா என்னோட டாக்டர்க்கிட்ட வர்ற சரியா....”

“அது பார்த்துக்கலாம்... நீ மொதல்ல விஷயத்தை சொல்லு....”

“டேய் நீ அன்னைக்கு ஒரு விஷயம் சொன்னியா... அது நிஜமாடா....”

“எந்த விஷயம்க்கா...”

“அதுதான் அந்த பொண்ணு மேட்டர்...”

“பொண்ணு மேட்டரா.... யக்காவ் இன்னா சொல்ற....”, ஜொள்ளு வடித்தபடியே கேட்டான் முத்து....

“டேய் ச்சீ... புத்தி போவுது பாரு... காலேஜ்ல அந்த பொண்ணை கொலை பண்ணும்போது பார்த்தேன்னு சொன்னியே.... அதைக் கேட்டேன்டா...”, அவன் தலையில் தட்டியபடியே கேட்டாள் சந்தியா...

“என்குலசாமி கருப்பண்ணன் மேல சத்தியமா நான் பாத்தேன்க்கா... அந்த பொண்ணை ரெண்டு பேர் சேர்ந்து கொன்னுட்டாங்க....”

“அது எப்படிடா.. அந்த பொண்ணு எதிர்ப்பே காட்டாம இருந்து இருக்கு.... ஏன்னா, அந்த ரூம் முழுக்க பெஞ்ச் லேப் பொருட்கள்ன்னு ரொம்பி இருக்கும்... இதுல அவ போராடி இருந்தா கண்டிப்பா ஏதாவது கீழே விழுந்தோ, இல்லை நகர்ந்தோ இருந்து இருக்கும்.... ஆனா அத்தன பொருளும் அப்படியேதான இருந்தது... அதே போல வெளிய ஒரு சின்ன சத்தம் கூட கேக்கலையே... எல்லாரும் நடந்து போகற வழி சின்ன சத்தமானும் கேட்டு இருக்கணுமே....”

“அந்த பொண்ணு உள்ளார நுழைஞ்சு பேச ஆரம்பிச்ச உடனேயே அந்த டாக்டர் கைல வச்சிருந்த மருந்தை ஊசி வழியா எத்திட்டார் அக்கா... உடனே அந்த பொண்ணு மயங்கிடுச்சு... அது மயங்கி கீழ விழற வரைக்கும் வெயிட் பண்ணிட்டு விழுந்த உடனே கைல வச்சிருந்த கத்தியை வச்சு அதோட நரம்பை கட் பண்ணிட்டாங்க... அப்பறம் அந்த கத்தியை அது பக்கத்துலையே போட்டுட்டு போய்ட்டாங்க... நானும் அவங்க கிளம்பின உடனே அந்த இடத்தை விட்டு போயிட்டேன்...”

“ஹ்ம்ம் உன்னை யாரும் பார்க்கலை இல்லை... நல்லாத் தெரியுமா...”

“நல்லாத் தெரியும்க்கா... நான் அங்க வரும்போது போகும்போது ரெண்டு டைம்முமே அந்த இடமே காலியா இருந்துச்சு...”

“ஹ்ம்ம் அவங்க வரும்போது யாரும் பார்க்க கூடாதுன்னு அந்த இடத்தை கிளியர் பண்ணி இருந்து இருக்கலாம்... நல்ல வேளை அந்த இடத்துல CCTV இல்லை... இல்லாட்டி நீ உள்ளார போனது தெரிஞ்சு இருக்கும்...”

“இத்தனை பண்ணினவங்க அதை off பண்ணி இருக்க மாட்டாங்களா அக்கா... கண்டிப்பா பண்ணி இருப்பாங்க....”

“நீ சொல்றதும் சரிதான்... அதை விடு... யார் அந்த கொலையை பண்ணினது...”

“கிட்ட வா சொல்றேன்...”,சந்தியாவை அருகில் அழைத்து அவளின் காதில் முத்து கொலை செய்தவர்களின் பெயரைக் கூற சந்தியா அதிர்ந்து பார்த்தாள்...

“மனோஜ் கொஞ்ச நாளா நீ சரியாவே இல்லை... அம்மா உன்னைப் பத்தி ரொம்ப கவலைப்படறா.... வீட்டுக்கும் சரியா வர மாட்டேங்கறியாம்... என்னாச்சுடா....”

“அப்படில்லாம் இல்லைப்பா... நான் நார்மலாத்தான் இருக்கேன்....”

“எங்க நார்மலா இருக்க... அந்த function முடிஞ்ச நாள்ல இருந்து நீ நீயாவே இல்லை... எதுக்கெடுத்தாலும் கோவம்.... டென்ஷன்... எல்லாரையும் பிடிச்சு கத்தறதுன்னுதான் சுத்திட்டு இருக்க....”

“எல்லாம் அந்த சக்தியாலப்பா... அவனை என்ன பண்றேன்னு பாருங்க... எங்கிட்ட மாட்டாமையா போவான்... அன்னைக்கு இருக்கு.... ஏம்ப்பா அந்த இன்ஸ்பெக்டர் என்ன சொன்னாரு... அவன் மேல எதுவும் ஆக்ஷன் எடுக்க முடியாதா....”

“இல்லைப்பா பொது நிகழ்ச்சிக்கு குந்தகம் விளைவிச்சான்னு வேணா போடலாம்... ஆனா அதை வச்சு கைதெல்லாம் பண்ண முடியாது.... பிரச்சனை எதுவும் பெரிசா வராததால ஜஸ்ட் வார்னிங் பண்ணிட்டு விட்டுடுவாங்கன்னு சொல்றாரு....”

“ச்சே அவன் மட்டும் அன்னைக்கு வரலைன்னா காயத்ரி இன்னைக்கு எனக்கு மனைவியா இருந்து இருப்பா....”

“விடு மனோஜ்... அந்த சாப்ட்டர் ஓவர்... இனி கொஞ்சம் பிசினஸ்ல முழு கவனம் செலுத்த ஆரம்பி.... அம்மா உனக்கு மறுபடி பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிருக்கா... ஒழுங்கா இருக்க பாரு....”, அவர் சொல்வதை அரைகுறையாக கேட்டு கொண்டிருந்தான் மனோஜ்... அவன் கவனமெல்லாம் சக்தியை எப்படி தூக்குவது என்பதிலேயே இருந்தது...  

தொடரும்

Episode # 20

Episode # 22

Go to Gayathri manthirathai story main page

{kunena_discuss:1216} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.