(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 19 - ஜெய்

Gayathri manthirathai

பூபாலும் அவன் தந்தையும் அறுவை சிகிச்சை நடக்கும் அறைக்குள் அழைத்து செல்லப்பட்டார்கள்... முதலில் பூபாலின் உடலிலிருந்து சிறுநீரகம் எடுக்கப்பட்டு பின் அது அவன் தந்தையின் உடலில் பொருத்துவதாக ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு தயார்நிலையில் இருந்தது....

மருத்துவ மனையின் தலைமை மருத்துவர், அறுவை சிகிச்சை செய்ய போகும் மருத்துவர், உதவி மருத்துவர், செவிலியர், மயக்க மருந்து நிபுணர் என்று கிட்டத்தட்ட ஒரு பதினைந்து பேர் அந்த அறையின் உள் இருந்தனர்...

“எல்லாம் தயாரா இருக்கு இல்லையா சிஸ்டர்... BP, sugar எல்லாம் ரெண்டு பேருக்கும் பார்த்துட்டீங்க இல்லை... நார்மல்தானே....”

“காலைல ஆறு மணிக்கு கடைசியா பார்க்கும்போது கரெக்ட்டா இருந்தது டாக்டர்.... ECG உள்பட எல்லா ரீடிங்கும் நார்மல்தான்....”

“குட்.... நாம ப்ரோசீட் பண்ண ஆரம்பிக்கலாமா டாக்டர்...”, அறுவை சிகிச்சை நிபுணர் மயக்க மருந்து நிபுணரிடம் கேட்டார்....

மயக்க மருந்து தருவதற்கு முன் இருவருக்கும் ரத்த அழுத்தம் பார்க்கப்பட்டது... அதில் இருவருக்குமே சற்று அதிக அளவில் ரத்த அழுத்தம் இருக்க மயக்க மருந்து நிபுணர் சற்று கவலையுடன் தலைமை மருத்துவரை  நோக்கினார்...

“பூபால் நல்லபடியா அறுவை சிகிச்சை நடக்கும்... அதனால எந்தவித மன உளைச்சலும் இல்லாம இருங்க.... ரெண்டு பேருமே நல்லபடியா திரும்பி சந்தோஷமான வாழ்க்கை வாழப்போறீங்க...”, மருத்துவர் கூற சிறிது நார்மல் ஆனான் பூபால்....

அடுத்த அரைமணியில் இருவரின் ரத்த அழுத்தமும் சாதாரண நிலையை அடைய மயக்க ஊசி போட மருத்துவர் பூபால் அருகில் வந்தார்.... முதலில் பூபாலுக்கும், அடுத்து அவனின் தந்தைக்கும் மயக்க மருந்து செலுத்தப்பட்டது.....

அடுத்த பத்து நொடிகளில் இருவரும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றனர்....

“வெல் டாக்டர்... ரெண்டு பேரும் மயங்கியாச்சு... இப்போ நாம நம்ம பேஷண்டை கூட்டிட்டு வரலாம்....”

“நீங்க சொன்னீங்கன்னுதான் இதை பண்ண நான் ஒத்துக்கிட்டேன் டாக்டர்... எந்த பிரச்சனையும் வராதே....”

“டாக்டர் எல்லாம் நம்ம கண்ட்ரோல்ல இருக்கு... எதுக்கு தேவையில்லாம பயப்படறீங்க... காதும் காதும் வச்சா மாதிரி எல்லாம் முடிஞ்சிடும்... கவைப்படாதீங்க....”

“பையன் டாக்டர்க்கு படிக்கிறான்... நாளைக்கு எப்படியானும் விஷயம் தெரிஞ்சுதுன்னா என்ன பண்றது டாக்டர்....”, அறுவை சிகிச்சை நிபுணர் தலைமை மருத்துவரிடம் கேட்டார்...

“இதுக்கு முன்னாடி அந்த சதீஷ் விஷயத்திலையும் இப்படித்தான் பயந்தீங்க... எதாச்சும் பிரச்சனை வந்துச்சா.... இல்லையில்ல... இதுலயும் எதுவும் வராது... நீங்க தைரியமா ஆரம்பிங்க....”

தலைமை மருத்துவர் கூற, பூபாலின் தந்தையை இன்னொரு அறைக்கு மாற்றிவிட்டு அவர் இருந்த இடத்திற்கு அந்த துபாய் ஷேக் மயக்கத்தில் கொண்டுவரப்பட்டார்....

தலைமை மருத்துவர் கத்தியுடன் பூபாலின் அருகில் நெருங்க, சரியாக அதே நேரத்தில் அவரின் முதுகில் துப்பாக்கி முனை அழுந்தியது... அவர் அதிர்ந்து நோக்கிய அதே வேளையில் தலைமை மருத்துவர், மயக்க மருந்து நிபுணர் இருவர் கைகளும் பின்னால் வளைக்கப்பட்டு விலங்கு மாட்டப்பட்டது....

க்தியும் சந்தோஷும் கல்லூரிக்குள் நுழைந்து லேபின் வழியாக நடந்து செல்ல, அவர்களுக்கு முன் ஒரு உருவம் பதுங்கியபடியே சென்று கொண்டிருந்தது...

“டேய் யாருடா அது... நமக்கு முன்னாடி ஸ்பை வேலை பார்க்க வந்திருக்கறது....”

“பதுங்கி பதுங்கி போறதை பார்த்தா ஸ்பை மாதிரி தெரியலை... ஏதோ திருட வந்தா மாதிரி தெரியுது....”

இருவரும் அந்த உருவத்தின் பின் மறைந்து மறைந்து சென்றார்கள்... இவர்கள் செல்ல உத்தேசித்திருந்த அறைக்கு அருகிலேயே அந்த உருவமும் சுற்றும் முற்றும் பார்த்தபடி சென்று நின்றது...

“டேய் என்னடா நம்ம போக நினைச்ச இடத்துக்கே அதுவும் வந்திருக்குது... யாராடா இருக்கும்....”

தன் கையிலிருந்த பொருளின் உதவியால் அந்தக் கதவின் பூட்டைத் திறந்து உள்நுழையும் முன் தன் தலையில் போர்த்தியிருந்த துணி ஒரு நிமிடம் விலக இவர்களால் அந்த முகத்தை நிலவின் ஒளியில் பார்க்க முடிந்தது...

“டேய் இது அது இல்லை...”, சக்தி கேட்க சந்தோஷ் பரிதாபமாக தலையை ஆட்டினான்....

“இவ எங்கடா இங்க வந்தா....”

“தெரியலையே... நீ எதாச்சும் இங்க வர்றேன்னு அவக்கிட்ட சொன்னியா... உனக்கு இந்த சனியனை தூக்கி பனியன்ல விடறதே வேலையா போச்சு....”

“நான் எங்கடா விட்டேன்.... அதுவே unwanted வருதுடா.... இந்த ஏழரை சனி, அஷ்டமத்து சனிலாம் நாம கூபிடாமையே வருமே... அது மாதிரி....”, சொல்லிவிட்டு திடீரென்று சக்தி சிரிக்க ஆரம்பித்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.