(Reading time: 7 - 14 minutes)

“எதுக்குடா இப்போ கேனை மாதிரி திடீர்ன்னு சிரிக்கற....”

“இல்லைடா எனக்கானும் இது ஏழரை சனிதான்... ஆனா உனக்கு ஜென்ம சனிடா....”

“ரொம்ப முக்கியம்.... கொஞ்சமானும் பயம் இருக்கான்னு பாருடா... என்ன தெனாவட்டா தனியா வந்திருக்கா....”

“டேய் மெதுவா பேசுடா... அவ காதுல நாம பேசறது விழுந்துது நமக்கு சங்குதான்....”

“அதுவும் சரிதான்... இங்க பார் இப்பவே சொல்லிட்டேன்... நானும் சனியனைப் பத்தி பேசலை... நீயும் அதுக்கு பதில் கொடுக்கலை... அவக்கிட்ட எதுனா பத்த வச்ச அப்பறம் இந்த சந்தோஷோட இன்னொரு முகத்தை பார்ப்ப...”

“ஹா ஹா ஹா... அதை கேட்டபிறகு உனக்கு கண்டிப்பாவே வேற மூஞ்சிதாண்டா இருக்கும்... அவளோட கைத்திறமை அப்படி...”

சக்தியும், சந்தோஷும் பேசியபடியே அந்த உருவம் கதவடைக்கும் முன் உள்  நுழைந்தார்கள்...

முதலில் யாரோ என்று பயந்த சந்தியா, இவர்கள் இருவரும் என்று தெரிந்தவுடன் சற்று ஆசுவாசமானாள்...

“எங்க ரெண்டு பேரும் இம்புட்டு தூரம்....”

“ஹ்ம்ம் சினிமா பார்த்துட்டு போலாம்ன்னு வந்தோம்....”

“காமெடி, நாளைக்கு சிரிக்கிறேன்... இப்போ விஷயத்தை சொல்லுங்க...”

“எங்களை கேக்கறியே நீ எதுக்கு வந்த...”

“இங்க பிரியாணி நல்லா இருக்குமாம்.. அதுதான் ரெண்டு ப்ளேட் சாப்பிட்டு போலாம்ன்னு வந்தேன்....”

சந்தியா சொல்ல, சக்தி “இந்த மொக்கைக்கு நாங்க அடுத்த வாரம்கூட சிரிக்க முடியாது போல இருக்கே...”,கவுன்ட்டர் கொடுக்க...

“டேய் சும்மா இருடா... கங்கா சந்திரமுகியா மாறிடுவா...”,சந்தோஷ் சக்தி காதில் மெதுவாக ஓதினான்....

“என்ன அங்க குசு குசுன்னு பேச்சு....”

“இல்லடா சந்தியா குட்டி...  நீ எங்களோட இருக்கறது எனக்கு எத்தனை சந்தோஷமா இருக்குன்னு சொன்னேன்டா...”

“Mr Professor நாம இப்போ காலேஜ் காம்பஸ்க்குள்ள இருக்கிறோம்... இங்க நீங்க டீச்சர்... நான் ஸ்டுடென்ட்... அதனால அதுக்கேத்த மாதிரி பேசுங்க....”

“அப்படிங்களா Ms சந்தியா... அப்போ நான் டீச்சர் சொல்றேன்... உடனடியா இந்த இடத்தை விட்டு காலி பண்ணுங்க...”

“சாரி இது உங்க பீரியட் இல்லை.... அதனால நீங்க சொல்றதை கேக்க முடியாது....”

“ஹா ஹா ஹா... தொப்பி... தொப்பி....”, சக்தி சிரிக்க, சந்தோஷ் அவன் தலையில் குட்டினான்...

“ஏய் ரெண்டு பெரும் விளையாட்டை நிறுத்துங்க... நாம வந்த வேலையைப் பார்க்கலாம்... நீங்க எதை கண்டுபிடிக்க வந்தீங்க...”

“தற்கொலை பண்ணின பெண்ணோட மரணம் தொடர்பா இங்க ஏதாவது துப்பு கிடைக்கலாம்ன்னு வந்தோம்...”, சக்தி சொல்ல சந்தியா சந்தோஷை பார்த்தாள்...

“நேத்து காலேஜ் கம்ப்யூட்டர்ல நோண்டிட்டு இருந்தபோது சந்தேகப்படற மாதிரி சில டாகுமென்ட்ஸ் கிடைச்சுது... அப்போ அதை எடுக்க முடியலை... அதுதான் இப்போ எடுக்கலாம்ன்னு வந்தோம்.... நீ எதுக்கு கண்ணம்மா இப்படி தனியா வந்த... எப்பவும் இப்படி ரிஸ்க் எடுக்கறதே உனக்கு வேலையா போச்சு... என்கிட்டே சொல்லி இருக்கலாம் இல்லை....”

“இல்லை சந்தோஷ்... உங்ககிட்ட சொன்ன என்னை போகவேண்டாம் நானே பார்க்கிறேன்னு சொல்லுவீங்க... அதுதான் சொல்லலை...”

“டேய் ரெண்டு பேரும் கொஞ்சறதை நிறுத்துங்கடா... வந்த வேலையை பார்ப்போம்... ஏய் சங்கி மங்கி எதுக்குடி வந்த...”

“டேய் என் டாலுவை ஏண்டா வம்புக்கு இழுக்கற... முகத்தை பேர்த்துடுவேன் பார்த்துக்கோ....”

“ஹா மிரட்டல்... பயந்துட்டேன் போ...”

“ரெண்டு பெரும் நிறுத்துங்க... சக்தி இந்த காலேஜ்ல நடக்காத தில்லு முல்லே இல்லை... அத்தனை அராஜகமும் நடக்குது... சந்தோஷ் சொன்னது சரிதான்... அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்கலை... கொலைதான் பண்ணி இருக்காங்க.... அதை நேர்ல பார்த்த சாட்சி என்கிட்டே மாட்டி இருக்கு... யாருன்னு அப்பறம் சொல்றேன்... அதுக்கு முன்ன உங்களுக்கு பயங்கர அதிர்ச்சி தர மாதிரி ஒரு விஷயம் காட்டப்போறேன்... வாங்க....”

இருவரையும் அழைத்துக்கொண்டு அந்த அறையின் கோடிக்கு சென்று, அங்கிருந்த சுவற்றில் ஒரு இடத்தில் கைவைக்க அந்த சுவர் மெதுவாக விலகி ஒரு சுரங்கம் போன்ற அமைப்பை காட்டியது... அதன் வழியாக நடந்து செல்ல செல்ல அவர்கள் இருக்கும் இடத்தின் வெப்பநிலை குறைந்து கொண்டே வர ஆரம்பித்தது... அந்த இடத்தின் முடிவில் இருந்த அறை  நோக்கி பார்த்தவர்களின் கண்கள் நிலை குத்தி நின்றன....  

தொடரும்

Episode # 18

Episode # 20

Go to Gayathri manthirathai story main page

{kunena_discuss:1216} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.