Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ராணி... மகாராணி... - 08 - ராசு - 5.0 out of 5 based on 2 votes
Change font size:
Pin It

தொடர்கதை - ராணி... மகாராணி... - 08 - ராசு

queen

னக்கு என்ன நேரப்போகிறது என்பதை அறியாமல் தன் காதலனின் வருகைக்காக காத்திருந்தாள் மோனி.

"ஹே டியர். அப்படி என்ன ஆழ்ந்த சிந்தனை?"

"நம்ம கல்யாணத்தைப் பற்றித்தான்."

வெட்கத்துடன் சொன்னாள்.

"அதுக்குள்ள என்ன அவசரம்? நமக்கு என்ன அதுக்குள்ள வயசாச்சா என்ன?"

மெல்ல அவள் கன்னத்தை தட்டியவாறே கேட்டான் அவளது காதலன் .

"என்ன அவசரமா? நான்தான் என் அம்மாவோட குடும்பத்தைப் பற்றிச் சொன்னேன்ல. நான் இங்கே வந்ததற்கு காரணமே அந்தக் குடும்பம்தானே? அப்புறம் கல்யாண வயசு வந்துருச்சு."

"நான் முதல்ல செட்டிலாகனும். அதன் பிறகு நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாம்னு நினைச்சேன்."

"நீதான் நல்ல நல்ல பிராஜக்ட் ஐடியா எல்லாம் வச்சிருக்கியே. நான் எங்கப்பாக்கிட்ட பேசி உனக்கு லோன் கிடைக்க ஏற்பாடு பண்றேன்."

"என்னை உங்கப்பா ஏத்துக்குவாரா? எனக்கு என்ன தகுதி இருக்கு?"

"ஏன் மாட்டார்? நீ உங்கப்பாவோட காசை எதிர்பார்க்காமல் உன் சொந்தக் காலில் நிற்க ஆசைப்படறே. அந்த தகுதி பத்தாதா? உங்கப்பா எத்தனை பெரிய ஆளு? அவர் சொன்னால் உனக்கு உடனே லோன் கிடைக்கும். ஆனால் அவர் உதவியைக் கூட நீ ஏத்துக்காமல் உன்னோட சொந்த முயற்சியில் முன்னேறனும்னு நினைக்கிறே."

அவனைப் பெருமையுடன் பார்த்தாள்.

"நீ என்னை ரொம்பப் புகழறே."

அவன் தன்னடக்கத்துடன் சொல்ல அவனைக் காதலனுடன் பார்த்தாள் மோனி.

"நாம நாளைக்கு ஊருக்குப் போகலாமா? உடனே அப்பாக்கிட்ட நம்ம கல்யாணத்தைப் பத்திப் பேசி சம்மதம் வாங்கனும். அவங்கெ முகத்தில் கரியைப் பூசனும்."

"இந்த அளவுக்கு அவங்களுக்கு முக்கியத்துவம் தரனுமா டார்லிங். அவங்களை அப்படியே விட்டிரலாம்."

"அதெப்படி விட முடியும்? என்னை யார்னு நினைச்சாங்க? நான் மோனியாக்கும்."

அவள் சொல்ல அவன் சிரித்தான்.

"சரி வா சாப்பிடப் போகலாம்."

அவளது இடையில் கை போட்டவாறே அவளை அழைத்துச் சென்றான்.

அவள் அவனை செல்லக் கோபத்துடன் முறைத்தாள்.

"இல்லடா செல்லம். அவங்களை எல்லாம் பார்த்தியா? அவங்களை எல்லாம் பார்க்கும்போது நான் இது கூட செய்யக்கூடாதா? குளிருதுடா-"

அவன் பாவமாகச் சொன்னான்.

"சரி சரி பொழைச்சுப் போ."

என்று பெரிய மனதுடன் அனுமதி கொடுத்தாள்.

இருவரும் சிரித்துக் கொண்டே உணவருந்த சென்றனர்.

வீடு கலகலவென்று இருந்தது.

மூத்த மருமகள்கள் இரண்டு பேரின் வீட்டிலிருந்தும் பொங்கல் வரிசை கொண்டு வந்திருந்தனர்.

அவர்களுக்கு  விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.

வந்தவர்கள் அனைவரும் ஏற்கனவே மகாராணியை வந்து பார்த்து சென்றிருந்ததால் அவளுக்கும் அவர்ளோடு பேசுவது ஒன்றும் சிரமமாக இல்லை.

சிறியவர்கள் எல்லாரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

சௌந்தர்யாவுக்கு நிச்சயம் செய்திருந்த மாப்பிள்ளை வீட்டினரும் வந்திருந்தனர்.

அதனால் கலகலப்பிற்கு பஞ்சமேயில்லை.

அத்தைக்கு வரிசை கொடுக்கும் சாக்கில் தன் மனைவியைக் காண சிவா வந்திருந்தான்.

சௌந்தர்யாவிற்கு நிச்சயம் செய்திருந்த மாப்பிள்ளை கார்த்திக் வந்திருந்தான். அதனால் மற்ற இளையவர்கள் அவர்களை கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

கார்த்திக் ராஜன் பாபுவின் நண்பன். அவர்கள் கோயம்புத்தூர் என்றதும் அவளுக்கு ஆச்சர்யம்.

எப்படி அவர்கள் நண்பர்களாயிருக்க முடியும்? ஒருவேளை இப்போதெல்லாம் பேஸ்புக் என்கிறார்களே. அந்த வகையில் நட்பா? அதுவும் தனது தங்கையைத் திருமணம் செய்து கொடுக்கும் அளவிற்கு?

அவளது சந்தேகத்தைக் கேட்ட கார்த்திக் சிரித்தான்.

"என்னம்மா? உனக்கு பாபுவைப் பத்தி ஒன்றுமே தெரியாதா? அவன் படிக்கும்போது நம்ம வீட்டில் தான் தங்கியிருந்தான்."

"அப்படியா? அப்படி  என்ன படித்தார்?"

அவள் கேட்டதும் அவன் ஆச்சர்யமாகப் பார்த்தான்.

"அவன் எதுவுமே உன்கிட்ட சொல்லலையா?"

அவள் பேசாமலிருந்தாள்.

"அவன் அக்ரியில் பட்டம் வாங்கியவன்மா. அவன் விவசாயக் கல்லூரியில் படித்த போது ஹாஸ்டலில் தங்கவில்லை. அவன் தன் நண்பர்களோடு வீடு பார்த்து தங்க விரும்பினான். அப்படிதான் நம்ம வீட்டில் வந்து வாடகைக்குத் தங்கினான். நான் வீட்டுக்கு ஒத்தப்பிள்ளை.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

RaSu

Like RaSu's stories? Now you can read RaSu's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - ராணி... மகாராணி... - 08 - ராசுsaaru 2019-06-24 06:26
2to8 just Ra pannen konjam busy so late baby family very cute
Moni emarapora
Wt next
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ராணி... மகாராணி... - 08 - ராசுAdharv 2019-06-17 21:52
Acho ena panaporinga Rasu ma'am :Q: Ninga eppadi yavdhu avangalukku help pananum :yes: :yes: :yes:

:hatsoff: to this lovely family and loved their bonding. Unga series la festival nala oru thani spl than ma'am adhula ippadi oru big family oda celebration double jolly :yes: waiting to see what happens next.
Thank you for this interesting update :clap: :clap: keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ராணி... மகாராணி... - 08 - ராசுrspreethi 2019-06-17 21:20
Nice update... Wonderful joint family... Moni Ku yenna aaga pogudho... Orea thinking... :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ராணி... மகாராணி... - 08 - ராசுmadhumathi9 2019-06-17 18:06
Oh my god :clap: :Q: .yaaraavathu vanthu sariyaana neraththil kaappaatruvaargal? Koottu kudumbam endraal eppadi irukka vendum enbarharkku intha kudumbam oru eduththu kaattu.nice epi.vaaltugal. (y) :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ராணி... மகாராணி... - 08 - ராசுதீபக் 2019-06-17 17:52
Super episode sis :clap: . Pls try to give little bit big episode sis (y) . Waiting for next episode
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top